செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தமிழ் ஒருதலை காதல் கவிதைகள்

தமிழ் ஒருதலை காதல் கவிதைகள்
ORU THALAI KADHAL KAVITHAIGAL IN TAMIL


இந்த தொகுப்பு “தமிழ் ஒருதலை காதல் கவிதைகள் – oru thalai kadhal kavithaigal in tamil” உள்ளடக்கியுள்ளது.

தமிழ் ஒரு தலை காதல் கவிதைகள் வரிகள்
ஒருதலைக் காதல் கவிதைகள்
ஒருதலை காதல் கவிதை
Oru Thalai Kadhal Kavithaigal in Tamil
Oru Thalai Kadhal Kavithai
தமிழ் ஒருதலை காதல் கவிதைகள் (Oru Thalai Kadhal Kavithaigal in Tamil)

ஒற்றைப் பூவை கையில் ஏந்தி..
ஓர் அடி முன் சென்று.. ஓரிரு
வார்த்தைகள் பேசி முடிப்பதற்குள்..
ஓராயிரம் முறை செத்து
பிழைக்கிறேன்..
ஒரு தலைக் காதலால்..!

உன்னையே ஒரு உறவு
சுற்றி சுற்றி வருகிறது என்றால்..
அது போவதற்கு வேறு
இடமில்லாமல் இல்லை..
உன்னை இழக்க
மனமில்லாமல் தான்..!

இன்று நீ என்னை
புரிந்து கொள்ளவில்லை..
நாளை நீ என்னை புரிந்து
கொள்ளும் போது நான்
இல்லாமல் போகலாம்..!

ஒரு தலை தான் என் காதல்..
ஒரு உயிர் தான் என் ராகம்..
உன் மனம் தான் என் உறுதி..
உன்னிடம் தான் என் இறுதி..!

வாழ்க்கையில் சிலரை
மறக்க முடியாது.. சிலரை
பிரிய முடியாது.. மறக்காமல்
நீ இருந்தால் பிரியாமல்
நான் இருப்பேன்..!

நிம்மதியற்று திரிவேன் என்று
தெரிந்திருந்தால்.. உன்னை
திரும்பிக் கூட
பாத்திருக்க மாட்டேன்..!


இந்த உலகில் ஒவ்வொருவரும்
யாரோ ஒருவருக்கு
அடிமையாக இருக்கிறார்கள்..
“நானும் அடிமை தான்”
என்னவளின் அழகிற்கு..!

நாட்கள் நகரும் போது
ஆயுட்காலம் குறையலாம்..
ஆனால்.. எனக்கு உன் மீது
உள்ள காதல் ஒரு போதும்
குறையாது..!

ஒரு உண்மைக் காதலை
கிடைக்கும் பொழுது
தவறவிட்டால்..
தேடும் போது கிடைக்காது..!

நடுக்கடலில் கப்பல் தான்
கவிழும் என நினைத்துக்
கொண்டிருந்தேன்.. உன்னைப்
பார்த்த பிறகு நானும்
கவிழ்ந்தேன்.. கடலில் அல்ல..
உன் அழகில்..!

உன் பார்வையில் தொலைந்தது
நான் மட்டுமல்ல.. என்
கோபங்களும் தான்..!


தூரத்தில் நீ இருந்தாலும்..
என் பார்வை உன்னைத்
துரதிக் கொண்டே தான்
இருக்கும்.. என் இதயத்தின்
துடிப்பு நிற்கும் வரை..!

சிலரை பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது.. சிலரை
பிடிக்கும் என்றாலும் நெருங்கிட
முடியாது.. புரிதல் ஒன்றே
அன்பை உணர்த்தும்..!

நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்..
என்னால் பேச முடியாமல்
இருந்தாலும்.. என்றும் நான்
உன் மீது கொண்ட
காதல் மாறாது..!

உன் நினைவு எழும்
போதெல்லாம் அழிக்க முயல்கிறேன்..
நினைப்பதும்.. அழிப்பதும்..
மட்டுமே வாழ்க்கை
ஆகிவிட்டது எனக்கு..!

எவ்வளவு தான் மனது
காயப்பட்டாலும் நாம் நேசித்த
ஒரு இதயத்தை மட்டும் என்றுமே
நம்மால் மறக்கவும் முடியாது..
வெறுக்கவும் முடியாது.. அது தான்
உண்மையான காதல்..!

