திங்கள், 16 அக்டோபர், 2023

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம்

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் ஆலயம்.

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

சேவுகப் பெருமாள்

*தல விருட்சம்:*

வில்வம்

*தீர்த்தம்:*

புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

சிங்கம்புணரி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.*

*தல சிறப்பு:*

*இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் ,சிங்கம்புணரி - 630 502திருப்புத்தூர் தாலுகா,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 98650 62422*

*பொது தகவல்:*

*பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.*

*பிரார்த்தனை:*

*கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், ராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாக பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.*

*சொல்லும் பொருளும்:*

*தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்க கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.*

*அய்யனாரைப் போல அய்யப்பனும் ராகு , மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்றுபுகழ் பெற்று விளங்குகின்றன.*

*மலையாளமும், தமிழகமும்:*

*முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும் இருவரும் ஈன்றமகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோயில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான்.சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை.அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார்.தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.*

*தலவிருட்சம்:*

*இத்திருக்கோயில் அமைந்த இடம் வில்வவனமாகியபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவார தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.*

*தல தீர்த்தம்:*

*இத்திருக்கோயிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும்.*

*தல வரலாறு:*

*பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது.வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே! மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்,'' என்றதுடன், ""பெருமாளே'' என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர், "சேவுகப்பெருமாள் அய்யனார்' என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.*

*அமைவிடம்:*

*மதுரையிலிருந்து 60 கிமீ., காரைக்குடியிலிருந்து மேற்கே 55 கி.மீ., தொலைவில் சிங்கம்புணரி உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

காரைக்குடி

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

இன்றைய கோபுர தரிசனம் 

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

மூலவர்:
வெட்டுடையா காளி

தல விருட்சம்:
ஈச்சமரம்

தீர்த்தம்:
தெப்பம்

பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:
கொல்லங்குடி

மாவட்டம்:
சிவகங்கை

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை.

தல சிறப்பு:
கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்,கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட்,அரியாக்குறிச்சி-623 556,சிவகங்கை மாவட்டம்.

போன்:
+91-90479 28314, 93633 34311

பொது தகவல்:
நீதிபதி அம்பிகை:
அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க "நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை "நீதிபதி' என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.

பிரார்த்தனை:
நோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

கூடுதல் பிரார்த்தனை:
ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு "கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

தலபெருமை:
சங்காபிஷேகம்:
பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.

இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

அமைவிடம்:
சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியில் இருந்து பஸ் கிடையாது. ஆட்டோ உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:
சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை

தங்கும் வசதி:
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் ஆலயம்.

 இன்றைய கோபுர
*தரிசனம் 
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

திருவேங்கடமுடையான்

*அம்மன்/தாயார்:*

ஸ்ரீதேவி, பூதேவி

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*ஊர்:*

அரியக்குடி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*சித்திரை மாதப் பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரமோற்ஸவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன.*

*தல சிறப்பு:*

*இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் ,அரியக்குடி-630 302,காரைக்குடி தாலுகா,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91 -4565 - 231 299*

*பொது தகவல்:*

*இங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பிள்ளையார்பட்டி தலம் உள்ளது.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.*

*தலபெருமை:*

*இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்மநட்சத்திரமான "மகா சுவாதி' நடக்கிறது.*


*ராமானுஜர் காலத்தில் உற்சவ விக்கிரகங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக் கப்பெற்ற திருவேங்கடம் உடையானை இத்தலத்திற்கு கொண்டு வந்தார்.திருப்ப தியிலிருந்து சடாச்சரியும், திருமயத்திலிருந்து அக் னியும் கொண்டு வரப்பெற்று திருவேங்கடம் உடையான் கோயில் திருப்பணி துவங்கியது. அன்று முதல் அரியக்குடி "தென்திருப்பதி' என புகழ் பெற்றது.*


*தல வரலாறு:*

*இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந் தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் "எம்பெருமான்' தோன்றினார். ""தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்,'' என கூறி மறைந்தார்.ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், ""நாளை நீ மேற்கே செல்..என் இடம் தெரியும்,'' என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது.திருப்பதியை போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 4 கி.மீ., தொலைவில் அரியக்குடி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து பஸ்கள், ஆட்டோக்களில் செல்லலாம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
திருச்சி
*தங்கும் வசதி:*
காரைக்குடி

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்,

*"🙏தினம் ஒரு கோபுர தரிசனம்🙏"* 

*காலை சூரிய உதயத்தில்...*

*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*

*இன்றைய கோபுர தரிசனம்*

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்,
*கணக்கன்பாளையம் – 638452,*
*கோபிசெட்டிபாளையம்,* 
*ஈரோடு மாவட்டம்.*
*காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.........

வியாழன், 28 செப்டம்பர், 2023

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சின்னவேடம்பட்டி அருள்மிகு தண்டபாணி சுவாமி ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் 

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சின்னவேடம்பட்டி அருள்மிகு தண்டபாணி சுவாமி ஆலயம்


மூலவர்:
தண்டபாணிசுவாமி

உற்சவர்:

வள்ளி, தெய்வானை உடனமர் குமரகுருபரக் கடவுள்

அம்மன்/தாயார்:

வள்ளி, தெய்வானை

தல விருட்சம்:
கடம்பமரம்

தீர்த்தம்:
திருக்குளம்

ஆகமம்/பூஜை:
குமாரதந்திரம்

பழமை:
500 வருடங்களுக்குள்

ஊர்:
சின்னவேடம்பட்டி

மாவட்டம்:
கோயம்புத்தூர்

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:

தைப்பூச மறுநாள், ஆடிக்கிருத்திகை, அன்று தெப்பத்திருவிழா நடைபெறும். தைப்பூசம், கந்தசஷ்டி விழா, ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, கிருத்திகை, மகாசிவராத்திரி, வைகுண்டஏகாதசி கொண்டாடப்படுகின்றன.

தல சிறப்பு:

சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தண்டபாணிசுவாமி திருக்கோயில்,கௌமாரமடாலயம்,சின்னவேடம்பட்டி,கோயம்புத்தூர்-641049.

போன்:
+91 422-2666370

பொது தகவல்:

கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மூலவர் முருகன் கிழக்கு பார்த்த திருக்கோயில். விமானம் தஞ்சை பெருவுடையார் கோயில் விமான அமைப்பு, பாண்டுரங்கன் கோயில், விமானம் வடநாட்டு கோயில் விமான அமைப்பில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை:

கந்தசஷ்டி விரதம் இருந்து திருமணம் ஆகாதவர்கள், திருக்கல்யாண விழாவில் பங்குபெற்றால் திருமணதடை நீங்கும்.

நேர்த்திக்கடன்:

திருமணத்தடை நீங்க கந்தசஷ்டிப் பெருவிழாவில் மறுநாள் திருமண உற்சவ விழாவில் பங்குபெற்று தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர்.

தலபெருமை:

முப்பெரும் சமாதி வளாகம், ஆதின குருமுதல்வர், திருப்பெருந்திரு, இராமானந்த சுவாமிகள் கவுமார மடாலய நிறுவனர், தவத்திரு. கவிக்கடல் கந்தசாமி சுவாமிகள் இரண்டாவது குருமகா சந்நிதானங்கள், தவத்திரு கஜபூசை சுந்தர சுவாமிகள், மூன்றாவது குருமகா சந்நிதானங்கள் அமைந்துள்ளன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில், சித்தி விநாயகர், கருணாம்பிகை, உடனுறை அவிநாசியப்பர், பாண்டுரங்கன், சூரியனார், சனீஸ்வரர், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.

அமைவிடம்:

கோவை-காந்திபுரத்திலிருந்து சத்திய மங்கலம் செல்லும் வழியில் 8 கி.மீ. துõரத்தில் சரவணம்பட்டி. அங்கிருந்து துடியலூர் செல்லும் வழியில் 1.5 கி.மீ. துõரத்தில் சின்னவேடம்பட்டியில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்:
கோயம்புத்தூர்
தங்கும் வசதி:
கோயம்புத்தூர்
கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

புதன், 27 செப்டம்பர், 2023

இன்றைய கோபுரதரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சதுர்வேதமங்கலம் அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்

இன்றைய கோபுர
தரிசனம் 


சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சதுர்வேதமங்கலம் அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்.

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

ருத்ரகோடீஸ்வரர்

*அம்மன்/தாயார்:*

ஆத்மநாயகி

*தல விருட்சம்:*

எலுமிச்சை

*தீர்த்தம்:*

சூரிய, சந்திர தீர்த்தம்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

மட்டியூர்

*ஊர்:*

சதுர்வேதமங்கலம்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*பாடியவர்கள்:*

முத்துவடுகு சித்தர்.

*திருவிழா:*

*மாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் பக்தர்கள் இங்கு நேரில் வந்து சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்.*

*தல சிறப்பு:*

*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார்.இத்தலத்தில் பிரம்மா மலை வடிவில் அருள்பாலிக்கிறார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வேதி மங்கலம்,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 4577- 246170, 94431 91300 +91-4577-242 981, 98420-82048.*

*பொது தகவல்:*

*இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அரவன் எனும் பாம்பு வடிவிலான மலை உள்ளது. சிவனை வணங்கிய பிரம்மன் எப்போதும் அவரை வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதால், அவரே இம்மலையாக மாறியதாக வரலாறு கூறுகிறது.*

*இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் எனப்படுகிறார். ராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கூடியது. இத்தல இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். சரபேஸ்வரருக்கு வடை, பாசிப்பருப்பு பாயசம் வைக்கின்றனர்.*

*தலபெருமை:*

*லவகுசன் அஸ்வமேத யாகம் செய்த இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம், தலமரம், தலப் பறவை என ஐவகை சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோடி ருத்ரர்கள் வணங்கிய இங்கு வேண்டிக்கொள்ள நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*பிரகாரத்தில் சுவாமிக்கு முன்இடப்புறம் சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரை ஞாயிற்றுக் கிழமையில் ராகுகால நேரத்தில் வணங்கினால் குலம் சிறக்கும், கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நந்தி மிகவும் பெரியவடிவில் இருப்பதும், நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பதும் சிறப்பு.*

*சூரிய பூஜை:*

*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார். நான்கு வேதங்களை ஓதும் வேதவிற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால், இவ்வூர் "சதுர்வேதமங்கலம்' என்றழைக்கப்படுகிறது.*

*தல வரலாறு:*

*ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார்.*

*கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி ருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த ருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது.*

*பிரம்மாவுக்கு படைப்புத் தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு, "ருத்ர கோடீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*
*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார்.*

*அமைவிடம்:*

*சிங்கம்புணரியிலிருந்து 5 கி.மீ., தூரம் உள்ள இவ்வூருக்கு, திண்டுக்கல்லில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பஸ்கள் செல்கிறது.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி, சிவகங்கை
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
மதுரை
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...*