வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தரிசு நிலம் என்றால் என்ன

தரிசு நிலம் என்றால் என்ன
THARISU NILAM ENRAL ENNA

பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலமானது மனித வாழ்வில் இன்றியமையாததும், முக்கியமானதும், மனித வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்றது. இன்று இந்நிலங்களின் தன்மைக்கேற்ப பல வகைகளாகக் காணப்படுகின்றன.

எனினும் நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை பாகுபாடு செய்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்களை ஐவகையாகப் பிரித்துள்ளனர்.

தற்போது பல வகைகளில் நிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். உதாரணமாக தரிசு நிலம், கல்லாங்குத்து நிலம், செம்பாட்டு நிலம், மேச்சல் நிலம், வட்டகை நிலம், அறப்பு நிலம், இறையிலி, உழவுகாடு போன்ற பல நிலங்களைக் கூறலாம்.

Table of Contents
தரிசு நிலம் என்றால் என்ன
தரிசு நிலங்களின் வகைப்பாடு
தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
தரிசு நிலம் என்றால் என்ன
சாகுபடி செய்யாமல் இருக்கும் நிலங்களை தரிசு நிலம் என்பர். தரிசு நிலங்களைப் போடுகால் எனவும் அழைப்பர்.

தரிசு நிலங்களின் வகைப்பாடு

பொதுவாகத் தரிசு நிலங்களை மூன்று வகைப்படுத்துவர். அவையாவன,

நடப்பு தரிசு
சாகுபடிக்கு லாயக்கான தரி
இதர தரிசு
நடப்பு தரிசு – அதாவது நடப்பாண்டில் மட்டும் தரிசாக வைத்திருக்கும் நிலங்கள் அதற்கு முந்திய ஆண்டில் பயிர் செய்யப்பட்டிருக்கும்.

சாகுபடிக்கு லாயக்கான தரிசு – நிலங்களில் சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் சாகுபடி செய்யாமல் வைத்திருக்கும் நிலங்களாகும்.

இதர தரிசு – ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்களில் நிலங்கள் தரிசாக வைத்திருந்தால் அல்லது சாகுபடி செய்யாமல் வைத்திருந்தால் இதனை இதர தரிசு நிலங்களாக வகைப்படுத்தி வைக்கின்றனர்.

இவ்வகைப்பாடானது கிராம நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்பர்.

தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களில் கால்நடை வளர்ப்பு மிகுந்த பயனைத் தரும் அதிலும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு எருமை மாடு வளர்ப்பு போன்றவை மிகுந்த லாபத்தை தரும்.

உழுந்து, பாசிப் பயறு, நரிப் பயறு, கொள்ளு, தட்டைப் பயறு, சோளம், மக்காச் சோளம், இராகி, கடலை போன்றவற்றைப் பயிரிடலாம். இப் பயிர்கள் மூலம் கிடைக்கும் தீவினைகளான சோளத்தட்டு, கடலைச்செடி, கொள்ளுக் கொடி போன்றவை ஆடுகளுக்கு நல்ல தீவினங்களாகும்.


ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் இரண்டு எருமை மாடுகள் மற்றும் பத்து ஆடுகள் வளர்ப்பதற்குத் தேவையான தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைக்கப்படுவதுடன் நிகர இலாபத்தையும் ஈட்டலாம்.

தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத பலம் குறைந்த தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் உழவர்ப் பெருமக்கள் வருடம் முழுவதும் நிரந்தர வருவாயைப் பெற முடியாது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் துயர்துடைக்க நிரந்தர வருவாயை பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசாங்கமானது பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டு – தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்.

நல்லொழுக்கம் என்றால் என்ன

நல்லொழுக்கம் என்றால் என்ன
NAL OLUKKAM IN TAMIL

மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு ஆகும். மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க வேண்டும். மனிதனை சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வது நல்லொழுக்கங்களே ஆகும்.

வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான தேவை நல்லொழுக்கம் ஆகும். நல்ல குணங்கள் பிறவியிலேயே உள்ளன என்று சிலர் கூறலாம். இருப்பினும் நல்லொழுக்கப் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இரக்கம், பொறுப்பு, கடமை உணர்வு, சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, நேர்மை, விசுவாசம், நட்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை ஒழுக்கமான வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கான விரும்பத்தக்க நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நாம் தமிழர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும், மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கமாகும். இனம், மொழி, சாதி, மதச்சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும்.

எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும். பயனுள்ள பழக்க வழக்கங்களை தீமை பயக்காத செயல்களை வளர்த்து நல்லொழுக்க சீலர்களாக வாழ கல்வி அறிவு உதவுகின்றது.


Table of Contents
நல்லொழுக்கம் என்றால் என்ன
ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் பற்றிப் பெரியார் கூறிய சிந்தனைகள்
நல்லொழுக்கம் என்றால் என்ன
நல்லொழுக்கம், என்பது ஒரு நபரின் தார்மீக மேன்மை ஆகும். மேலும் நல்லொழுக்கம் என்பது தார்மீக ரீதியில் நல்லவர்களாக இருப்பதற்கான தரம் ஆகும். தார்மீக ரீதியில் சிறந்தவர்கள், நல்லவர்கள் என மதிப்பிடப்படுபவர்கள் நல்லொழுக்கங்களால் உருவாக்கப்பட்ட பண்பைக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அவர்கள் நேர்மையானவர்கள், மரியாதைக்குரியவர்கள், தைரியமானவர்கள், மன்னிப்பவர்கள் மற்றும் அன்பானவர்கள் என கூறுமளவிற்கு சிறந்தவர்களாக இருப்பர்.

அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள், தூண்டுதல்கள், அல்லது ஆசைகளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார்கள். ஆனால் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின்படி செயல்படுபவர்களாக இருப்பர்.

நல்லொழுக்கம் என்பது நல்லதைச் செய்வதற்கான ஒரு பழக்கமான மற்றும் உறுதியான மனநிலையாகும். இது ஒரு நபரை நல்ல செயல்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், சிறந்த வாழ்க்கை வாழவும் நல்லொழுக்கம் அனுமதிக்கிறது.

ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் ஒரு நபருக்கு சிறந்த ஆரோக்கியத்தை வழங்குகின்றது. மோசமான நாளைக் கொண்டிருக்கும் ஒருவரிடம் கருணை காட்டுவது அவரை அல்லது அவளைப் புன்னகைக்கச் செய்து நல்லுறவை வளர்க்கும்.

நல்லொழுக்கமானது உறவின் மீதான நம்பகத்தன்மையையும், நெருக்கத்தையும் வளர்க்கிறது. மதிப்புமிக்க, அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகிறது.


நல்லொழுக்கம் என்ற வார்த்தை Vir என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். இது ஆங்கிலத்தில் Virtue என அழைக்கப்படுகின்றது.

முதலில் அறம் என்பது ஆண்மை அல்லது வீரம் என்று பொருள்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது ஒழுக்க மேன்மையின் உணர்வில் நிலைபெற்றது.

மனித நற்பண்புகள் மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. மற்றும் பாவத்தைத் தவிர்க்கின்றன.

நல்லொழுக்கங்கள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின் கட்டளைகளின்படி நம் நடத்தையை வழி நடத்துகின்றன. சுயக்கட்டுப்பாட்டின் அடிப்படையிலான சுதந்திரத்தை நோக்கியும், நல்ல ஒழுக்க வாழ்வில் மகிழ்ச்சியை நோக்கியும் நம்மை வழி நடத்துகின்றன.

ஒழுக்கம் பற்றிப் பெரியார் கூறிய சிந்தனைகள்

பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு ஆகும்.

மற்றவர்களிடம் பழகும் விதத்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாகக் கற்றுக் கொண்டால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதனாவான்.

நாடு சுபீட்சத்துடன் வாழ வேண்டும் என்றால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படி எல்லோரிடமும் அவனும் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.


செப்பேடுகள் என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன
SEPPEDUGAL IN TAMIL

அரசர்கள் அவர்கள் காலத்தில் நடந்த நில தானங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் பதிக்கும் முறையை கையாண்டனர்.

இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் தொல்லியல் சான்றுகளாக காணப்படுகின்றது.

Table of Contents
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளின் அமைப்பு
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகள் என்பது பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புக்கள், மரபுவழி கதைகள் போன்ற நிகழ்வுகளை பதிந்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தகடுகள் ஆகும்.

