புதன், 27 செப்டம்பர், 2023

இன்றைய கோபுர தரிசனம் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு கோயம்புத்தூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் 

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு கோயம்புத்தூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம்

மூலவர்:
மாரியம்மன்

தல விருட்சம்:
ஆலமரம்

தீர்த்தம்:
வற்றாத தீர்த்த கிணறு

பழமை:
500 வருடங்களுக்குள்

ஊர்:
கோயம்புத்தூர்

மாவட்டம்:
கோயம்புத்தூர்

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டு, அமாவாசை, பௌர்ணமி பூஜைகள்

தல சிறப்பு:
வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.

திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,மதுக்கரை மார்க்கெட், கோவை-641 105

போன்:
+91 91- 9976987945

பொது தகவல்:
கோவிலின் அமைப்பு:

வடக்கு பார்த்த மாரியம்மன் கோவிலின் முன்புறம் தலவிருட்சகமான ஆலமரம் உள்ளது. அதை கடந்து கொடிமரமும், அதனையடுத்து கோவிலின் கோபுரம் வருகிறது.

கோபுரத்தின் உள்ளே சென்றதும் கோவிலின் பரந்து விரிந்த நான்கு முனைகளும் மனதிற்கு இதம் தரும் அழகுடன் அமைந்துள்ளது.கிழக்கு பகுதியில் திரும்பியதும் வற்றாத கிணறும், குழவி கள்ளும் இருக்கும்.

அதை கடந்து கோவிலை சுற்றி வரும் போது கிழக்கு பார்த்த விநாயகரும், மேற்கு பார்த்த இரண்டு நந்தி சிலைகளும் வீற்றிருக்கும்.

பின்னர் அம்மனை தரிசிக்க முன்புறம் வழியாக உள்ளே செல்லும் போது பார்த்த ஊஞ்சல், மற்றும் சிம்ம வாகனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வழிபடும் போது வடக்கு பார்த்த மாரியம்மன் வீற்றிருக்கும் அழகு தெரியும்.

பிரார்த்தனை:
அம்மை, பூ போட்டு காரியம் கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

நேர்த்திக்கடன்:
கெடாவெட்டு, உருவார பொம்மை, பூச்சட்டி

தல வரலாறு:
350 வருடங்களுக்கு முன்பு தோன்றிய கோவில். திப்பு சுல்தான் காலத்தில் உருவானது.

ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளை காரனிடமிருந்து கன்னிபெண்ணை காப்பாற்றிய குளவி கல் அந்த பெண்ணால் மதுக்கரை அங்காடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதில் சுவர் அதிகம் காணப்பட்டதாலே இந்த பகுதிக்கு மதுக்கரை என்றும் பெயர் வைக்கப்பட்டது.

கன்னி பெண்ணால் கொண்டு வரப்பட்ட குளவிக்கல் மீண்டும் பலமுறை பலரால் பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும், மீண்டும் இதே இடத்திற்கு தானாகவே வந்துள்ளது. அந்த குளவி கல் இங்கேயே நிலையாகி போனதையடுத்து, அது அம்மன் சக்தி என மாரியம்மன் கோவில் நிறுவப்பட்டது.

குளவிக்கல் இங்கே நிறுவியதன் பின்னர் அந்த ஊர் மக்களுக்கு நல்ல காரியங்கள் அதிகமாக நடக்க துவங்கியது. மேலும் 7 ஊர் மக்களுக்கு இந்த அம்மன் குல தெய்வம். மதுக்கரை மக்களுக்கு காவல் தெய்வம். 

5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டுதல் விழா நடைபெற துவங்கியது. முதல் பூச்சாட்டு 1938 ல் துவங்கியது. ஆரம்ப காலத்திலிருந்தே வற்றாத இந்த கிணறும் இங்கேயே இருக்கிறது. 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபி?ஷகம் நடைபெறும்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:

வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.

அமைவிடம்:
காந்திபுரம் பகுதியிலிருந்து(22) மதுக்கரை மார்க்கெட் செல்லும் பஸ்ஸில் செல்ல வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் அதன் அருகேயே கோவில் உள்ளது.பஸ் நம்பர்– 3அ, 18, 66, 66அ, 47அ, 50.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
கோவை
அருகிலுள்ள விமான நிலையம்:
கோவை
தங்கும் வசதி:
கோயம்புத்தூர்
கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

இன்றைய கோபுரதரிசனம்சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்.

