செவ்வாய், 20 செப்டம்பர், 2022

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்
MUDHAL KADHAL THOLVI KAVITHAI


இந்த தொகுப்பு “முதல் காதல் தோல்வி வலி கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

முதல் காதல் தோல்வி கவிதைகள்
முதல் காதல் வலி கவிதைகள்
Mudhal Kadhal Tholvi Kavithai
முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

“என்னை மறந்து விடு” எனும்
வார்த்தையின் நீளம்
சிறியது தான் ஆனால்..
அதன் வலி சாகும் வரை..!

அன்று உனக்கு பிடித்த
அனைத்தையும் நேசித்தேன்..
இன்று உனக்கு பிடிக்காத
என்னையும் வெறுக்கிறேன்..!

நீ என்னை காதலித்து
ஏமாற்றி விட்டாய் என்று
ஒரு போதும் சொல்ல மாட்டேன்..
காதலித்து இருந்தால் ஏமாற்றி
இருக்கமாட்டாய்..!

இந்த உலகில் உன்னை
நேசித்தது என் தவறல்ல
அன்பே..உலகத்திலேயே உன்னை
மட்டும் உயிருக்கு உயிராய்
சுவாசித்தது தான் என் தவறு..!

உன்னை நான் மறந்து விட்டேன்
என்று.. நீ எண்ணும் வேளையில்
பிரிந்திருக்கும் என் உயிர்..!

இதயமும் ஒரு சிறை தான் இதில்
குற்றம் செய்பவர்கள்
மாட்டிக் கொள்வதில்லை.. பாசம்
வைத்தவர்கள் மட்டுமே மாட்டிக்
கொள்கிறார்கள்..!


என்னை மறந்து விடு என்று
உன்னை திட்டி விட்டு..
இறைவனிடம் வேண்டுகிறேன்..
என்னை மறந்து விட கூடாது
என்று..!

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்..
அடுத்த ஜென்மம் என்று ஒன்று
இருந்தால் அதில் நீயே வேண்டும்..
உறவாக மட்டுமல்ல.. உயிராக..!

ரோஜாவின் மேல் படிந்திருக்கும்
பனித்துளியை நாம் ரசிக்கிறோம்..
யாருக்கு தெரியும் அது செடியை
விட்டு பிரியப் போகும் ரோஜாவின்
கண்ணீர் துளிகள் என்று..!

உன் மனதில் நான் எதிரியாக கூட
வாழத் தயார்.. அது அழகான
ரோஜா செடியில் முட்கள் போல..!

இரக்கமற்ற உன் இதயத்தால்
இறந்து போனது நம் காதல்..!


முதல் காதல் எப்போதும்
தொலைவது இல்லை..
அவரவர் மனங்களுக்குள்
பூ செடியாய் மலர்ந்து
கொண்டே இருக்கும்..!

நீயும் ஒரு விஷம் தான்
அன்பெனும் அமுத விஷம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
கொள்கிறாய் என்னை..!

நம் காதல் முடிந்து விட்டது என்று
எண்ணி உயிரைத் துறக்கவும்
முடியவில்லை.. இன்னும் தொடரும்
என்று எண்ணி உயிரோடு
இருக்கவும் முடியவில்லை..!

நூறு முறை பிறக்க வைத்தாய்
உன் அன்பால்.. கோடி முறை
இறக்க வைத்தாய் உன் பிரிவால்..!

வெறுத்துப் போவோரை விரட்டிப்
பிடிப்பது தவறு என்று தெரிந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை..!

உன்னை நேசித்த மனதால் வேறு
எதையும் நேசிக்க முடியவில்லை..
நேசிப்பது எல்லாம் உன்னை
போல இல்லை..!

நினைக்கவும் முடியாமல்..
மறக்கவும் முடியாமல்..
தவிக்கிறேன் நான் உன்னையல்ல
என் காதலை..!


நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகளை என்னிடம்
இருந்து பிரிக்க முடியாது..!

நான் நேசிக்கும் அளவு
நீ என்னை நேசிக்க வேண்டாம்..
ஆனால் என் நேசம் எந்தளவு என்று
புரிந்து கொண்டாலே போதும்..!

நிஜமான உன்னை தொலைத்து
நினைவுகளோடும் கனவுகளோடும்
உறவாடும் துரதிஷ்டம் எனக்கு..!

நீ என்னுடன் இல்லாமல் இருக்கும்
தருணங்களில் நூறு உறவுகள்
அருகினில் இருந்தாலும் நான்
தேடுவது “தனிமை” தான்..!

என்னை மறந்து விடு என்று
இலகுவாய் சொல்லிவிட்டாய்..
அவ்வளவு இலகுவாய் மறக்க
முடியுமென்றால் அது
காதலே இல்லை..!

மேலும் படியுங்கள்.. 

