புதன், 12 அக்டோபர், 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
BIRTHDAY WISHES IN TAMIL

உங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாளினை இனியாக மாற்ற இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை (Birthday Wishes In Tamil) மூலம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ளுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை (Birthday Wishes In Tamil)
உன் பிறந்த நாளுக்கு எனக்கு
வாழ்த்துக் கூற விருப்பம்
இல்லை ஏன் தெரியுமா..?
உன்னை நான் முதலில்
கண்ட அதே
இளமையுடன் தான்
இப்போதும் நீ இருக்கின்றாய்..
பின் நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்று
கூடி விட்டதாக எண்ணி
நீ வருந்துவதில் எனக்கும்
விருப்பம் இல்லை.

புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும்
வருவதற்கு.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாம் பிறக்கும் போது
இந்த உலகிற்கு என்ன
கொண்டு வந்தோம்..
பிறருக்கு உதவி செய்தால்
தான் நம் வாழ்வு சிறக்கும்..
உங்கள் பிறந்த நாள் நீங்கள்
பிறந்த நாளாக மட்டும்
இல்லாமல்.. நல்ல செயல்கள்
செய்ய பிறந்த
தொடக்க நாளாக அமைய
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன்.

உங்கள் வாழ்க்கையில்
வசந்தம் வர.. உங்கள்
தடைக் கற்கள் எல்லாம்
படிக்கல்லாக மாற என்
மனதில் இருந்து மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


முடியாது என்ற வார்த்தைக்கு
முற்றுப் புள்ளி வை..
முடியும் என்ற வார்த்தைக்கு
தொடக்கப் புள்ளி வை..
என்றும் வெற்றி உன்னை
தொடர உன் இந்த
பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

துணையாய் எவரும்
தேவையில்லை உன்
துணிவே உனது முழுப் பலம்
வாழ்க்கையில் துணிவோடு
போராடி வெற்றி பெற இந்த
இனிய நாளில் வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நேற்றைய தோல்வி இன்றைய
அனுபவம்.. இன்றைய அனுபவம்
நாளைய வெற்றி.. உங்கள்
வாழ்வில் நீங்கள் நினைத்த
வெற்றிகளை பெற உங்கள்
இனிய பிறந்த நாளில்
மகிழ்வுடன் வாழ்த்துக்களைக்
கூறிக்கொள்கின்றேன்.

இன்று பிறந்த நாள்
காணும் உங்கள் வாழ்வில்
அணைத்து துன்பங்களும்
நீங்கி சந்தோசங்கள் வளர
மனதார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

சந்தோசத்துடனும் மன
நிறைவோடும் உங்கள்
வாழ்க்கை அமைய மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த தின வாழ்த்துக்கள்.


இந்த பிறந்த நாளில்
கடந்து வந்த கஷ்டங்கள்
எல்லாம் மறைந்து
புத்தம் புது வாழ்க்கை
அமைய வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தேனைப் போல இனிமையாய்..
தென்றலைப் போல சுகமாய்
உங்கள் வாழ்வு அமைய
உங்கள் பிறந்த தினத்தில்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலி
HAPPY BIRTHDAY WISHES IN TAMIL WORDS FOR LOVER

இந்த பதிவில் உள்ள பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலி கவிதை வரிகள் மூலம் உங்கள் காதலுக்கு பிறந்தநாள் தினத்திற்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலி
இறைவனின் அன்பும்
ஆசிர்வாதமும் உன்னை
ஆளட்டும்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பே.

நீ இந்த உலகிற்கு
பிறந்தநாளை மட்டுமல்ல
நீ எனக்குள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன்.. என்
காதலுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று உனக்கு பிறந்தநாள்
அல்ல. இந்த உலகிற்கு
தேவதை ஒன்று இறங்கி
வந்த நாள்.. அந்த
தேவதைக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று உலகிலே மிகவும்
அழகான தேவதை ஒன்று
உலகிற்கு வந்த நாள் அந்த
தேவதைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

யோசித்து யோசித்து
பார்த்தேன் பிறந்தநாள்
வாழ்த்துச்சொல்ல
புதுக்கவிதை பிறக்கவில்லை.
புதிதாக பிறந்த நீயே
ஒரு கவிதை தானே..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் காதலே.