இன்றைய கோபுர
தரிசனம்

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்.

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*
ராஜேந்திர சோழீஸ்வரர்
*உற்சவர்:*
சோமாஸ்கந்தர்
*அம்மன்/தாயார்:*
ஞானாம்பிகை
*தல விருட்சம்:*
வில்வம்
*தீர்த்தம்:*
தெய்வபுஷ்கரணி
*பழமை:*
1000-2000 வருடங்களுக்கு முன்
*புராண பெயர்:*
இந்திரஅவதாரநல்லூர்
*ஊர்:*
இளையான்குடி
*மாவட்டம்:*
சிவகங்கை
*மாநிலம்:*
தமிழ்நாடு
*திருவிழா:*

*மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை.*

*தல சிறப்பு:*

*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி- 630 702,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 4564 - 268 544, +91- 98651 58374.*

*பொது தகவல்:*

*சிவன் சன்னதிக்கு பின்புறம் வெங்கடேசப்பெருமாள் தனிச்சன்னதியில் இருக்கிறார்.*

*கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் மட்டும் காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.*

*பிரகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு சன்னதி இருக்கிறது.*

*பிரார்த்தனை:*

*பிறருக்கு உதவி செய்யும் குணம் வளரவும், உணவிற்கு பஞ்சமில்லாத நிலை உண்டாகவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அன்னம் படைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.*

*தலபெருமை:*

*தண்டுக்கீரை நைவேத்யம்:*

*இக்கோயிலில் மாறநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. அன்னதானம் செய்து சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு, "பசிப்பிணி மருத்துவர்' என்ற சிறப்புப்பெயர் உண்டு. குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்.*

*இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்' (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.*

*தெய்வானையுடன் முருகன்:*

*சுவாமி, அம்பாள் ஞானாம்பிகை இருவருக்கும் தனித்தனி வாசல் உள்ளது. அம்பாள், சிவனுக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஞானம் தருபவளாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.*

*குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் முருகன், தெய்வானையுடன் இருக்கிறார். உடன் வள்ளி இல்லை. இந்திரன் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலமென்பதால், தெய்வானை மட்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.*

*தல வரலாறு:*

*மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி பூலோகம் வந்த இந்திரன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்டான். அப்போது இங்கும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.*

*இவ்வூரில் வசித்த இளையான்குடி மாறனார் என்ற செல்வந்தர், சிவன் மீது தீராத அன்பு கொண்டவராக இருந்தார். அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரை சோதிக்க எண்ணிய சிவன், மாறனாரின் செல்வத்தை குறைத்து வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் மாறனார், அடியார்களுக்கு அன்னமிடுவதை நிறுத்தவில்லை.*

*ஒருநாள் இரவில் சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு படைக்க வீட்டில் உணவு ஏதுமில்லை. ஆனாலும் கலங்காத மாறனார், வயலுக்குச் சென்று அன்று காலையில் விதைத்த நெல்லை, எடுத்து வந்தார். அவரது மனைவி அதை உலர்த்தி, அரிசி எடுத்து, அன்னம் மற்றும் கீரை சமைத்தார். அப்போது சிவன் சுயரூபம் காட்டி அவருக்கு முக்தி கொடுத்தார். நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தருளினார். இவருக்கு காட்சி தந்த சிவன், "ராஜேந்திர சோழீஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*

*இருப்பிடம்:*

*பரமக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
பரமக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...

இன்றைய கோபுர தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வேம்பத்தூர் அருள்மிகு சுந்தர ராஜ பெருமாள் ஆலயம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தருமே
இன்றைய கோபுர தரிசனம் 

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வேம்பத்தூர் அருள்மிகு சுந்தர ராஜ பெருமாள் ஆலயம்*

மூலவர்:
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்

அம்மன்/தாயார்:
பூமிநீளா தேவி

உற்சவர்:
ஸ்ரீதேவி,பூதேவி

பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:
வேம்பத்தூர்

மாவட்டம்:
சிவகங்கை

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
ஆவணி திருவோணம், புரட்டாசி கடைசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி.

தல சிறப்பு:
சுதையாலான பிரம்மாண்ட திருமேனி.

திறக்கும் நேரம்:
காலை6- 11-மணி, மாலை5 - இரவு 8 மணி.

முகவரி:
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில்,வேம்பத்தூர் - 630 565.சிவகங்கை மாவட்டம்.

போன்:
+91- 4575- 236 284, 236 337 97903 25083

பொது தகவல்:
ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.

பிரார்த்தனை:

மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

இங்குள்ள பெருமாள், இடது கையால் நம்மை வர வழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார். இந்த பெருமாளை சிற்ப சாஸ்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பு உள்ள முறைப்படி, உளி கொண்டு செதுக்காமல் கல்லையே கொண்டு செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். 

பெருமாளை செல்வத்துக்கு அதிபதியாக காட்டுவதுண்டு. ஆனால், இத்தல பெருமாள் கல்வி, செல்வம் இரண்டிற்குமே அதிபதியாக உள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப்புலவரும் இவரை வணங்கி தங்களது புலமை மேலும் சிறக்குமாறு வழிபட்டு சென்றுள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

இவர்கள் தவிர தமிழ்சங்க புலவர்களில் ஒருவரான வேம்பத்தூர் குமரனார் அகநானூறில் 157வது பாடலையும்,புறநானூறில் 317வது பாடலையும், தமிழ்சங்க புலவர்களில் மற்றொருவரான வேம்பத்தூர் கண்ணன் கூத்தனார் குறுந்தொகையில் 362வது பாடலையும், சுந்தராஜ பெருமாளை வழிபட்டு பாடியுள்ளார்கள். 

பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கவிராஜ பண்டிதர் இந்த பெருமாளை வழிபட்டு ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலஹரி மற்றும் ஆனந்த லஹரியை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அத்துடன் இவர் மானாமதுரை ஆனந்தநாயகி மாலையும், வேம்பத்தூர் வாராஹியின் மேல் புவனாம்பிகை கலை ஞான தீபமும், மேல கொடுமனூர் முருகன் மீது ஞான உலாவும் பாடியுள்ளார். வேம்பத்தூர் பெருமாளின் கருணையால் கவிராஜபண்டிதர் பெற்ற கவித்திறமையை அறிந்த மதுரை மீனாட்சி, பண்டிதர் காசி சென்ற போது அவருக்கு மகளாக இருந்து சேவை புரிந்திருக்கிறாள்.

மதுரை மீனாட்சியே சேவை செய்யும் அளவுக்கு புலமைதரக்கூடிய வள்ளல் தான் வேம்பத்தூர் பெருமாள். அத்துடன் 16ம் நூற்றாண்டு கவிகாலருத்ரர், 17ம் நூற்றாண்டு வீரை ஆளவந்தார் மாதவபட்டர், வீரை அம்பிகாபதி, 18ம் நூற்றாண்டு கவிக்குஞ்சரபாரதி, 19ம் நூற்றாண்டு கவிசங்கர சுப்பு சாஸ்திரிகள், கவி சங்கரநாராயணய்யர், உ.வே. சாமிநாதய்யர், சிலேடைப்புலி பிச்சுவய்யர் ஆகியோர் இத்தல பெருமாளின் அருளால் பெரும் புலவர்களாக திகழ்ந்தனர்.

கூப்பிட்டு அருள்பவர்:

ஆகூய் வரதராக பெருமாள் கருவறையில் வீற்றிருக்கிறார். ஆகூய் வரதர் என்றால் இடக்கையால் வா என்று அழைத்து வலக்கையால் அருள்பாலிப்பவர் என்று பொருள். இடதுகை விரல்களை வளைத்து, அருகில் நம்மை அழைத்து, வலக்கையால் அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் இருகைகளும் சங்கு, சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன. திருமகள் பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கிறாள். பூமிதேவியும், நீளாதேவியும் இருபுறத்திலும் உடன் காட்சி தருகின்றனர்.

விண்ணகரக் கோயில்:

திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களில் வைகுண்டத்தை இப்பூவுலகில் காணமுடியாது. ஆனால், வேம்பத்தூர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு விண்ணகரம் என்றும் பெயருண்டு.

கல்வெட்டுகளில் இத்தலம் புறவரி விண்ணகரம், ராஜேந்திர விண்ணகரம், ஸ்ரீவிஜய மாணிக்க விண்ணகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

மாலையில் மந்திரவிபூதி:

இங்கு தினமும் சுதர்சன சக்கரத்தை விபூதியில் இட்டு விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் இந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்நொடிகளைப் போக்கும் மருந்தாக இதனைப் பூசிக் கொள்கின்றனர். அரியும் சிவனும் ஒன்றே என்ற அடிப்படையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

பூமியில் கிடைத்த பூவராகர்:

இங்குள்ள பூவராகப்பெருமாள் திருப்பணிவேலையின் போது, பூமிக்கடியில் கிடைக்கப்பெற்றார். பூமாதேவியை மடியில் ஏந்திய இவரது திருமுகம் தேவியை நோக்கி உள்ளது. சர்க்கரைப் பொங்கலும், கோரைக்கிழங்கு நைவேத்யமும் ரேவதி நட்சத்திரத்தில் நைவேத்யம் செய்யப்படுகிறது. பக்தர்கள், இவரிடம் தங்கள் குறையை ஒரு தாளில் எழுதி விண்ணப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை அதைக் கோயிலில் பாதுகாக்கின்றனர். குறை நிவர்த்தியானதும், பூவராகருக்கு பூச்சொரிந்தோ (உதிரிப்பூக்களை கொட்டுவது), பூப்பந்தல் இட்டோ நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கல்வியருளும் ஹயக்ரீவர்:

கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். சரஸ்வதிதேவியின் குருவான இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இவருக்கு வியாழக்கிழமை தேன் அபிஷேகமும், ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்பாகும். கல்வியில் முன்னேற்றம் பெற நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்குகின்றனர். பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிஆகியோரும் வீற்றிருக்கின்றனர். கருடாழ்வார் கைகூப்பிய படி மூலவர் எதிரே காட்சிதருகிறார்.

தல வரலாறு:

கவிகால ருத்ரர் என்ற புலவர் திருமால் பக்தராக விளங்கினார். பெருமாள் அவரது கனவில் தோன்றி, அடியெடுத்துக் கொடுத்து பாடும்படி அருள்புரிந்தார். புலவர் பெருமாளிடம், அவ்விடத்தில் தங்கும்படி வேண்டிக்கொண்டார். பெருமாளும் அங்கே தங்கினார். பாண்டிய மன்னன் ஜடாவர்ம குலசேகரன் கோயில் நிர்மாணித்தான். சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. காலவெள்ளத்தில் கோயில் சிதிலமடைந்தது. பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது.

முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்ட போது, கடும் வறட்சி ஏற்பட்டது. இவன் சோழ இளவரசியைத் திருமணம் செய்திருந்தான்.சோழநாட்டில் நீர் நிறைந்து பயிர் விளைந்து செழிப்பாக இருக்கும் பூமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பாண்டியன். இவன் தன் மாமனாரிடம், "" எங்கள் நாட்டில் ஏற்பட்ட வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்? என்றான்.""காசியிலிருந்து 2008 அந்தணர்களை அழைத்து வந்து உன் நாட்டில் யாகம் செய்தால் மழை பொழியும். பயிர் செழிக்கும்,'' என்றார். சோழன்.யாகம் நடத்த 2008 அந்தணர்கள் குடும்பத்துடன் வந்தனர். யாகம் சிறப்பாக நடந்து மழை பொழிந்தது. விளைச்சல் பெருகியது. மன்னனுக்கு அளவில்லாத ஆனந்தம். யாகம் செய்த அந்தணர்களுக்கு அவர்களது பெயரிலேயே நிலம் கொடுத்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். 

நிலப்பட்டா கொடுக்கும் போது, 2007 அந்தணர்கள் வந்து விட்டனர்.2008வது அந்தணரான கணபதி என்பவரை மட்டும் காணவில்லை. மன்னனுக்கு வருத்தம். என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த முழு முதற்கடவுளான விநாயகரே, அந்தணர் வடிவில் நேரில் வந்து ""நான் தான் கணபதி'' என்று கூறி நிலத்தை பெற்றுக்கொண்டார்.அப்படி பெற்றுக்கொண்ட நிலம் தான் வேம்பத்தூர். இந்த கணபதி ஊரின் குளக்கரையில் இன்றும் 2008 கணபதி'' என்ற பெயரில் வீற்றிருந்து வேதம் சொல்லி தருவதாக ஐதீகம்.இங்குள்ள மக்களில் பலர் பண்டிதர்களாகவும், ஆகம சாஸ்திரங்களிலும், மருத்து வத்திலும் வல்லுனர்களாகவும் விளங்குகிறார்கள்.

அமைவிடம்:
மதுரை- ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை
தங்கும் வசதி:
மதுரை

கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

இன்றைய கோபுர‌ தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வைரவன்பட்டி அருள்மிகு வைரவன்சுவாமி ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம்
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வைரவன்பட்டி அருள்மிகு வைரவன்சுவாமி ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

வளரொளிநாதர்(வைரவன்)

*அம்மன்/தாயார்:*

வடிவுடையம்பாள்

*தல விருட்சம்:*

ஏர், அளிஞ்சி

*தீர்த்தம்:*

வைரவர் தீர்த்தம்

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*புராண பெயர்:*

வடுகநாதபுரம்

*ஊர்:*

வைரவன்பட்டி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.*

*தல சிறப்பு:*

*இது ஒரு பைரவர் தலமாகும், நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி - 630 215சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91-4577- 264 237*

*பொது தகவல்:*

*தலவிநாயகர்: வளரொளி விநாயகர்.*

*ராஜகோபுரம்: ஐந்து நிலை*

*பிரார்த்தனை:*

*எதிரி பயம், கிரக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.*

*தலபெருமை:*

*இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.*

*பைரவர் சிறப்பு:*

*அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*தோஷம் நீக்கும் பல்லி:*

*அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது.*

*தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.*

*தல வரலாறு:*

*சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.*

*ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிஎறிந்தார்.*

*இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.*

*அமைவிடம்:*
*திருப்புத்தூரில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. காரைக்குடி செல்லும் பஸ்கள் இவ்வழியே செல்கின்றன.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குட
*கோபுர தரிசனம் தொடரும்...
*வாழ்க வளமுடன்...
*வாழ்க வையகம்..

இன்றைய கோபுர‌ தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

திருத்தளி நாதர்

*உற்சவர்:*

சோமாஸ்கந்தர்

*அம்மன்/தாயார்:*

சிவகாமி அம்மன்

*தல விருட்சம்:*

கொன்றை

*தீர்த்தம்:*

ஸ்ரீதளி தீர்த்தம், சிவகங்கை

*ஆகமம்/பூஜை:*

சிவாகமம்

*பழமை:*

1000-2000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

புத்தூர், திருப்புத்தூர்

*ஊர்:*

திருப்புத்தூர்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*பாடியவர்கள்:*

*சம்பந்தர், அப்பர், அருணகிரியார்*

*தேவாரப்பதிகம்*

*நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.*

*திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.*

*திருவிழா:*

*சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம்.*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*நிர்வாக அதிகாரி, அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்-630211.சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 94420 47593.*

*பொது தகவல்:*

*இத்தலத்தில் உள்ள நடராஜர் கவுரி தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தலவிநாயகரின் திருநாமம் பொள்ளாப்பிள்ளையார்.*

*வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான்.*

*தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.*

*இவனுக்கு சித்திரை மாதத்தில் இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், "யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர்.*

*ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார்.*

*இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார்.*

*நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இப்படி, பலதரப்பட்ட விசேஷங்களை அடக்கியது இந்தக்கோயில்.*

*பிரார்த்தனை:*

*குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.*

*அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் "யோகபைரவராக' காட்சி தருகிறார்.*

*இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.*

*யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்.*

*தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.*

*கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், "அஷ்டபைரவ யாகம்' நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.*

*தல வரலாறு:*

*முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.*

*புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.*

*புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*மதுரையிலிருந்து 70 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி, மதுரை
*அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...
*வாழ்க வையகம்...*