உன்னை நினைக்க நினைக்க தான்
உன் மீது வைத்துள்ள என் காதல்
எவ்வளவு சுகமானது
என்று புரிகின்றது..!

நீ பார்த்த பார்வையில்
பற்றிக் கொண்ட நெருப்பு நான்
அணையாமல் எரிந்து கொண்டே
இருப்பேன் திரும்பி வந்து
நீ அணைக்கும் வரை..!


மேலும் படிக்க..

கனவு காதலி காதல் கவிதைகள்

கனவு காதலி காதல் கவிதைகள்
KANAVU KADHAL KAVITHAIGAL


இந்த தொகுப்பு “கனவு காதலி காதல் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

கனவு காதல் கவிதைகள்
கனவு காதலி கவிதை
காதல் கனவு கவிதைகள்
Kanavu Kadhal Kavithaigal
கனவு காதலி காதல் கவிதைகள் வரிகள்

கனவு இல்லையென்றால்
நான் எப்போதே இறந்திருப்பேன்..
நான் உன்னோடு வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே..!

கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது..
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு
என்றும் வாழ்வதால்..!

என் காதல் கனவு கலையாமல்
இருக்க.. என் நினைவுகளை
தினமும் கலைத்துக்
கொண்டிருக்கிறேன்..!

உறக்கத்தை மறந்து கனவு
காண்பதும்.. கனவில் கண்டதை
உறங்காமல் தவிப்பதும் காதல்..!

நீ என் அருகில் இல்லை என்பது
நிஜம் தான்.. ஆனால் என்
கனவுகளிலும் நினைவுகளிலும்
நீ மட்டும் தான்..!

ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
பிறந்திருக்கிறது.. உன்னை
நினைப்பதிலேயே அந்த
நொடிகளும் கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு..!


எல்லோரும் என்னை கடந்து
சென்றுவிட்டார்கள்.. உனக்காக
நான் மட்டும் காத்திருக்கிறேன்..!

உன்னுடன் வாழும் கனவு
வாழ்க்கையை நிஜமாக்கி
கொடுத்து விடு என்னிடம்..
இல்லையென்றால் கனவோடு
நானும் கலைந்து போவேன்
காற்றில்..!

காதல் என்பது கோலம் போன்றது..
ஒரு புள்ளி தவறினாலும் கோலம்
தவறாகி விடும்.. அது போல
உன்னிடம் இருந்து வரும்..
“நீ என்னை மறந்து விடு”
என்ற வார்த்தை நம் காதலை
பிரித்து விடும்..!

காதலும் கனவும் ஒரே
மாதிரி தான்.. சிலருக்கு பலிக்கும்..
சிலருக்கு கலைந்து விடும்..!

காதல் என்றால் கட்டியணைப்பேன்..
கவிதை என்றால்
கற்றுக்கொடுப்பேன்..
கனவு என்றால்
தூங்க வைப்பேன்..!


காலம் கடந்து போகும் கனவுகள்
விலகிப் போகும் வலிகள்
விழியில் நிறைந்தே போகும்..!

என் கனவுகளை உன்னிடம்
தருகிறேன்.. நீ காதலாக
மாற்றி எனக்கு தா..!

என்ன தான் உன் கனவு
தேசத்தில் நான் உன்
அடிமையாக இருந்தாலும்..
என் கனவு தேசத்தில்
உனதடிமை ஆகி விடுகிறேன்..!

காதல் கவிதை எழுத காதலி
தேவையில்லை.. கனவு
காதலியே போதும்..!

கட்டியணைக்க கனநொடியும்
காத்திருக்கிறேன்.. கண்முன்
வருவாயா..? காதலியே..
கரமொன்றை கரை தாண்டி
நீட்டிவிடு கண்மணியே..!

முதல் நாள் எப்படி காதலித்தாயோ..
அதே அளவு காதல் வேண்டும்..
என் இறுதி நாள் வரை தருவாயா..?

பேசாமல் இருப்பதால் என்
பிரியம் குறைந்து விட்டது என்று
நினைத்துவிடாதே.. வெளியில்
நான் அப்படி இருந்தாலும் என்
நினைவு கனவெல்லாம் என்றும்
நீ மட்டும் தான் இருக்கிறாய்..!


உன்னோடு வாழ்வதை யாரும்
தடுக்கலாம்.. உன் நினைவோடு
கனவினில் வாழ்வதை யாராலும்
தடுக்க முடியாது..!

இரவில் தோன்றி பகலில்
மறையும் வெண்ணிலவு அல்ல நீ..
என் காதல் கனவில் தோன்றி
கண்ணிமைக்காமல் தொடரும்
காதல் நிலவு..!

சோகம் தனிமை தேடும்..
தனிமை நினைவை தேடும்..
நினைவு கனவைத் தேடும்..
கனவு உன்னைத் தேடும்..!

ஒரு விழி உனது.. ஒரு விழி எனது..
நம் இரு விழிகளில் காணும்
ஒற்றை கனவு
நம் காதல் மட்டுமே..!

மேலும் படியுங்கள்..

மனதை தொடும் காதல் கவிதைகள் வரிகள்

மனதை தொடும் காதல் கவிதைகள் வரிகள்

சிறிது கை தவறினாலே
கையில் உள்ள பொருள்
உடைந்து விடும் என்று
தெரிந்த பலருக்கு சொல்
தவறினால் பல உறவுகளின்
மனம் நொருங்கி விடும்
என்று சிந்திப்பதில்லை.

நம் மனதிற்கு எந்த
காரணமும் தேவையும்
இன்றி ஒரு சிலரை
அதிகமாக பிடித்து
விடுகிறது. ஆனால்
அந்த உறவுகளுக்கு
நாம் எவ்வளவு தான்
காத்திருந்தாலும்

அவர்களுக்கு நம் அன்பும்
அரவணைப்பும்
புரிவதுமில்லை நம்மை
பிடிப்பதுமில்லை.

நமக்கு வலி தருகிறார்கள்
என தெரிந்தும் அவர்களை
உயிரிற்கும் மேலாக
தாங்குவது தான்
உண்மையான
காதலின் புனிதம்.

என்ன தான் மாற்றங்கள்
வந்தாலும் உண்மையான
அன்பு மாறாது அப்படி
மாற்றங்களை கண்டு
மாறுமானால் அது
உண்மையான
அன்பு கிடையாது.

உண்மையாக நேசிக்கும்
அன்புக்கு காலங்கள்
செல்ல செல்ல தான்
அதன் பிணைப்பும்
தூய்மையும் இறுக்கமாகி
கொண்டே செல்லும்.

பல நேரங்களில் நம்மை
விட்டு பல தூரத்தில்
நாம் நேசிக்கும் அன்பு
இருந்தாலும் நம்
நினைவுகளால் நம்
மனதில் எப்போதும
நம் கூடவே இருக்கும்
உணர்வு இருக்கும்.


தேவைதை போல ஒரு
வாழ்கை துணை நமக்கு
கிடைக்க வேண்டும் என்று
நம் அனைவருக்கும் ஆசை
இருக்கும். ஆனால்
கிடைக்கும் துணையை
தேவதைக்கு மேலாக
பார்த்து கொள்பவன் தான்
சிறந்த கணவன்.

தற்போது அனைத்தின்
மதிப்பும் பணத்தால் தான்
அளவிடப்படுகின்றது
பாசத்தின் மதிப்பும்
பணத்தால் அளவீடு
செய்யப்பட்டால்
வாழ்க்கை
நரகமாக மாறிடும்.

சண்டை போடாமல்
சகித்து செல்லும்
உறவை விட எவ்வளவு
தான் சண்டைகளும்
சச்சரவுகளும் வந்தாலும்
பிரியாமல் இணைந்து
இருக்கும் உறவு தான்
பலமானது.

யார் மனதையும் நாம்
தெரியாமல் கூட
காயப்படுத்தி விட கூடாது.
என நினைத்து வாழ்ந்தால்
நம்மை மற்றவர்கள்
இலகுவாக காயப்படுத்தி
விடுவார்கள்.

நமக்கு பிடித்த உறவு
நம் அருகில் இல்லை
என்றால் கண்களில்
தூக்கம் வராது மனதிற்கு
நிம்மதி கிடைக்காது
வாழ்க்கையும்
சந்தோசமாக அமையாது.


சுற்றும் பூமியும் நீ தரும்
அன்பும் ஒன்று தான்
இரண்டும் எப்போதும்
நிற்பதில்லை.