அன்பின் தேன் மழை
அழகிய கவிதைக்கு
அன்போடு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பே.


உன் உள்ளம் அன்பால்
நிறையட்டும்..!
உன்உதடுகளில் புன்னகை
மலரட்டும்.. உன் கனவுகள்
வானத்தை தொடட்டும்..
உன் வெற்றிகள்
உன்னை முத்தமிடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பே.

உன் பிறந்தநாளில் உனக்கு
பரிசளிக்க பூ பறிக்க சென்றேன்
மலர்ந்த பூவுக்கு இன்னொரு
பூவை பரிசளிக்காதே என்றது..
அழகிய பூவிற்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கள்ளம் இல்லா
வெள்ளை மனம்..
கடவுள் கொடுத்த
நல்ல குணம்.. என்னை
கவிர்ந்திடுவாள் கரு
விழிகளினால்.. என் கவலை
தீர்ப்பால் இனிய மொழிகளால்
நீ வாழ வேண்டும் என்றும்
சந்தோசமாக.. இனிய
பிறந்த தின வாழ்த்துக்கள்
என் காதலே.

நிலவைக் காட்டி சோறு
ஊட்டினாள் அம்மா..
அந்த நிலவே பூமிக்கு
இறங்கி வந்த நாள் இன்று
அந்த நிலவிற்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறப்பின் நொடிகள்
எப்போதும் அழகானது..
அந்த நொடிகளில் மிகவும்
அழகான நாள் நீ இன்று
பிறந்தநாள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


என் மீது அதீத அன்பு
கொண்ட தேவதை இன்று
அவதரித்த நாள்.. அந்த
தேவதைக்கு என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாம் இருக்கும் இடம்
தொலைவாக இருந்தாலும்..
என் மனதில் நீயும் உன்
மனதில் நானும் மிக
நெருக்கமாகவே இருக்கின்றோம்
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

எனக்காக நீயும்..
உனக்காக நானும்..
நமக்காக நம் காதலும்
எப்போதும் இருக்கும்..
என் உயிர் காதலுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் மனதை
கொள்ளை கொண்ட என்
அன்புக்குரியவளுக்கு
பிறந்த தின வாழ்த்துக்கள்.

அன்பே என்றும் நீ
சந்தோசமாக வாழ உன்
பிறந்த தினத்தில்
மனதார வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்த தின
வாழ்த்துக்கள் அன்பு காதலே.

என் வாழ்க்கை முழுவதும்
என் அன்பை உனக்கு
மட்டுமே கொடுத்திடுவேன்..
என் காதலில் உன்னை
மட்டுமே நான் சுமக்க வேண்டும்..
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் அன்பே.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
PIRANTHANAL VALTHUKKAL SAGOTHARI


இந்த தொகுப்பில் உள்ள (Piranthanal Valthukkal Sagothari) “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி” என்ற கவிதைகள் மூலம் உங்கள் உடன் பிறந்த உடன் பிறவாத சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை கூறிக் கொள்ளுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி (Piranthanal Valthukkal Sagothari)
நீ வேறு நான் வேறு அல்ல..
என் சகோதரியே நாம் எப்போதும்
ஒரு தாய் பிள்ளைகள் தான்..
என் அன்பு சகோதரிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உன் வாழ்வு என்றும் சிறப்பானதாக
அமைய நான் மனதார
வாழ்த்துகின்றேன்.!

நல்லதே நடக்க..
நாளெல்லாம் சிறக்க..
மகிழ்ச்சி பெருக..
உன் பிறந்த தினத்தில் வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சகோதரி.

சகோதரி இருக்கும் சகோதரர்களுக்கு
மட்டும் தான் தெரியும் இப்பிறவியில்
இன்னொரு தாய் சகோதரி மட்டும் தான்
என்று.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சகோதரி.!

ரத்த பந்தம் மட்டுமே அண்ணன்
தங்கை உறவை நிர்ணயிப்பதில்லை..
இரு உயிர்களின் பாச பிணைப்பே
நிர்ணயிக்கின்றது..
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
சகோதரி.

அன்பின் நிலையில் அன்னையை
கண்டேன்.. ஆறுதலின் நிலையில்
நண்பனைக் கண்டேன்.. அனைத்து
நிலையிலும் உன்னைக் கண்டேன்..
இனிய பிறந்த தின
வாழ்த்துக்கள் சகோதரி.

மகள்கள் என்றுமே அப்பாக்களுக்கு
குலதெய்வம் ஆனால் சகோதரர்களுக்கு
மட்டும் அவள் இன்னொரு தாய்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பாசம் பல வகை வேசமில்லா பாசம்
உயர்வகை.. அதில் சகோதரப் பாசம்
என்பது புனிதமான உறவு.. என்
சகோதரிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

பணம் இன்று வரும் நாளை
வந்த வழி சென்று விடும்..
பாசம் மட்டுமே நிலையானது..
என் அன்பு சகோதரிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னை கவனிக்க ஒரு தாய்
போதாது என்று இறைவனால்
அனுப்பப்பட்ட இன்னொரு தாய்
அவள் “என் சகோதரி”.. வாழ்வில்
என்றும் சந்தோசமாக இருக்க உன்
பிறந்த தினத்தில் வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சகோதரி..!

பாதி அன்னையும் அவள் தான்..
பாதி நண்பியும் அவள் தான்..
இனிய பிறந்த தின
வாழ்த்துக்கள் சகோதரி.!

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்
கிடைக்கும் அன்பு எவ்வளவு விலை
கொடுத்தாலும் கிடைக்காத அன்பு..
இனிய பிறந்த தின
வாழ்த்துக்கள் சகோதரி..!


உண்மையான அன்பை சொல்லிப்
புரிய வைக்க வேண்டிய அவசியம்
இல்லை.. அந்த அன்புக்கு
உரியவர்களால் மட்டுமே அதை
உணர முடியும்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்பு என்ற வார்த்தைக்கு ஆயிரம்
அர்த்தம் இருப்பினும் நான் கண்ட
உண்மையான அர்த்தம் அவள் தான்
“என் சகோதரி”.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சகோதரி..!

இந்த உலகில் உண்மையான அன்புக்கு
கிடைத்த பரிசு.. நீ தான் “என் சகோதரி”..
உன் வாழ்வில் எல்லாம் சிறப்பாக அமைய
உன் பிறந்த தினத்தில் வாழ்த்துகின்றேன்..
என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்..!

உறவுகளின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது நீ தான் “சகோதரி”..
உன் பிறந்த தினத்தில் உன் வாழ்வு
சிறக்க நான் மனதோடு
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த தின வாழ்த்துக்கள்..!

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
அப்பா பிறந்தநாள்

உலகில் தந்தைக்கு நிகரான கடவுள் இல்லை. தந்தைக்கு பிறந்தநாளில் இந்த அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் மூலம் வாழ்த்துங்கள்.

அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
அன்பு தந்தைக்கு எனக்காக
வாழ்ந்து என் அனைத்து
கனவுகளும் நிறைவேற
உதவி புரிவதற்கு நன்றி..
உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேறவும் என்றும்
மகிழ்வுடன் வாழ.. என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் ஆசைகளை உங்கள்
ஆசையாகவும்..
என் கனவுகளை உங்கள்
கனவுகளாகவும் கொண்ட..
எனக்காக வாழும்
என் தந்தைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உங்கள் வாழ்வில் என்றும்
மகிழ்ச்சி பொங்க மனதாராக
வாழ்த்துகின்றேன்.

உலகில் ஈடு இணையற்ற
என் அப்பாவிற்கு உங்களின்
இந்த நாள் இனிய
பிறந்தநாளாக அமையட்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அப்பா.

பிள்ளைகளின் அனைத்து
பிரச்சனைகளுக்கும் உடனே
தீர்வு காண துடிக்கும்
முதல் இதயம் அப்பா மட்டுமே..
என் அன்பு தந்தைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பல தடவை அம்மா
சொல்லிக் காட்டியிருப்பார்கள்..
பத்து மாதம் சுமந்த கதையை..
ஆனால் அப்பா ஒரு தடவை கூட
சொல்லிக் காட்டியதில்லை..
இரவு பகலாக கஷ்டப்பட்டு
வாழ்க்கை முழுவதையும்
தன் குடும்பத்திற்காக
வாழ்ந்த கதையை..
நடமாடும் கடவுளுக்கு
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

நான் தடுமாறி விழுந்த
இடங்களில் கூட..
தவறி கூட மகள்
விழுந்து விடக் கூடாது
என நினைப்பவர் தான்
அப்பா.. என் தந்தைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


அப்பா என்ற ஆலமர
நிழலில் இருந்தவரை
வாழ்க்கை எனும் வெயில்
என்னை சுட்டதே இல்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அப்பா.

தான் பார்க்காத
உலகத்தை கூட தன்
பிள்ளைகள் பார்க்க வேண்டும்
என நினைத்து உழைப்பவர்
தான் தந்தை.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.

தான் வறுமையில்
இருந்தாலும் நம்மை
எப்போதும் ஏழையாக
வளர்க்க நினைத்ததில்லை..
என் தந்தைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த உலகத்தில் தன்
குடும்பத்திற்காக பல
தியாகங்களை செய்து
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் அப்பாவிற்கு.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எத்தனை உறவுகள் தான்
இருக்கின்றேன் என்று
சொன்னாலும் அப்பாவை
போல யார் இருக்க முடியும்..
என் அன்பு தந்தைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


தன் குழந்தைகளுக்கு
முதல் தோழன்.., ஆசான்..,
வழிகாட்டி.. எல்லாமே
தந்தை தான்..இனிய பிறந்த
தின வாழ்த்துக்கள் அப்பா.

எத்தனை வயதானாலும்
தன் பிள்ளைகளை என்றும்
குழந்தைகளாக நினைத்து
கவனிப்பது அப்பா மட்டுமே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அப்பா..

தன் பிள்ளைகளின்
ஆசைகளை நிறைவேற்ற
ஒருபுறம் துடித்தாலும்.. தான்
அனுபவித்த கஷ்டங்களை
தன் பிள்ளைகள் ஒரு போதும்
அனுபவிக்க கூடாது என்று
நினைப்பது தான்
அப்பாவின் இதயம்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பெண் பிள்ளைகள்
தன் தந்தை மீது
அதீத அன்பு வைக்க காரணம்..
தன்னை ஏமாற்ற நினைக்காத
ஒரே ஆண் அப்பா மட்டுமே…
என் அன்பு தந்தைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மனைவிக்கு பிறந்தநாள் கவிதை

மனைவிக்கு பிறந்தநாள் கவிதை
பிறந்தநாள் கவிதை மனைவிக்கு

இந்த தொகுப்பில் உள்ள மனைவிக்கு பிறந்தநாள் கவிதை (Manaivikku Pirantha Naal Kavithai) என்ற அழகிய கவிதை வரிகள் ஊடாக உங்கள் அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்ளுங்கள்.

மனைவிக்கு பிறந்தநாள் கவிதை
என் மனதில் உனக்காக நான்
கொடுத்த இடத்தை இப்போது
மட்டுமல்ல எப்போதும் உன்னை
தவிர வேறு யாராலும் பெற முடியாது.
என் அன்பு மனைவிக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்னை மணக்கும் போது பிடித்த
என் கைகள் என்னை புதைக்கும்
வரை பிடித்திருக்கும்.. என் அழகு
காதல் மனைவிக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இவ்வுலகில் உள்ள பொக்கிஷங்களில்
சிறந்த பொக்கிஷம் என் மனைவி
நீ தான்.. என் காதல் மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உறவு என்று சொல்ல பலர் இருந்தாலும்
என் உணர்வை புரிந்து கொள்ள
என் அன்பு மனைவியால் மட்டுமே
முடிகின்றது. என் அன்பு மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் வாழ்க்கைக்கு அழகு சேர்த்த
என் காதல் மனைவிக்கு என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நினைத்துக் கூட பார்க்கவில்லை
நீ கிடைப்பாய் என்று..
கிடைத்தவுடன் நினைத்துக்
கொண்டேன் நானும் அதிஷ்டசாலி
என்று.. என் காதல் தேவதைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


கணவன் வாழும் இரண்டாவது
கருவறை மனைவியின் இதயம்
தான்..! என் அன்பு தேவதைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ என்னில் ஒரு பாதி.. என் உயிரின்
பாதி.. என் அன்பு மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சாகும் வரை சந்தோசமாக
இருப்பதற்கு பணம் ஒன்றும்
தேவையில்லை நல்லதொரு துணை
இருந்தாலே போதும்.. என் அன்பு
மனைவிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