கல்வெட்டுகளில் பதியப்படும் சில செய்திகள் செப்பேடுகளிலும் பதியப்பெற்று தானம் பெறுபவனுக்கு வழங்கப்படும். அவை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படுவதில்லை.

செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளில் காணப்படும் செய்தி கவித்துவமாக அமைந்திருக்கும்.
இரு மொழி கையாளப்படும். அதாவது முதல் பகுதி சமஸ்கிருதத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் அமைந்திருக்கும்.
தானம் கொடுத்த அரசன் பெயர், தானம் கேட்டு விண்ணப்பித்தவன் பெயர், சாட்சிகள், செய்தியை கவிதை வடிவமாக சொன்ன புலவர், அதை பொறித்த ஆசாரி போன்ற செய்திகள் செப்பேட்டில் காணப்படும்.
பிற்காலத்தில் நில தானம் பெற்றவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இச்செப்பேட்டை காட்டி ஊர் சபையினரிடம் தீர்வு காண முடியும்.
செப்பேடுகளின் அமைப்பு

செப்பேடுகள் ஒரு முனையில் துளையிட்டு அதில் மிகப்பெரிய வளையத்தின் மூலம் பிற இதழ்களை இணைத்திருப்பர். அதன் முகப்பானது வட்ட வடிவில் அரச முத்தரையை தாங்கி இருக்கும்.

தமிழகத்தில் ஏறக்குறைய 250 செப்பேடுகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டு இதுவரை 19 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 13 செப்பேடுகளின்  காலத்தையும், வெளியிட்ட அரசரின் பெயர் போன்ற செய்திகளை நோக்குவோம்.

முதலாம் பராந்தகன்
சோழர்கள் செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும். இது கி.பி 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் எனும் ஊரின் சௌந்தரராஜபெருமாள் கோவில் தர்மாகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது. இச்செப்பேடு இரண்டு இதழ்களை கொண்டவை.

முதலாம் பராந்தகன்
வேளச்சேரி செப்பேடு கி.பி 932 காலத்துக்குரியது. இது வேளச்சேரி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாகலாபுரம் வரையிலான ஆட்சித் தகவல்களை கொண்டுள்ளது. இச்செப்பேடு  ஐந்து இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
இரண்டாம் பரந்தகன் உடைய அன்பில் செப்பேடு கி.பி 961 காலத்திற்கு உரியது. அன்பில் செப்பேடு திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ளது. இச்செப்பேடு  பதினாறு இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
பள்ளன் கோவில் சாப்பாடு கி.பி 970 ஆம் ஆண்டுக்குரியது. இது பள்ளன் கோயில், நாகை மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி  பற்றிய தகவல்களை உடையது.

உத்தம சோழன்
மெட்ராஸ் மியூசியம் செப்பேடு கி.பி 985 ஆண்டுக்குரியது. இது மெட்ராஸ் மியூசியத்திற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கேயே இருந்த காரணத்தால் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் ஐந்து இதழ்கள் மட்டுமே உள்ளன. இதன் முன்னும்,  பின்னும் காணப்பட்ட சில இதழ்கள் கிடைக்கப்பெறவில்லை.

முதலாம் இராஜராஜன்

திருச்செங்கோடு செப்பேடு கி.பி 990 ஆண்டுக்குரியது. இது திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 995 ஆண்டுக்குரிய திருச்செங்கோடு செப்பேடானது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 1006 ஆண்டுக்குரிய ஆனைமங்கலம் செப்பேடானது, ஆனைமங்கலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. இது 21 இதழ்களை கொண்டது தற்போது ஹாலந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது.அளவில் பெரிதாக இருப்பதனால் பெரிய லெய்டன் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1018 ஆண்டுக்குரிய திருவாலங்காடு செப்பேடு, திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி அருகில் உள்ளது. இது 31 இதழ்களைக் கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1020 ஆண்டுக்குரிய கரந்தை செப்பேடானது, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால், அப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது 57 இதழ்களை கொண்ட அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1030 ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இது ஒரு இதழை கொண்டது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1036 ஆம் ஆண்டுக்குரிய எசாலம் செப்பேடு, ஏசாலம் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது. இது 15 இதழ்களை கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜாதிராஜன்
கி.பி 1049 ஆம் ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது ஒரு இதழைக் கொண்டது.

