Menu

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மனம் பற்றிய தத்துவங்கள்

மனம் பற்றிய தத்துவங்கள்
MANAM QUOTES IN TAMIL


இந்த பதிவில் “மனம் பற்றிய தத்துவங்கள்” பார்க்கலாம்.

மனம் பற்றிய தத்துவங்கள்
மனம் தத்துவம்
Manam Quotes In Tamil
மனம் பற்றிய தத்துவங்கள்

1.மனம் நேர்மையாக.. ஒழுக்கத்துடன்.. தூய்மையாக.. நம்பிக்கை மிக்கதாக இருந்தால் நாம் கடவுளை தேடி ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.!

2. மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை.. விழிப்பு நிலையில் மட்டும் அல்ல.. உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதே இல்லை.

3. நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனம் தான்.. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

4. மனம் எதை எண்ணுகிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது.. நல்லவற்றை மட்டுமே மனிதன் மனதில் எண்ண வேண்டும்.

5. தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்.. ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.

6. இறைவனை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எவரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும் கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும்.


7. மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.

8. அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.

9. நோயால் உடல்நலம் குன்றுவது போல.. தீய எண்ணங்களால் மனநலம் குன்றுகிறது.

10. மனதில் கடவுளை நினைத்து அறிவு என்ற தீபம் ஏற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான சிந்தனைகள் புகுவதில்லை.

11. மனதில் உண்டாகும் அற்ப சிந்தனைகளைநீக்கினால் மனதிலுள்ள தீய நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.

Manam Quotes In Tamil

12. நல்ல உள்ளத்துக்கு நல்லதாகவும், கெட்டஉள்ளத்துக்கு கெட்டதாகவும், தெய்வீக சிந்தனை கொண்ட மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.

13. உள்ளத்தில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே.. கல்லான இதயம் கூட கரையும்.. அன்பு மழையாய் பொழியும் போது.!

14. ஒரு ஆணை உண்மையாக நேசிக்கும் எந்த ஒரு பெண்ணாலும் இன்னொரு ஆணிடம் மனம் விட்டு பேச முடியாது.

15. பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!

16. வானிலை மாற்றத்தை விட மிக வேகமாக இருக்கும் மனிதனின் மனநிலை மாற்றம்.

17. பார்க்கும் அனைத்திலும் கண்கள் ஆசை வைத்தாலும்.. மனம் அதில் சிறந்ததை தேடி தான் ஆசை வைக்கிறது.

18. சந்தோஷமும் கவலையும் மாறி மாறி வந்தால் தான் நம் மனது பக்குவப்படும் சந்தோஷத்தில் ஆடவும் கூடாது. கவலையில் வாடவும் கூடாது.


19. அமைதியாக இருப்பவர்களை கோழை என்று எண்ணி விடாதீர்கள்.. தேவையற்ற வார்த்தைகளை விடாமல் அமைதியாக கடந்து செல்வதற்கு அதிக மனஉறுதி தேவை.

20. யாரும் உடன் வரப்போவதில்லை என்ற போதிலும் எல்லோர் பின்னாலும் செல்லத் துடிக்கிறது பேரானந்தம் தேடும் பிள்ளை மனம்.

21. அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள். பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

22. பசி சென்ற பின் சாப்பிட அழைப்பதும்.. மனம் உடைந்த பின் மன்னிப்பு கேட்பதும் ஒன்று தான் இரண்டுமே பயன் அற்றது.

சனி, 10 செப்டம்பர், 2022

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

இந்த தொகுப்பு வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் பற்றியது. இந்த தத்துவங்கள் வாழ்க்கைக்கு தேவையான சிறந்த வரிகளாக இருக்கும்.

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.


மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!


வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!


முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!


இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!


யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!



வாய்ப்பு என்பது
பறித்துக் கொள்வதில்லை,
திறமையால் நாம்
தேடிக்கொள்வது..!
திறமையில் கவனம்
செலுத்து வாய்ப்பு
உன்னைத் தேடி வரும்..!


கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!


எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!


உன் தவறை நீ
உணர்ந்து கொண்டு..
நீ அமைதியாகும் போது
தாழ்வதில்லை..
உயருகிறாய்..!


பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!



என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!


நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!


தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!


ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!


கண்ணீரின் மொழி அழுத
கண்களை உடையவனும்
மட்டுமே தெளிவாக
புரியும்..!


நீ தேவைப்படும் போது
தேடப்படுவாய் அது வரை
அமைதியாக காத்திரு..!


மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!



நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!


போராடிக் கிடைக்கும்
தோல்வி கூட கொண்டாட
வேண்டிய வெற்றி தான்
என்பதை என்றும்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!


எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் அது தான்
வாழ்க்கையில்
சந்தோசத்தை
உருவாக்கும்..!


சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal

தோல்வியை கண்டு அஞ்சினால்
வெற்றியை தழுவ முடியாது..
அச்சம் தவிர்..!

தைரியம் என்ற ஒற்றை
மந்திரம் உள்ளத்தில்
இருக்கும் வரை..
வாழ்க்கைப் பயணத்தில்
பயமும் இல்லை..
பாரமும் இல்லை..!

பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்..
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும் சிரித்துக்
கொண்டே இருங்கள்..!

உன்னிடம் என்ன
இருக்கிறதோ.. அதற்கு
நன்றியுடன் இரு.. ஏனெனில்
இங்கு பலர் எதுவுமே இல்லாமல்
வாழ்க்கையை கழிக்கிறார்கள்..!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
இரண்டே வழிகள் தான்..
ஒன்று சூழ்நிலையை
மாற்றுங்கள்.. இல்லையனில்
சூழ்நிலைக்கேற்ப நீங்கள்
மாறி விடுங்கள்..!

வெற்றி பெரும் வரை குதிரை
வேகத்தில் ஓடு.. வெற்றி
வந்த பிறகு குதிரையை விட
வேகமாக ஓடு.. அப்பொழுது
தான் வெற்றி உன்னிடம்
நிலைத்திருக்கும்..!


நீ வெற்றி பெற்றால்
சாதனையாளன் பெறாவிட்டால்
பிறருக்கு போட்டியாளனே தவிர
தோல்வியாளன் இல்லை..!

வெறும் பெருமைக்காக எதையும்
செய்யாதே.. உன்
மனநிறைவுக்காக உனக்கு
பிடித்ததை பெருமையோடு
செய்..!

நடப்பதை மாற்ற முடியாது..
ஆனால் நினைப்பதை
மாற்றிக் கொள்ளலாம்
நடக்காது என்று
தெரியும் போது..!

பிறரை பற்றி அதிகம்
தெரிந்து கொள்ளவும்
வேண்டாம்.. உன்னைப் பற்றி
அதிகம் பிறருடன் பகிர்ந்து
கொள்ளவும் வேண்டாம்..
இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு
கேடு விளைவிக்கும்..!

என்றும் நீங்கள் நீங்களாக
இருங்கள்.. விரும்பினால்
பழகட்டும்.. வெறுத்தால்
விலகட்டும்..!


போராடு… இவனால் இதை
செய்ய முடியாது என்று
சொன்னவர்கள்.. இதை
எப்படி செய்தாய்
என சொல்லும் வரை..!

இல்லையே என்று ஒருபோதும்
வருந்தாதீர்கள்.. இருந்து
இருப்பதை விட.. இல்லாமல்
இருப்பதின் வலி குறைவு தான்..!

அனைவருக்கும் வரலாற்றில்
ஓர் தனி பக்கம் உண்டு..
அந்த பக்கத்தை நிரப்புவதும்
காலியாக வைத்திருப்பதும்
அவரவர் முயற்சியில்
தான் உள்ளது..!

நிறைய துன்பங்களை
சுமந்தாலும் புன்னகைக்க
மறந்து விடாதீர்கள்..
ஒரு நாளிலே வாடிவிடும்
பூக்கள் கூட அழுவதில்லை..!