தமிழ் காதல் வரிகள்

தமிழ் காதல் வரிகள்


தமிழ் காதல் வரிகள் காதலின் உணர்வை நம் மனதில் நினைவுகளாக மீட்டு தரும் இந்த தமிழ் காதல் வரிகள் இதயத்திற்கு காதலடுடன் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்.

காதலில் விழ வார்த்தைகளோ
செயல்களோ அவசியம்
இல்லை ஒரு சிறு கண்
அசைவு மட்டும் போதும்
காதல் வலையில்
விழுந்து விட.

நம் மனதிற்கு பிடித்தவரை
இறுக கட்டி அணைக்கும்
போது நம் மனதில் இருக்கும்
துன்பங்கள் எல்லாம்
காற்றோடு காற்றாக
பறந்து விடும்.

பறவை போல பறக்க
எனக்கு சிறகு இல்லை
என்றாலும் பருந்து
போல உயர பறந்து
கொண்டு தான்
இருக்கின்றேன் நீ
என் அருகில்
இருக்கும் போது.

இந்த என் வாழ்க்கையின்
ஆரம்பத்திலே நீ எனக்கு
கிடைத்து இருப்பாய்
என்றால் நான் பலரின்
போலி அன்பிற்காகவும்
துரோகத்திற்காகவும்
ஏமாறாமல் இருந்து
இருப்பேன்.

அன்பே உன்னை
நரகத்திற்கு அனுப்ப
வேண்டும் ஏன் தெரியுமா
நரகத்தையும் சொர்க்கமாக
மாற்ற உன்னால் மட்டும்
தான் முடியும்

என் இருள் நிறைந்த
அர்த்தமற்ற
வாழ்க்கையில் ஒளி ஏற்றி
அர்த்தம் கொடுத்த
தேவதை நீ.


தான் நேசித்த பெண்
தன்னை விட்டு பிரிந்த
பின்பும் அந்த பெண்ணை
பற்றி தவறாக ஒரு
வார்த்தை கூட பேசாதவன்
தான் உண்மையான ஆண்
என்ற சொல்லிற்கு அர்த்தம்
உடையவன்.

தன்னை அறியாமல்
துடித்துக் கொண்டு
இருக்கும் இதயத்திற்கு
தெரியவில்லை அது
துடிப்பதற்கான கரணம்
நீ மட்டும் தான் என்று.

மீன்களை சிக்க வைக்க
தான் தூண்டில் போடுவார்கள்
ஆனால் உன் விழி மீன்களில்
சிக்கி விட்டு வெளியே வர
முடியாமல் தவிக்கின்றேன்
நானடி.

வாழ்கை ஒரு முறை தான்
வருகின்றது அதில் உன்
நினைவுகள் மட்டும் பல
முறை நொடிக்கு நொடி
வருகிறது.

அவள் என்னை கண்டு
கொள்ளாமல் போனாலும்
திமிராக போகின்ற அழகை
என்னை அறியாமலே மெய்
மறந்து ரசிக்கிறது
என் இதயம்.


அன்பே கடலும் உன்
நினைப்பில் துடிக்கும்
அங்கே நீ காலடி எடுத்து
வைத்தால் என் நாடி
துடித்து கொண்டு
இருக்கிறது உன்
நினைப்பில்.

அடிமை போல அடைப்பட்டு
வெளிய வர முடியாமல்
இருக்கின்றேன் உன்
அன்பில் வெளியே வர
விரும்ப மறுக்கின்றது
என் மனது.

நரகம் கூட சொர்க்கமாக
தெரியும் அங்கும்
உன்னை போல உண்மையான
காதல் காற்று வீசும்
என்றால்.

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil


இந்த பதிவில் தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil, காதல் கவிதை மற்றும் காதல் கவிதைகள் போன்றவற்றை பார்க்கலாம்.

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil

உனக்கான என்னுடைய
காத்திருப்பு என்றுமே
தொடர்ந்து கொண்டே
இருக்கும்…

நீ எனக்காக
ஆசைப்படுவதால்
என்னவோ என்
ஆசைகள் கூட
உனக்கானதாக
மாறி விடுகின்றது..

காதல் உறவு
அழகானது பிரிந்து
சென்றாலும் அந்த
உறவுடனே மறுபடியும்
காதல் செய்ய விரும்பும்.

உன்னை என்
வாழ்நாளில் வெறுத்ததும்
இல்லை உன்னை
விலகிச் செல்ல நான்
நினைத்ததும் இல்லை.

அன்பே என்னிடம்
சிறகுகள் இல்லை
உன்னிடம் தேடி வர
ஆனால் என்னிடம்
இதயம் இருக்கிறது
உன்னை நினைத்து
உனக்காக உனக்காக
வாழ்ந்திட…

அழகை
எதிர்பார்ப்பவர்களிடம்
உங்கள் காதலை
எதிர்பார்க்காதீர்கள்..
அன்பை
எதிர்பார்ப்பவர்களிடம்
மட்டும் காதலை
எதிர்பாருங்கள்..


காலம் நம்மை
சேர்க்கா விட்டாலும்
விதி நம்மை சேர்க்கும்
என்று நம்புவோம் பயம்
கொள்ளாமல்
என்னுடன் வா..

இரவில் தோணும்
நிலவை விட அழகானது
என் மனதில் இருக்கும்
உன் நினைவுகள்…

காதல் என்பது இரண்டு
கண்கள் ஒன்றோடு ஒன்று
கலப்பதனால் மனதில்
உருவாகும் கர்ப்பம்
எவ்வளவு வலிகளை
தந்தாலும் அந்த வாழ்வில்
சுகம் அதிகம்..

என் காதலுக்கு உயிர்
கொடுத்த தேவதையே…
நான் உன்னை தொட்ட
தென்றல் காற்று அல்ல
நீ சுவாசிக்கும்
முச்சுக் காற்று…
வாழ்ந்தாலும் இறந்தாலும்
அது உன்னுடன்
மட்டும் தான்….!

உன் அழகு என்
கண்ணை ஈர்த்தது
ஆனால் உன் அன்பு
என் இதயத்தை
கொள்ளை அடித்தது.


நீ என் அருகில் நெருங்கி
வரும் போது நான்
பனியாக உறைந்து
போகிறேன் நீ விலகிச்
செல்கையில் உருகிப்
போகிறேன்..!

உன் மீது நிறைந்து
கிடக்கும் நேசங்கள்
அனைத்தையும்
வெளிப்படுத்த எனக்கு
கிடைத்த ஆயுதம்
தான் காதல்.

உன்னுடன் நான்
எவ்வளவு சண்டை
போட்டாலும் உன்னை
பிரிந்து ஒரு நொடி கூட
என்னால் நிம்மதியாக
சந்தோசமாக
வாழ முடியாது
என்பதே உண்மை..!

என் மனதில்
உன் மீது கொண்ட
காதல் என்னை
மண்ணில் புதைக்கும் வரை
என்னிடம் இருந்து
பிரிக்க முடியாது..!

காதல் தான்
அற்புதங்கள் செய்யும்
என்று எண்ணி இருந்தேன்
ஆனால் உன் கண்களும்
மாயம் செய்யும் என்பதை
புரிந்து கொண்டேன்
உன்னை பார்த்த பிறகு..!

நான் உன் மீது
கொண்ட காதல்
உன்னை மட்டும்
காதலிக்க கற்றுத்
தரவில்லை உன்னை
தவிர வேறு யாரையும்
காதலிக்க கூடாது
என்பதையும்
கற்றுத் தந்துவிட்டது.

எனக்கு உயிர் இருக்கும்
வரை உன்னோடு
இருக்க வேண்டும் என்பது
என் ஆசை அல்ல…
உன்னோடு இருக்கும் வரை
எனக்கு உயிர்
இருந்தால் போதும்..!


நேரில் உன்னை
பார்க்கும் போது
என்னால் பேச
முடியவில்லை
அதனால் தான்
தினமும் உன்னோடு
கனவில் பேசிக்
கொண்டிருக்கிறேன்.

நான் உன்னிடம் வர
முடியாமல் தூரத்தில்
இருந்தாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் இதயத்தில்
எப்போதும் இருக்கும்..!

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

மன அமைதி கவிதைகள்,

மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai
MANA AMAITHI KAVITHAI IN TAMIL

இந்த பதிவில் “மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai” பார்க்கலாம்.

மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai
அமைதி கவிதைகள்
மன அமைதி கவிதைகள்
Mana Amaithi Kavithai In Tamil
மன அமைதி கவிதைகள்

1.பொறுமை கேவலமாகும் போதும்
அன்பு அசிங்கப்படுத்தும் போதும்
அமைதி காப்பது தூக்கி வீசத்
தெரியாமல் அல்ல உணரும் போது
அவர்களுக்கு வலிக்கக் கூடாது
என்பதற்காக.

2. உனக்கு மனஅமைதி வேண்டுமானால்,
யாருடைய குறையும் காணாதே.

3. அமைதி கூட சிலநேரம்
மற்றவர் பார்வைக்கு
“திமிர்” ஆகவே தெரிகிறது.

4. உலகத்திலேயே மனிதன் அதிகமாக
நேசிக்க கூடியது..
அமைதியும் நிம்மதியுமே.!

5. அமைதியின்மைக்கு தான்
மற்றவர்களுடைய அனுமதி தேவை..
அமைதிக்கு நாம் மட்டும் போதும்.!

6. முட்டாளுக்கு அமைதியாக இரு
என்று சொல்வதை விட..
உயர்ந்த அறிவுரை
வேறு எதுவும் இல்லை.


7. உங்கள் மௌனத்தை
புரிந்து கொள்ள முடியாத ஒருவரால்..
அனேகமாக உங்கள் வார்த்தைகளையும்
புரிந்து கொள்ள முடியாது.

8. உடம்பில் பலம் இருப்பவன் ஆ
வேசப்பட்டால் அடிதடி நடக்கும்..
நாக்கில் பலம் இருப்பவன்
ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்..
மூளையில் பலம் இருப்பவன்
மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.

9. அமைதியும், மகிழ்ச்சியும்
இருக்கும் வரை உங்களுக்கு
என்றுமே விடிவு காலம் தான்.

10. பூரண ஓய்வு கிடைக்கும்
தூக்கத்தைப் போன்றது
ஓர் இடத்தின் அமைதி.

11. அனைவரும் அன்றாடம்
அரைமணி நேரமாவது மௌனமாக
இருக்க பழகுவது அவசியம்.


12. அமைதியான வாழ்வே
நிம்மதியான வாழ்வு
அமைதியான இதயமே
மகிழ்ச்சிக் கடலின் எல்லை.

13. இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.

அமைதி கவிதைகள்
14. அமைதி ஞானத்தின் வடிவு..
அமைதி அன்பின் வடிவு..
அமைதி தெளிவின் தேக்கம்..!

15. நம் வாழ்க்கையில் நடக்கும்
பல விஷயங்கள்
நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.!

16. நம்மால் இந்த வாழ்க்கையில்
எல்லா விஷயங்களையும்
மாற்றிவிட முடியாது என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

17. நம் வாழ்க்கையில் ஏற்படும்
ஏற்ற தாழ்வுகளும் துயரங்களும்
நமக்கு அனுபவமாக வந்தவை மட்டுமே
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

18. இந்த வாழ்க்கையில் நாம் விரும்பியபடி
அனைத்தும் நடப்பதில்லை என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.


19. காரண காரியமின்றி நம் வாழ்க்கையில்
எதுவும் நடக்காது என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

20. நம் வாழ்க்கையில் சந்திக்கும்
ஒவ்வொரு தொந்தரவுகளும்
துன்பங்களும் நம்மை மேம்படுத்தும்
ஒரு நல்ல எதிர்காலத்துக்கு
இட்டுச் செல்லும் என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

21. கடந்து போன விஷயங்களை
மறந்து விடுங்கள்..
அவை சென்றுவிட்டவை நம்மால்
மாற்ற இயலாதது.

22. எதிர்காலத்தை நினைத்து
பயம் கொள்ளாதீர்கள்..
அவை இன்னும் வரவில்லை
அவற்றின் மீது நமக்கு
எந்த ஆதிக்கமும் கிடையாது.

23. ஆசைகளை அளவோடு
வைத்துக் கொள்ளுங்கள்..
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள்..
பேராசை படாதீர்கள்.

24. பயம், கவலை,எரிச்சல், கர்வம்,
பொறாமை, துக்கம், ஏக்கம் போன்ற
தீய குணங்களை விட்டுவிடுங்கள்.

25. கண் முன்னே இருக்கும்
வாழ்க்கையை மட்டும் முழுமையாக
வாழுங்கள்.

26. நீங்கள் கவலைப் படுவதாலோ,
வேதனைப் படுவதாலோ உங்கள்
வாழ்க்கையில் எந்த மாற்றமும்
வந்துவிட போவதில்லை.!