வியாழன், 17 நவம்பர், 2022

தமிழனின் சாதனை பட்டியல்கள்….

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு!

கல்லணை...

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?

மாமல்லபுரம்...

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?

அங்கோர்வாட் கோயில்......

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில்...

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. 

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால்கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம்...

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்
கோயில்....

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.

பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் ...

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு...

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை …அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். 

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் ...

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். 

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே எனதமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியானதமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள்....

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் உலகின் தொன்மையான நகரம்...

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதர நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்...

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித்தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும்

இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்....

செவ்வாய், 29 மே, 2018

பாரதியார்



திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்!
திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்,
செந்தமிழ்கண் டீர்,பகுதி: ‘தணியே னுஞ்சொல்,
பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
‘பொறுத்தவரே பூமியினை ஆள்வார்’என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழிலுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்.

பொறுமையினை அறக்கடவுள் தல்வனென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்,
இறுதியிலே பொறுமைநெறி தவறிவிட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையா ரோடே;
பொறுமையின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினைம் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்.

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜயதீச சந்த்ரவ கூறுகின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
“நாடியிலே அதிர்ச்சியினல் மரணம்”என்றான்.

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.

in English

Thiruthanigai malaimele kumaara dhevan
thirukkoluveera rirukumadhan porulaik keleer!
thiruthanigai yenpathingu porumai yinper
senthamizhkan deer paguthi thaniye nunjol
poruthamurunth thanigaiyinaal pulaimai serume
poruthavare poomiyinai aalvaar yennum
aruthamikka pazhamozhiyum thamizhilundaam
avaniyile poraiyudaiyaan avane dhevan

Porumaiyinai arakkadavul thalvanennum
yuthittiranum nedunaalip puvimel kaathaan
iruthiyile porumai neri thavarivittan
aathalaar porpurinthaan ilaiyaa rodae
porumaiyindrip porseithu paratha naattaip
porkkalaththe azhithuvittup puviyin meethu
varumaiyaiyung kaliyinaim niruthi vittu
malaimeethu sentraanpin vaananj sendraan

Aanaalum puviyinmisai uyirga lellam
aniyaaya maranameithal kodumai yandro?
thenaana uyiraivituch saagalaamo?
seththidarkuk kaarananthaan yaathen beerel
konaakik saathirathai yaalu maanbaar
jayatheesa santhrava koorukindraan
(nyaanaanu pavathilithu mudivaang kandeer!)
naadiyile athirchiyinal maranam yendraan

Kobaththaal naadiyile athirchi yundaam;
kodungobam perathirchi siriya kobam
aabathaam athirchiyile siriya thaagum
achathaal naadiyellam avinthu pogum
thaabathaal naadiyellam thazhalaai vegum;
kobathai vendridale piravar traithaan
kolvatharku vazhiyena naan kurithit tenae

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான்” என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை,
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்ல லுண்டோ?

கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
“கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;

in English

Solladaa! hariyendra kadavul yenge?
sol lendru hiraniyan thaan urumik ketka
nallathoru magansolvaan thooni lullaan
naaraa yananthurumbi lullaan yendraan
vallaperung kadavulilaa anuvon drillai
magaasakthi yillatha vasthu villai
allalillai allalillai allalillai;
anaithume dheivamendraal alla lundaa?

Kelappa seedane! kazhuthai yondraik
keezhaana pandriyinaith thelaik kandu
thaalaipaartha thirukaramunj siramer kooppich
sangarasang garavendru panithal vendum
koolathai malathinaiyum vanangal vendum
koodinindra porulanaithin kootam dheivam
meelathaaan ithaiththelivaa virithuch solven
vinmattum kadavulandru mannum aggthe

Suthtari vesivamendru druraithaar melor
suthtamannum sivamendre uraikkum vetham;
viththakanaam gurusivamendruraithaar melor
vithtaiyilaap pulaiyanum maggthennum vetham
pithtare anaithuyirung kadavulendru
pesuvathu meiyaanaal pendi rendrum
nithtanuma tharukinile kuzhanthai yendrum
nirpanavunth dheivamendro nigazhthu veere?

Uyirgalellam dheivamandrip piravon drillai
oorvanavum parapanavum nere dheivam;
payilumuyir vagaimattu mandri yingup
paarkindra porulellaam dheivam kandeer;
veyilalikkum iravi mathi vinmeen megam
melumingup palapalavaam thotrang konde
iyalukidra jadaporulgal anaithum dheivam;
yezhuthukol dheivamintha yezhuthum dheivam;

ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;
வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்;

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.

in English

Nyaanaguru thesigalaip pottru kindren
naadanathumnth thaanaavaan naliva laathaan
monakuru thiruvarulaal pirappu maari
muttrilumnaam amaranilai soozhnthu vittom
thenanaiya paraasakthi thirathaik kaati
sithiniyil kaatimanath thelivu thanthaan
vaanagathai ivvulagilirunthu theendum
vagaiyunarthik kaaththapiraan pathangal potri!