வியாழன், 29 செப்டம்பர், 2022

அந்நிய செலாவணி என்றால் என்ன

அந்நிய செலாவணி என்றால் என்ன
ANNIYA SELAVANI ENRAL ENNA

வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும் போது குறித்த நாட்டின் நாணயத்தை எடுத்துச் செல்வது மிகமிக அவசியமாகும். இதனால் தேவையான அனைத்துச் செலவீனங்களையும் எளிதாகச் செய்ய முடியும்.

மற்ற நாடுகளின் நாணயத்தை எங்கிருந்து பெறுகின்றோம் என பலரது மனதில் கேள்வி எழலாம். இத்தகைய ஆதாரத்தைச் சேர்ந்ததுதான் அந்நியச் செலவாணி சந்தையாகும்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஏனெனில் இதனைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை ஏனைய நாடுகள் எடை போடுகின்றன என்பதனாலேயாகும்.

அந்நியச் செலாவணியின் மதிப்பானது நிலையாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு ஏறலாம் அல்லது இறங்கலாம்.

Table of Contents
அந்நிய செலாவணி என்றால் என்ன
அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
அந்நிய செலாவணி என்றால் என்ன

“எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டுப்பணம் தான் அந்நியச் செலாவணி. வெளிநாட்டுப் பணத்தைத்தான் அந்நியச் செலாவணி என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Forex Reserve என்று கூறுவார்கள்.

அந்நியச் செலாவணி என்ற சொல்லானது வெளிநாடு மற்றும் பரிமாற்றம் என்ற சொற்களின் கலவையிலிருந்து வருகின்றது. அந்நிய செலாவணி என்பது ஒரு சந்தையாகும். இது ஒரு நாணயத்தை மற்றொரு நாணயமாக மாற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்குகின்றது.

அந்நியச் செலாவணி என்பதன் எளிமையான விளக்கம் யாதெனில் பிற நாட்டுப் பணங்களை நாம் செலவளிப்பதே அந்நியச் செலாவணி எனப் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் நாணய மதிப்பே அந்நியச் செலாவணி என அழைக்கின்றோம்.

அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
மக்கள் பொதுவாகத் தமது நாணயங்களை முக்கியமாக இரண்டு நோக்கங்களுக்காக மாற்றிக் கொள்கின்றனர். அதாவது சுற்றுலா(Tourism) மற்றும் வர்த்தகத்திற்காக(Trade) மாற்றிக் கொள்கின்றனர்.

இவை இரண்டும் உலகவில் பரவலாக இருப்பதால் அந்நிய செலாவணி சந்தை உலகளவில் மிகச் சிறந்த திரவ சந்தைகளில் ஒன்றாகும்.

பங்குகள் மற்றும் நிதி வழித்தோன்றல்கள் மையப்படுத்தப்பட்ட சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் சுவாரசியமான விடயம் என்னவெனில் நாணயங்களிற்கு அத்தகைய சந்தை என்ற ஒன்று இல்லை என்பதாகும்.


உலகம் முழுவதிலும் நாணயங்கள் கணினித் தளங்கள் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

இவ்வகையான சந்தை அமைப்பு Over-The-Counter (OTC) System என்று அழைக்கப்படுகின்றது. நாணயங்கள் OTC இல் எந்தவொரு பிரிவிலும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் அவை எதிர்கால தளத்தில் அதாவது Future Platform இல் நிறைய அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு நாணயப் பரிவர்த்தனைக்கும் எப்போதும் இரண்டு நாணயங்கள் சம்மந்தப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் நாணய ஜோடிகள் (Currency Pair) என்று அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு – EUR/USD) இவ்வகை நாணயங்கள் ஒன்றுக்கொண்று அடிப்படை நாணயமாகவும், மேற்கோள் நாணயமாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஜோடிக்கும் அதனுடன் தொடர்புடைய இரண்டு வகையான விலைகள் உள்ளன. ஏலவிலை (Bid Price), கேட்கும் விலை (Ask Price).


ஏல விலை என்பது வியாபார நாணயத்திற்குச் செலுத்திப் பெற விரும்பும் ஒன்றாகும். கேட்கும் விலை என்பது ஒரு வியாபாரி அதே நாணயத்தினை விற்கும் விலையாகும். இந்த இரண்டிற்குமான வேறுபாடு ஜோடியின் பரவல் என்று அழைக்கப்படுகின்றது.

