வியாழன், 5 செப்டம்பர், 2024

சிக்கன் கேப்சிகம் கிரேவி (Chicken Capsicum Gravy)?

சிக்கன் கேப்சிகம் கிரேவி (Chicken Capsicum Gravy)?

தேவையானவை:

சோம்புத்தூள் 2 மேசைக்கரண்டி

சீரகத்தூள் - சிறிது கருவா - ஒரு துண்டு

சிக்கன் - 1/4 கிலோ குடமிளகாய் - 5 ஏலம் - 2 எண்ணெய் - தாளிப்புக்கு கொத்தமல்லி இலை - சிறிது தக்காளி - 3 உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - கால் பாதி(பெரியது)

கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- தேவையான அளவு

வத்தல் தூள் - 3 மேசைக்கரண்டி

இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. முதலில் கறியை சுத்தம் செய்து அதில் உப்பு,மஞ்சள் தூள், 1/2 மேசைக்கரண்டி வத்தல் தூள்,1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 1/2 மேசைக்கரண்டி சோம்புத்தூள், சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் குடமிளகாயை நறுக்கவும்.

2. இப்பொழுது ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவா,ஏலம் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.பின் நறுக்கிவைத்த குடமிளகாயை போட்டு வதங்கிய பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் மீதி உள்ள எல்லாதூளையும் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் பிரட்டிவைத்த கறிகலவையை போட்டு வதக்கவும்.இதனுடன் தண்ணீர் தெளித்து மூடிபோட்டு நன்கு வேகவிடவும். கறி நன்கு வெந்து கிரேவி போல் ஆனதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Previous Post
Next Post

0 Comments: