ஞாயிறு, 19 ஜனவரி, 2025

காசி ஹல்வா செய்வது எப்படி....?

காசி ஹல்வா செய்வது எப்படி....?


தேவையான பொருள்கள்:

மஞ்சள் (அ) வெள்ளை பூசணி - ஒரு துண்டு
குங்கும‌ப்பூ - 10 இதழ்கள்
நெய் - 100 மில்லி
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - 10

செய்முறை:

பூசணியைத் துருவிக் கொள்ளவும்.

துருவிய‌ பூசணியை துணியில் போட்டு நன்கு முறுக்கிப் பிழியவும்.

பிழிந்த‌ தண்ணீர் தனியாகவும், பூசணி சக்கையைத் தனியாகவும் வைக்கவும்.

வாணலியில் பூசணி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க‌ விடவும்.

நன்கு கொதித்ததும் பூசணி சக்கையைச் சேர்க்கவும்.

பிறகு குங்கும‌ப்பூ, ஏலக்காய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி, மூடி போட்டு பச்சை வாசம் போக‌ நன்கு வேக‌ வைக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறிவிடவும்.

பச்சை வாசம் போனதும் நெய் சேர்த்துக் கிளறவும்.

ஹல்வா நன்கு சுருண்டு வந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு நெய்யில் வறுத்த‌ முந்திரி (அ) பாதாம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான‌ காசி ஹல்வா தயார்.

குங்கும‌ப்பூ நல்ல‌ நிறத்தை தரும். அதனால் கலர் பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

தண்ணீர் பிழிந்து தனித்தனியாக‌ச் செய்வதால் க்ரஞ்சியாக இருக்கும்.

நேந்திர வாழைப்பழ ஜாமுன் செய்வது எப்படி....?

நேந்திர வாழைப்பழ ஜாமுன் செய்வது எப்படி....?


தேவையான பொருள்கள்:

நேந்திரம் பழம் - 3
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய் - 2
குங்குமப்பூ (அ) ஃபுட் கலர் - சிறிது
நெய் (அ) எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

தோல் கறுத்த நன்கு கனிந்த வாழைப்பழமாக எடுத்துக் கொள்ளவும்.

அதை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜீரா தயார் செய்யவும். அதில் புட் கலர் மற்றும் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.

கடாயில் பொரிக்க தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய விடவும்.

நறுக்கிய வாழைப்பழத்துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும்.

அவை நன்கு சிவந்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும்.

அதை ஜீராவில் போட்டு அரை மணி நேரம் ஊறியதும் எடுக்கவும்.

சுவையான நேந்திர வாழைப்பழ ஜாமுன் ரெடி.

சிக்கன் குழம்பு சப்பாத்தி வறுவல் செய்வது எப்படி....?

சிக்கன் குழம்பு சப்பாத்தி வறுவல் செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள்: 

சிக்கன் குழம்பு 
சப்பாத்தி 
பெரிய வெங்காயம் 
தக்காளி 
இஞ்சி-பூண்டு விழுது 
பச்சை மிளகாய் 
சிக்கன் மசாலா தூள் 
மிளகுத்தூள் 
நல்லெண்ணெய் 
சோம்பு 
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 

செய்முறை:

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். 

மேலும், பொடியாக வெட்டிய இரண்டு சப்பாத்தி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 

பின்னர், ஒரு கப் சிக்கன் குழம்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

மட்டன் குழம்பு பரோட்டா வறுவல் செய்வது எப்படி.....?

மட்டன் குழம்பு பரோட்டா வறுவல் செய்வது எப்படி.....?


தேவையான பொருட்கள்:

மட்டன் குழம்பு 
பரோட்டா 
பெரிய வெங்காயம் 
தக்காளி 
இஞ்சி-பூண்டு விழுது 
பச்சை மிளகாய் 
மட்டன் மசாலா தூள் 
மிளகுத்தூள் 
நல்லெண்ணெய் 
சோம்பு 
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 


செய்முறை:

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். 

மேலும், பொடியாக வெட்டிய இரண்டு பரோட்டா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 

பின்னர், ஒரு கப் மட்டன் குழம்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

மட்டன்-முட்டை குழம்பு செய்வது எப்படி....?

மட்டன்-முட்டை குழம்பு செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள்:

மட்டன் 
முட்டை 
சின்ன வெங்காயம் 
தக்காளி 
காய்ந்த மிளகாய் 
மிளகு
தனியா தூள் 
இஞ்சி 
பூண்டு
சீரகம் 
சோம்பு 
தேங்காய் 
மஞ்சள் தூள் 
உப்பு 
எண்ணெய் 
கறிவேப்பிலை 


செய்முறை:

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஆறு காய்ந்த மிளகாய், நான்கு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

ஆறிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.

பொடியாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் இஞ்சி, நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் துருவிய தேங்காய், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 300 கிராம் மட்டன், வேக வைத்து தோலை நீக்கிய நான்கு முட்டை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். 

பின்னர், தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இஞ்சி க்ரீன் டீ செய்வது எப்படி....

இஞ்சி க்ரீன் டீ செய்வது எப்படி....


தேவையான பொருள்கள்

க்ரீன் டீ பேக் - 1
இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சர்க்கரை (அ) சீனி - ருசிக்கு

செய்முறை

பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி கலந்து கொதிக்க விடவும்.

இதில் சர்க்கரை கலந்து வடிகட்டவும்.

கப்பில் டீ பேக் வைத்து இந்த சூடான நீர் சேர்த்து 2 நிமிடம் விட்டு குடிக்கவும்.

இதையே சுக்கு சேர்த்தும் செய்யலாம். இஞ்சி, சுக்கு அளவை உங்கள் ருசிக்கு ஏற்றார் போல மாற்றி டீ போடவும்.