சந்தையில் முன் வரையறுக்கப்பட்ட ஜோடிகள் உள்ளன. இவை மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். 3 வகையான நாணய ஜோடிகள் உள்ளன. பெரிய (Major Pair), சிறிய (Minor Pair) மற்றும் கவர்ச்சியான ஜோடிகள் (Exotic Pair) என்பனவே இவையாகும்.

முக்கிய ஜோடிகள் அனைத்தும் அமெரிக்க டொலராகவும் அல்லது அமெரிக்க டொலரை ஒரு அங்கமாகக் கொண்ட ஜோடிகளாகும். சிறிய ஜோடிகள் குறிக்கு ஜோடிகள் எனப்படுகின்றது.

சமயம் என்றால் என்ன

சமயம் என்றால் என்ன
SAMAYAM ENRAL ENNA

உலகில் மனிதன் தோன்றி குழுவாக வாழ்ந்து சமூகமான போது சமயங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பல்வேறு சமயங்களில் முக்கியமானவையாக இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முப்பெரும் சமயங்களாகும்.

இன்று உலகில் பன்னிரண்டுக்கும் மேலான பெரிய சமயங்களும், நூற்றுக்கணக்கான சிறிய சமயங்களும் உள்ளன. உலகின் 740 கோடி மக்கள் தொகையில், 600 கோடி மக்கள் ஏதாவது ஒரு சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

உலகிலுள்ள பெரிய சமயங்களில் இந்து சமயம், ஜைன சமயம், புத்தசமயம், சீக்கிய சமயம் ஆகியவை கிழக்கத்திய நாடுகளில் தோன்றிய சமயங்கள் ஆகும்.

ஜுடாயிசம், ஜொரொஸ்ட்ரியனிசம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதமும் மேற்கு நாடுகளில் தோன்றியவை ஆகும். ஒவ்வொரு சமயமும் வழிபாட்டுத் தலங்களையும், சமய குருமார்களையும் சமய சடங்குகளையும் கொண்டிருக்கின்றன.

Table of Contents
சமயம் என்றால் என்ன
இந்து சமயமும் அறிவியலும்
சமயம் என்றால் என்ன

சமயம் (சமம்+இயம்) என்றால் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒத்தும், உதவியும் வாழ வேண்டும் என்பதாகும்.

மேலும், சமயம் என்பது இறை உயிர் உலகம் பற்றிய ஒரு நம்பிக்கை முறை எனலாம். கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் எழுந்தருளி இருப்பதை ஏற்கின்ற அமைப்புகளை சமயம் எனலாம்.

அதாவது, சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளையும், சமயச் சடங்குகளையும் மதம் குறிக்கிறது.

இந்து சமயமும் அறிவியலும்
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள், சம்பிரதாயங்கள் நம்பிக்கையின் பின்புலமாக அமைந்துள்ளன.

நம்மில் பலர் பல சடங்குகளை மூட நம்பிக்கை என ஒதுக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். இந்து சமயத்தில் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.

நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னத செய்கையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் செயலாகப் பார்க்கின்றனர்.

ஆனால் நமஸ்காரம் செய்யும் போது இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும் அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.


திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள்.

இந்த விரல்களில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

இந்திய நாட்டில் சமயங்கள் பரிணாம வரிசையை அடிப்படையாகக் கொண்டு சமயம் ஆறு பிரிவுகளாக உருவாயின. அவை சைவம், சாக்தம், வைணவம், செயரம், காணபத்தியம், கௌமாரம் ஆகும்.

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களையும் உள்ளடக்கிய இறைநிலையை உணர்ந்த ஞானிகள் அது அசைவற்றிருப்பதால் சிவம் எனக் கூறி சைவ சமயத்தை உருவாக்கினர்.


இறைநிலையிலிருந்து தோன்றிய சக்திதான் தெய்வம் என்ற பெரியவர்கள் சாக்த சமயத்தை உருவாக்கினர்.

விண் தற்சுழற்சியின் போது சத்தத்துடன் சுழல்வதை உணர்ந்தவர்கள் இறைவனுக்கு சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து வைணவ சமயத்தை உருவாக்கினர்.

அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரைகளை உணர்ந்தவர்கள் இவை இயற்கையின் ஐந்து கரங்கள் என விநாயகனை படைத்து காணபத்தியம் என்ற சமயத்தை உருவாக்கினர்.

பஞ்ச தன்மாத்திரைகளோடு உயிரின் அலையான மனத்தையும் சேர்த்து இயற்கைக்கு ஆறு முகங்கள் என அறிந்தவர்கள் கௌமார சமயம் எனக் கூறி வழிபட்டனர்.

பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் என்றால் என்ன
PRABANJAM ENRAL ENNA

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் நிறைந்து எங்கும் பரந்து விரிந்திருக்கும். பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியே பிரம்ம சக்தி எனப்படும். இதை பிரபஞ்ச ஆற்றல் எனவும், பேராற்றல் எனவும், அகிலத்தை இயக்கும் மகாசக்தி, பராசக்தி, பரம்பொருள் என்றும் பல விதமாகவும் அழைக்கின்றனர்.

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், வடிவமும் பிரபஞ்ச ஆற்றல் மூலமாகவே உருவாகி பாதுகாத்து மாற்றப்படுகின்றது. (ஒரு தன்மையிலிருந்து ஒரு தன்மையாக மாற்றப்படுகின்றது). உதாரணமாக ஒரு மனிதன் பிறப்பதும், வளர்வதும் பின்னர் பிரபஞ்ச பூத உடலை விட்டு பிரிவதும் அனைத்திற்கும் பிரபஞ்ச ஆற்றலே காரணமாகின்றது.

பிரபஞ்சம் ஒரு புள்ளியில் தொடங்கியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அணுவானது ஒரு புள்ளியில் இருக்கும். அதன் ஆற்றலானது ஒரு சிறு புள்ளியில் இருந்து பெரு வெடிப்பின் மூலமாக வெடித்துச் சிதறி அது ஒவ்வொன்றும் பேராற்றலாக மாறியது. இவ்வாறு ஆற்றலாக மாறி அது விரிவடைந்து நாளடைவில் ஒரு பிரபஞ்சமாக மாறியது என்பது தான் அறிவியல் கருத்து.

இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே தான் இருக்கும். இதேபோல் பூமியும் விரிவடைந்து கொண்டிருக்கும். உதாரணம் சில மலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். மலைகளின் உயரமும் உயர்ந்துகொண்டே இருக்கும்.

Table of Contents
பிரபஞ்சம் என்றால் என்ன
பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் தமிழில் பேரண்டம் என அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த உலகம் மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன், நிலவு, விண்மீன்களுக்கிடையிலுள்ள விண்துகள்கள், அவற்றின் இயக்கம், இவற்றையெல்லாம் சூழ்ந்துள்ள வெட்டவெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவிலுள்ள பால்வெளி மண்டலங்கள் ஆகிய எல்லாம் சேர்ந்தது பிரபஞ்சம் ஆகும்.

பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகளாகின்றது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதற்கு பல கருத்துக்கள் இருந்தாலும் பெருவெடிப்புக் கொள்கையை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கின்றது.

இந்த பெரு வெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பிரஞ்சமாக விரிவடைந்து இருக்கலாம் என்று அறிவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர். நமது பிரபஞ்சம் உருவான பொழுது ஒரு வெளிச்சம் தோன்றியது அதுவே இன்று வரை நாம் பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெடிப்பு ஒரு சிறிய புள்ளியிலிருந்து உருவாகி விரிவடைந்து விரிவடைந்து ஒரு மிக பெரிய பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியதாக இருப்பதனால் அதனை ஒளியாண்டு (light year) என அழைக்கின்றார்கள். ஒரு ஒளியாண்டு என்பது 9.46 மில்லியன் கிலோமீட்டராகும். ஒளியாண்டு என்றால் ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவாகும்.

பல சூரிய குடும்பம் சேர்ந்ததே பிரபஞ்சம் என்கின்றோம். பல பிரபஞ்சங்கள் சேர்ந்ததை Cluster என்கின்றனர். பல Cluster சேர்ந்ததை Super Cluster என்கின்றனர். Super Cluster என்பது 200 மில்லியன் ஒளியாண்டு விட்டமுடையது.