புதன், 19 அக்டோபர், 2022

முந்திரி பிஸ்க

 *முந்திரி பிஸ்கட்*       

 *தேவையான பொருள்கள்*         

மைதா - 150 கிராம், வெண்ணெய் அல்லது டால்டா - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி, முந்திரி பருப்பு - 10         

 *செய்முறை*         

   முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் டால்டா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து கலக்கவும். பிறகு பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். இறுதியில் மைதா மாவை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை ஒரு ஏர்டைட் கன்டைனரில் போட்டு மூடி 2 மணி நேரம் வைத்திருக்கவும்.2 மணி நேரம் கழித்து பிசைந்து வைத்த மாவை எடுத்து சப்பாத்தியை போல் தேய்க்கவும்.சப்பாத்தியை போல் தேய்த்த மாவை வட்டமான பிஸ்கட்களாக வெட்டி எடுக்கவும்.மைக்ரோவேவ் சேஃப் ப்ளேட்டில் பிஸ்கட்களை அடுக்கி அதன் மேல் முந்திரியை வைத்து லேசாக அழுத்தி விடவும். கன்வெக்ஷனில் 200 டிகிரி சூட்டில் 10 அல்லது 12 நிமிடங்கள் வேக விடவும்.பிஸ்கட்கள் பேக் ஆனதும் எடுத்து விடவும்.

ஓட்ஸ் ஆலு பர்பி

 *ஓட்ஸ் ஆலு பர்பி*     

   *தேவையான பொருள்கள்*         

ஓட்ஸ் - ஒரு கப், உருளைக்கிழங்கு மசித்தது - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீனி - 3 கப், பால் பவுடர் - ஒரு கப், ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி       

   *செய்முறை*           

 முதலில் ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது கலர் மாறும் வரை 2 நிமிடம் வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் ஈரம் போக வதக்கி பொடிக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து மிக்ஸியில் மசிக்கவும்.ஓட்ஸ், தேங்காய் துருவல், உருளைக்கிழங்கு, சீனி இவற்றை நன்றாக கலந்து மைக்ரோமீடியமில் 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கலந்து விடவும். ஓரளவிற்கு கலந்து வெந்ததும் இதனுடன் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் மைக்ரோ மீடியமில் வைக்கவும்ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டவும்

சுழியம்

*சுழியம்*       

 *தேவையான பொருள்கள்*       

  கடலை பருப்பு - கால் கிலோ, அச்சு வெல்லம் - கால் கிலோ, மைதா - 200 கிராம், சீனி - 2 தேக்கரண்டி, தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - கால் லிட்டர்         

 *செய்முறை*           

 முதலில் கடலை பருப்பை முக்கால் பதம் வேக வைத்து வடிகட்டவும்.தேங்காய் பூவை வாணலியில் வதக்கி எடுத்து வைக்கவும்.வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும் (இதற்கு பதம் தேவையில்லை)வடிகட்டிய கடலை பருப்பை மிக்ஸியில் பொடிக்கவும். தேங்காய் துருவலையும் ஒரு சுற்று விட்டு சேர்க்கவும். ஏல பொடியையும் சேர்க்கவும்.பொடித்து வைத்த பூரணத்தில் வெல்ல பாகை சேர்த்து கெட்டியாக உருட்டும் பதத்துக்கு பிசையவும்.மைதா மாவில் சிறிதளவு உப்பு, சீனி சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எலுமிச்சைபழ அளவு பூரணம் எடுத்து உருட்டி மைதா மாவில் தோய்த்து போடவும்.சுவையான சுழியம் தயார்.

மைதா கஜூர்

 *மைதா கஜூர்*     

   *தேவையான பொருள்கள்*         

மைதா - ஒரு பெரிய கப், சர்க்கரை - அரை கப், வெண்ணெய் அல்லது டால்டா - நூறு கிராம், ரவை - ஒரு கைப்பிடி அளவு, பால் - தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிது, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு         

 *செய்முறை*           

 தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.மைதாவில் ரவை உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.மைதா ரவை கலவையில் வெண்ணெய சேர்க்கவும்.வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். பிடித்தால் கொழுக்கட்டை பதம் வரும். அப்பொழுது ஏலக்காய், சர்க்கரை சேர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக பாலை தெளித்து பிசையவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பதினைந்து நிமிடம் ஊற விடவும்.பின்னர் அதில் கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி போல் இல்லாமல் சிறிது கனமாக வளர்த்தி விரும்பிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை எடுத்து போட்டு சிவக்க பொரிக்கவும்.கஜூர் ரெடி. ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

ரவா கச்சிக்கா

*ரவா கச்சிக்கா*     

   *தேவையான பொருள்கள்*         

மைதா - 2 கப், ரவை - ஒரு கப், சீனி - ஒரு கப், ஏலக்காய் - 6, கொப்பரை தேங்காய் - 1, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு       

   *செய்முறை*           

 ரவையை வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.மைதாவை சலித்து உப்பு சேர்த்து பூரிக்கு மாவு போல பிசைந்து வைக்கவும்ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, துருவிய தேங்காய், சீனி மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்த்து கலந்து வைக்கவும்.பிசைந்து வைத்த மைதாவில் சிறு உருண்டை எடுத்து பூரிகளாக தேய்த்து நடுவில் ரவா பூரணத்தை வைத்து ஓரங்களை நீர் தொட்டு மூடி விடவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் கச்சிகாவை போட்டு பொரித்து எடுக்கவும்.மாலை நேர சிற்றுண்டிகளாகவும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பவும், சுவையான ரவா கச்சிக்கா தயார். கொப்பரை தேங்காயில் தான் அதிக வாசனை கிடைக்கும். மீந்து போன பூரி மாவில் இது போல் செய்து அசத்தலாம்.

நாட்டுக்கோழி சாப்ஸ்

*நாட்டுக்கோழி சாப்ஸ்*

தேவையானவை:
நாட்டுக்கோழிக் கறி - 500-600 கிராம்
நல்லெண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு கிராம்
பட்டை - ஒரு கிராம்
கிராம்பு - ஒரு கிராம்
அன்னாசிப்பூ - ஒரு கிராம்
ஏலக்காய் - ஒரு கிராம்
பிரிஞ்சி இலை - ஒரு கிராம்
வெந்தயம் - ஒரு கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு விழுது - 30 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
மஞ்சள்தூள் - 2 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மிளகாய்த்தூள் - 30 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் மசாலா - 50 கிராம் 
(துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்)

நாட்டுக்கோழி மசாலா:
சோம்பு - 4 சிட்டிகை
சீரகம் - 3 சிட்டிகை
மிளகு - 15 கிராம்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
(இவற்றை வெறும் சட்டியில் வறுத்து அம்மியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.)

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நாட்டுக்கோழி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்க்கவும். இத்துடன் தேங்காய் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கோழியை வேகவைத்து, சரியான பதத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.