ஒரு ஆண் தன்னை மறந்து தன்
குழந்தை தனத்தை ஒரு
பெண்ணிடம் வெளிப்படுத்துகின்றான்
என்றால் அங்கு அதிக பாசத்தை
உணர்கிறான் என்று அர்த்தம்..
அன்பு மனைவிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனக்கு தாயாக இருந்து என்
தாய்க்கு மேல் என் மீது அன்பு
வைத்து என்னைப்
பார்த்துக்கொள்ளும் என் அன்பு
மனைவிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.


அன்பான துணை கிடைத்து விட்டால்
சந்தோசமான வாழ்க்கை
அமைந்து விடும்.. என் அன்பு
மனைவிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உலகில் என்னை நேசிக்க
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
என்னையே உலகமாய் நேசித்த
முதல் உறவு நீ தான்.. அன்பு
மனைவிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மனைவி என்பவள் வார்த்தை
அல்ல வாழ்க்கை..! என்
வாழ்க்கை துணைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் மனதில் வாழும் அழகிய
தேவதைக்கு என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மரணம் வரை மாறாத அன்பு
உன்னிடம் மட்டும் இருந்தே
கிடைக்கும் என் அன்பு
மனைவிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை


இந்த தொகுப்பு “உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்” பற்றியது.

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்
உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை
நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை வரிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பன்
உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை
நிலையான அன்பிற்கு
பிரிவில்லை சொல்லாத
சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி
இல்லை.. உண்மையான
நம் நட்புக்கு என்றும்
மரணமில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

தடுமாறும் போது தாங்கி
பிடிப்பவனும் தடம் மாறும்
போது தட்டிக் கேட்பவனுமே
உண்மையான நண்பன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நட்பு..! கடற்கரை மணலில்
எழுதும் வெறும் எழுத்தல்ல..
இதய ஆழத்தில் குத்தப்படும்
பச்சை..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிர் நண்பன்..!

நல்ல நண்பன் உள்ள எவனும்
வாழ்க்கையில் தோற்றுப்
போக மாட்டான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

அர்த்தமற்ற வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றுவது
அன்பு.. அர்த்தமுள்ள வாழ்வை
அற்புதமாக மாற்றுவது நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் என்
உயிர் நண்பன்..!

நட்பு என்பது கண்களையும்
கை விரல்களையும் போன்றது
கை விரலில் காயம் பட்டால்
கண்கள் அழுகிறது..
கண்கள் அழுதால்
கை விரல்கள் துடைக்கிறது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை
நமக்கு வெளிச்சம்
போட்டு காட்டும்
சிறந்த கருவி தான் நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உயிர் நண்பன்..!

அறிமுகம் இல்லாமல்
வந்தோம் அடிகடி
பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே..
உயிர் ஆனோம். காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
தொடர வேண்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

நல்ல நண்பன் இருப்பின்..
முகம் பார்க்கும் கண்ணாடி
அவசியம் இல்லை.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

வார்த்தைகள் இல்லாத
வடிவம்..
அளவுகோள்
இல்லாத அன்பு..
சுயநலம் இல்லாத
இதயம்..
வெறுப்பை காட்டாத
முகம் “நட்பு”..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

சண்டையிட்டு ஐந்து
நிமிடத்தில் எதுவும்
நடக்காதது போல்
உரிமையுடன் பேசும்
நட்பு உடனிருந்தால்
வாழ்க்கை சொர்க்கம் தான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


உன்னை உண்மையிலேயே
புரிந்து கொண்டிருக்கும்
நண்பன் தான் உன்னையே
உருவாக்கிறான்.. பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உசுரு..!

உன் நட்புக்காக எதை
வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்.. ஆனால்
எதற்காகவும் நட்பை
விட்டுக் கொடுக்கமாட்டேன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!

நட்புக்கு வயதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் உன்னதமான
உறவே நட்பு.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

உறவு என்பது ஊஞ்சல் மாதிரி
அது சிலரை தாங்கும் சிலரை
விழவைக்கும் ஆனால்
நட்பு என்பது பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்கும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!