செவ்வாய், 25 அக்டோபர், 2022

இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது

இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மொத்தம் 1 மணி 45 நிமிடங்கள் சூரிய கிரகணம் தென்படும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

➦5 பிரிவுகளாக பிரிந்த சூரியன்

➦நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம்

➦இடம் : சுவீடன் வனப்பகுதி


விதிகள் – இந்த விதிகளானது எந்த காலத்திலும் பின்பற்ற வேண்டியவை:
[1] வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
[2] அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.
[3] கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.
[4] கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.
[5] முடிந்தவரை குலதெய்வத்தையும் – முன்னோர்களையும் – இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.
[6] 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.
[7] கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் – மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்
[8] கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்
[9] கிரகணம் நடக்கும் போது உணவுப் பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்.
[10] கிரகணம் ஆரம்பிக்கும் போது தர்ப்பணம் செய்ய வேண்டும்.

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவில் நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். 

பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வருகிற 25ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4ஆம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

காளகஸ்தி சிவன் கோவில்: காளஹஸ்தி கோவில் இதே போல ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது. இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. 

ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு கேது பரிகார தலமாக உள்ளது. எனவே கிரகணத்தால் கோவிலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய, சந்திர கிரகணத்தன்று சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்களின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்தியாவில் சூரிய கிரகணம்

இந்தியாவில் சூரிய கிரகணம்: 
தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது.

சென்னை: இந்தியாவில் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. ‛பகுதி சூரிய கிரகணம்' இன்று (அக்.,25) இந்தியா, ரஷ்யா, கஜகிஸ்தான், வட அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவில் மும்பை, டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.

சென்னையில் மாலை 5:13 மணிக்கு கிரகணம் தெரிந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு மட்டும் மேற்கு வானில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் அதற்கேற்ற பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.