Tamil Love Pain Quotes: காதல் வலி கவிதைகள்

Tamil Love Pain Quotes: காதல் வலி கவிதைகள்


Tamil Love Pain Quotes: யாரையும் அதிகமாக நேசிக்காதே ஒரு நாள் அது மிகப் பெரிய வலிகளை தரும். இந்த பதிவில் காதல் வலி கவிதைகள் தொகுப்பை பார்க்கலாம்.

Tamil Love Pain Quotes: காதல் வலி கவிதைகள்

அவள் கரம் சேர காதலுடன்
காத்திருந்தேன். கரம்
கோர்த்து அழைத்து
வந்தால் அவள்
காதலனை..!

தனிமையும் ஒரு சுகமாக
போய்விட்டது. உன்
நினைவுகளை நினைத்து
பார்க்கையில்..!

உன்னோடு சேர முடியாத
இந்த வாழக்கையை வாழ
முடியாமல் தவிக்கும்
மனதிற்கு எப்படி ஆறுதல்
சொல்லவது என்று
எனக்கு புரியவில்லை.

சுவாசித்த காற்றையும்
நேசித்த காதலையும்
எப்போதும் மறக்க முடியாது.
அப்படி மறந்தால் அது
மரணமாக தான் இருக்கும்…!

உன்னை தொலைத்த என்
இதயம் உன்னை
தொலைத்த இடத்தில்
நிண்டு உன்னை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கின்றது.

நீ தூரத்தில் பிரிந்து இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுடன்
நெருக்கமாக இருந்து
கொண்டிருக்கின்றது..!
உன் நினைவுகளை யாராலும்
என்னிடம் இருந்து
பிரிக்க முடியவில்லை..!


நீ தந்த வலிகளை இனிமையாக்க
உன் நினைவுகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.

மிகப் பெரிய வலி நான்
உன்னுடன் பேச நினைத்தும்
உன்னோடு பேச முடியாமல்
தவிப்பது தான்.

காதலை போல் முகச் சிறந்த
பரிசும் இல்லை..! காதலைப்
போல மிக மோசமான
வலியும் இல்லை..!

எவ்வளவு தான் அழுதாலும்
காதல் ஏற்படுத்திய வலிகள்
குறைவதில்லை..!

நீ தந்த காதல் வலிகளால்
உன் அழகிய நினைவுகள்
கூட கனவில் வரமால்
போய்விட்டது.


என் முழு வாழ்க்கையையும்
உனக்காக வாழ்ந்த எனக்கு..!
நீ தந்த வலிகள் என்னை
வலிகளின் அர்த்தத்தை
உணர்த்திக் கொண்டிருக்கின்றது..!

என் காதலே எனது மறக்க
முடியாத புன்னகையையும்
நீ தான் தந்தாய்..! எனது
மறக்க முடியாத அழுகையும்
நீ தான் கொடுத்தாய்..!

நான் இல்லை என்றால்
உனக்காக பலர்
காத்திருப்பார்கள்..! ஆனால்
எனக்கோ நீ இல்லை என்றால்
எனக்காக காத்திருப்பது என்
மரணம் மட்டும் தான்..!

என்னை மறந்து விடு என்று
சொல்லும் போது வார்த்தையோ
சிறியது தான் ஆனால் அதன்
வலியோ கொடுமையாக
இருக்கும்.

இரக்கமே இல்லாத உன்னை
ஒவ்வொரு நொடியும்
உண்மையாக நேசித்த
பாவத்திற்கு ஒவ்வொரு
நொடியும் வலியுடனே
நகருகின்றது.

இந்த உலகில் யாரும்
யாருக்காகவும் இல்லை
என்ற உண்மை புரிந்து
விட்டால் வாழ்வின் பல
வலிகள் இல்லாமல்
போய் விடும்..!

அன்பு எவ்வளவு அழகானது
என்பதை உன்னிடம் தான்
அறிந்தேன். அதே அன்பு
எவ்வளவு வலிகளை தரும்
என்பதையும் உன்னிடம்
தான் உணர்ந்தேன்.


உயிரிலும் மேலாக ஒருவரை
நேசித்து அந்த உறவால்
புறக்கணிக்கப்பட்டும் போது
இதயத்திற்கு ஏற்படும்
வலியை தீர்க்க முடியாது.

நாம் உயிரிலும் மேலாக
நேசிக்கும் இதயத்திடம்
நம் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
அடையும் போது கோபம்
இருக்காது வலிகள்
தான் இருக்கும்.

நம் உடலுக்கு நம் உயிர் கூட
வலியாக தான் இருக்கும்.
நாம் உயிராக நேசிக்கும்
ஒரு உயிர் நம்மை
மறந்து விட்டால்.

சில நேரம் வலிகளின்
உச்சத்தால் சிலரை
வெறுக்க தோணும்.
ஆனால் எந்த நேரத்திலும்
அவர்களை மறக்க தோணாது..!