நீந்த முடியாத மீன்களை
நதி ஒதுக்கி விடும்..
விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதனை
வெற்றி ஒதுக்கிவிடும்..!

உன் கடந்த காலத்தை
நினைத்து வருந்தாதே..
அந்த காலத்திற்கு
நீ செல்ல போவதில்லை..!

நீ சரியாக இருந்தால்
கோவப்படுவதிற்கு அவசியம்
இல்லை.. நீ தவறாக இருந்தால்
கோவப்படுவதில் அர்த்தம்
இல்லை..!


இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்..
சிந்தித்து செயல்படு..!

விரைந்து வந்தேன் என்பதில்
இல்லை.. வீழ்ந்தாலும்
எழுந்து வந்தேன் என்பதில்
தான் உள்ளது நம் பெருமை..!

உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்.. நேர்மை
இருக்கும் இடத்தில் நல்ல
நடத்தை இருக்கும்.. அதிக
அன்பு இருக்கும் இடத்தில்
கோபம் இருக்கும்..!

தவறான பாதையில்
வேகமாக செல்வதை விட..
சரியான பாதையில்
மெதுவாக செல்..!

உன்னை எவர் புரிந்து
கொள்ளாவிட்டாலும்
பரவாயில்லை.. உன்
வழிகளில் நீ
உண்மையாக இரு..!

காலை வணக்கம் தத்துவம்

காலை வணக்கம் தத்துவங்கள்

என்ன நடந்தாலும் பரவாயில்லை
என்னும் ஒரு திமிர் மட்டும்
இருந்தாலே போதும் வாழ்க்கையை
சந்தோஷமாக வாழ்ந்து
விட்டு போகலாம்.
இனிய காலை வணக்கம்

சிறந்த பாடத்தை சரியான
நேரத்தில் கற்பிக்க தவறாத
ஒரே ஆசான் காலம்.
இனிய காலை வணக்கம்.

வாழ்க்கையில் பிடித்த
வாழ்க்கையை வாழ்பவன்
அதிஷ்டசாலி எந்த வாழ்க்கையாக
இருந்தாலும் பிடித்து
வாழ்பவன் புத்திசாலி.
இனிய காலை வணக்கம்.

தெரிந்து கொள்ளுங்கள்
உங்களை பின் தொடர்ந்து
வருபவர்கள் அனைவருமே
உங்கள் ரசிகர்கள் அல்ல..!
இனிய காலை வணக்கம்.

ஒருவர் உங்களை எப்போதும்
குறை சொல்லிக் கொண்டிருந்தால்
அமைதியாக இருங்கள்..
ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை விட
சில்லறைகளுக்கு சத்தம்
அதிகம் தான்..!
இனிய காலை வணக்கம்.

எந்த அவமானத்தையும் வலியாய்
எடுத்துக் கொள்ளாதே..
வழியாய் எடுத்துக்கொள்..!
இனிய காலை வணக்கம்.

உன் வலியை உணர்ந்தால்..
நீ உயிரோடு இருக்கிறாய்
என்று அர்த்தம்..
பிறர் வலியை உணர்ந்தால்..
நீ மனிதனாக இருக்கிறாய்
என்று அர்த்தம்..!
இனிய காலை வணக்கம்.

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும்,
சோதிக்கப்பட்டவனும்
பாவப்பட்டவன் அல்ல..
பக்குவப்பட்டவன்..!
இனிய காலை வணக்கம்.

நல்லவர்களுடன் பழகினால்
ஏமாற்றாமல் இருக்க
கற்றுக் கொள்வாய்..
கெட்டவர்களுடன் பழகினால்
ஏமாறாமல் இருக்க
கற்றுக் கொள்வாய்..!
இனிய காலை வணக்கம்.

உனக்கு கிடைத்திருக்கும்
வாழ்க்கை எத்தனை பேருக்கு
கிடைக்கவில்லை என்று
நீ தெரிந்து கொண்டால்
ஆண்டவனுக்கு நன்றி சொல்ல
மட்டுமே கோவிலுக்கு போவாய்..!
இனிய காலை வணக்கம்.

