திங்கள், 16 அக்டோபர், 2023

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.

 ஆலயம் அறிவோம் 🙏

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.*


*மூலவர்:*

காளியம்மன்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

பையூர் பிள்ளைவயல்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி விழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.*

*தல சிறப்பு:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில்,பிள்ளைவயல், பையூர்,சிவகங்கை மாவட்டம்.*

*பொது தகவல்:*

*முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர்வாரும் போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.*

*தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*கோயில் வயல்வெளியில் இருப்பதாலும் இந்த அம்மனுக்கு, "பிள்ளைவயல் காளியம்மன்,' என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*இக்கோயிலின் சிறப்பே குழந்தை பாக்கியம் தருவதுதான்.*

*திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, திருமணம் தடைபடும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் சென்று, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.*

*தலபெருமை:*

*அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள்.*

*முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள்.*

*தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி.*

*தல வரலாறு:*

*500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன்.*

*பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர். முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம், பையூர் பிள்ளைவயல் கிராமம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

சிவகங்கை

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

*அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா, கர்நாடகா*

*திருவிழா*     கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.  

*தல சிறப்பு*   முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

*பொது தகவல்*

சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. 

காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. 

நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.  

*பிரார்த்தனை*

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். 

பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

*நேர்த்திக்கடன்*

சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.  

*தலபெருமை*

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.

இது பல யுகம் கண்ட கோயிலாகும்.

கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை.

முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். 

ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.  

*தல வரலாறு*

காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.

வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.

சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. 

இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.

இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.  

*அதிசயத்தின் அடிப்படையில்* : முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இன்றைய கோபுர தரிசனம்

*கோபுர தரிசனம் கோடி புண்ணியமே..*

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*ஈரோடு மாவட்டம்.*
*தமிழ்நாடு.*
*கதித்தமலை.*
*வெற்றி வேலாயுத சுவாமி ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*வெற்றிவேலாயுதசுவாமி*

*மூலவர் : வெற்றி வேலாயுதன்*

*உற்சவர் : -*

*அம்மன்/தாயார் : தனி கோயிலில் வள்ளி, தெய்வானை*

*தல விருட்சம் : -*

*தீர்த்தம் : முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது.*

*ஆகமம்/பூஜை : -*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : -*

*ஊர் : கதித்த மலை*

*மாவட்டம் : ஈரோடு*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள்: அருணகிரிநாதர்.*

திருவிழா

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி 

தல சிறப்பு

வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். 

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 

முகவரி

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி-638 751,ஈரோடு மாவட்டம். 

போன்

+91- 4294-262 052-54 

பொது தகவல்

கோயில் அமைப்பு

குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.

முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள். வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள். 

பிரார்த்தனை

திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 

நேர்த்திக்கடன்

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 

தலபெருமை

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது.

மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

தல வரலாறு

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென்றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் "ஊத்துக்குளி' என அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்
வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர்.

அமைவிடம்

திருப்பூரில் இருந்து (15 கி.மீ)ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பஸ்களில் சென்றால், கதித்த மலை முருகன் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்

ஊத்துக்குளி,திருப்பூர்.

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

தங்கும் வசதி

திருப்பூர்