தவறேதும் செய்யாமல்
தன்மானத்தை சீண்டும்
நிலை வந்தால் எவரையும்,
எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள்
தவறில்லை..!
இனிய காலை வணக்கம்.

உன் மதிப்பை முடிவு செய்ய
வேண்டியது நீ தான்..
உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல
இனிய காலை வணக்கம்.

தன் மதிப்பு தெரிந்தவன் பிறர்
காலில் விழ மாட்டான்..
காலத்தின் மதிப்பு தெரிந்தவன்
பிறர் தயவில் வாழ மாட்டான்..!
இனிய காலை வணக்கம்.

நீங்கள் உங்கள் கனவுகளுக்காக
உழைக்கவில்லை எனில்
அடுத்தவர்கள் உங்களை
வேலைக்கு அமர்த்தி அவர்களது
கனவுகளுக்காக உழைக்க வைப்பார்கள்
இனிய காலை வணக்கம்.

தத்துவம்

முயற்சிக்கு நீ அடிமை என்றால்
வெற்றி உனக்கு அடிமை..
பணிவுக்கு நீ அடிமை என்றால்
புகழ் உனக்கு அடிமை..!
இனிய காலை வணக்கம்.

உலகில் பலகோடி தெய்வங்கள்
இருக்கலாம் ஆனால் மனிதன்
பயந்து வாழ வேண்டிய தெய்வம்..
“மனச்சாட்சி”.
இனிய காலை வணக்கம்.

குனிவதால் எழுத்துக்கள் நிமிரும்..
பணிவதால் வாழ்க்கை உயரும்..!
இனிய காலை வணக்கம்.

மத்தவங்க பொறாமை படுற
அளவுக்கு வாழணும்னு அவசியம்
இல்லை.. பெத்தவங்க
பெருமை படுற அளவுக்கு
வாழ்ந்தாலே போதும்..!
இனிய காலை வணக்கம்.

கடந்து போன நாட்களுக்காக
கவலைப்படாதீர்கள்..
நடந்து செல்ல நல்ல நாட்கள்
நிறைய உண்டு..
இன்று போல் என்றும்..!
இனிய காலை வணக்கம்.

பொறுத்து போகின்றவன்
அழிந்திடவும் மாட்டான்..
பொறாமை கொண்டவன்
வாழ்ந்திடவும் மாட்டான்..!
இனிய காலை வணக்கம்.

வகுப்பறை கற்றுத்தந்த
பாடத்தை விட..
வாழ்க்கை கற்றுத்தந்த
பாடமே அதிகம்..!
இனிய காலை வணக்கம்.

துன்பங்கள் நிறைந்த
வாழ்க்கையை இன்பங்களாக
மாற்ற வேண்டுமானால்..
அனைத்தையும் ரசிக்க
கற்றுக் கொள்..!
இனிய காலை வணக்கம்.

அன்பானவர்களுக்காக இறங்கி
போவதும் தவறில்லை..
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை..!
இனிய காலை வணக்கம்.

வாழ்நாள் முழுவதும் மந்தை ஆடாக
இருப்பதை விட.. ஒருநாள்
சிங்கமாக வாழ்ந்துவிட்டு போ..!
இனிய காலை வணக்கம்.

வாழ்க்கையில் அன்பை தருபவரை
காட்டிலும் அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்..!
இனிய காலை வணக்கம்.

வியாழன், 17 மே, 2018

தத்துவம்


காந்தி போன்றவர்கள் மனிதன் எப்படி வாழனும் என்பதற்காக சுயசரிதை எழுதினர்! எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் சுயசரிதை எழுதுகிறேன்! -கண்ணதாசன்!-தத்துவம்

தகுதியில்லாதவர்களை ஆதாயத்திற்காக புகழ்வது... துரோகிகளின் செயல்-தத்துவம்

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்... தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.-தத்துவம்