Yeppothum gurusaranam ninaivaai nenje!
yemperumaan sithamparathe siganthaan yennai!
muppaalung kadanthaperu veliyaik kandaan
mukthiyenum vaangathe parithi yaavaan
thappatha saanthanilai alitha komaan
thavamniraintha maangkottai ch chamith devan
kuppaaya nyaanathaal marana mendra
kulirneeki yenaikkaathan kumaara devan

Thesathaar ivanpeyaraik kullach saami
thevarpiraan yendruraippar thelintha nyaani
paasathai aruthuvittan payathaich chuttan
paavanaiyal paravelikku mele thottan
naasathai azhithuvittan yamanaik kondraan
nyaanagangai thalai mudimee thenthi nindraan
aasaiyenum kodikkorukaazh marame pondraan
aathiyavan sudarppatham pugazhkin drenae

Vaayinal sollidavum adangaa thappa
varisaiyudan yezhuthivaikka vagaiyum illai
nyaayitrai sangiliyaal alakka laamo?
nyaanaguru pugazhinainaam vagukka laamo?
aayira nool yezhuthidinum mudivuraatham
iyanavan perumaiyainaan suruki solluven
gaayagarpanj seithuvittan avanvaazh naalaik
kanakittu vayathuraippar yaarum illai

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.

in English

Androrunaat puthuvainagar thanile keerthi
adaikkalanjer eesuvaran tharma raja
yendrapeyar veethiyilor siriya veetil
rajaraa maiyanendra naagai paarpan
munthanathu pithaathamizhil ubani dathai
mozhipeyarthu vaiththathanaith thiruthich solli
yenthanaivendikolla yaansendraangan
irukaiyile anguvanthaan kullach saami

Appothu naan kullach saamikaiyai
anbudane pattriyithu pesa luttren
appane!thesigane!nyaani yenbaar
avaniyile silarninnaip pithan yenbaar
seppurunal lashdaanga yoga sithi
sernthavanend runaippugazhvaar silaren munne
oppanaigal kaattamal unamai solvaai
uthamane! yenakuninai unarthu vaaye

Yaavannee? ninakulla thiramai yenne?
yaathunarvaai? kanthaisuttrith thiriva thenne?
dhevanaipol vizhippa thenna?siriyarodum
theruvilae naaigalodum vilaiyaattennae?
paavaiyir putharaipol alaiva thenne?
paramasivan poluruvam padaitha thenne?
aavalatru nindrathenne? arintha thellam
aariyane yenakunarntha vendum yendraan

Pattriyagai thirugiyanthak kullach saami
parinthoda paarthan yaan vidave yillai
suttrumuttrum paarthapin muruval poothan
thooyathiruk kamalapathath thunaiyai paarthen!
kuttramatra thesiganum thimirik kondu
kuthithodi avveetuk kollai sernthan
mattravanpin yaanodi virainthu sendru
vaanavanaik kolliyile marithuk konden

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்

புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெலாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

சென்றதினி மீளாது;மட ரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைனத்துக் கொண்டு
தின்றுவிளை யடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்,

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா. நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில்செய்தால் அமர னாவாய்.

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப்பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

in English

Pakkathu veedidinthu suvargal veezhntha
paazhmanaiyon driruntha thangae paramayogi
okkathan arulvizhiyaal yennai nokki
orukutti suvarkaatip parithi kaati
akkaname kinatrulathan vimpang kaati
arithikolo? yenakkettan yendran
mikkama hizhkondavanum sendran
vethantha marathiloru veraik kanden

Thesigangai kattiyenak kuraitha seithi
senthamizhil ulagath thaark kunarthu kindren
vaasiyainee kumbathaal valiyak katti
manpole suvarpole vazhthal vendum
thesudaiya parithiyuruk kinatri nulle
therivathupol unakulle sivanaik kaanbai
pesuvathil yeithuvathe nyaanam yendran

Kaiyiloru noolirunthaal virikka solven
karuthaiyathil kaatuven vaanaik kaati
maiyilagu vizhiyaalin kaathalondre
vaiyagathil vaazhuneriyendru kaati
iyanenak kunarthiyana palavaam nyaanam
atharkavankaati yakurippo anantha maagum
poiyariyaa nyaanaguru sithampa resan
poomivinaa yagankullach saami yange

Mattrorunaal pazhanganthai yazhuku mootai
valamurave kattiyavan muthugin meethu
kattravargal paninthethum kamala paathak
karunaimuni sumanthukonden nethire vanthan
sattrugai purinthavanpaal ketka laanen
thambiraane!inthath thagaimai yenne?
muttrumithu piththarudai seigai yendro?
mootai sumanth thiduvathenne? mozhivaai yenren

Punnagaipooth thaariyanum pugazhu kindran
purathe naan sumakkindren agathinulle
innathoru pazhanguppai sumkkiraai nee
yendruraithu virainthavanum yegi vittan
mannavapansor porulinainaiyaan kandukonden
manathinulle pazham poigal valarp pathale
innaluttra maantha relaam madinvaar veene
iruthayathil viduthalaiyai isaithal vendum

Sendrathini meelaathumadareneer
yeppothum sendrathaiye sinthai seithu
kondrazhikkum kavalaiyenum kuzhiyil veezhnthu
kumaiyaatheer sendrathanaik kurithal vendaa
indruputhi thaapiranthom yendru nenjil
yennamathaith thinnamura isainathuk kondu
thindruvilai yadiyinpur trirunthu vaazhveer
aggthindrich sendrathaiye meetum meetum

Menmelum ninainthazhuthal vendaa antho!
methaiyilla maanudare! melum melum
menmelum puthikaar remmul vanthu
menmelum puthiyavuyir vilaithal kandeer
aanmaaven drekarumath thodarpai yenni
arivumayak kangkondu kedukin dreere?
maanmaanum vizhiyudaiyaal sakthi devi
vasapattuth thanaimaranthu vaazhthal vendum

Sendravinaip payankalenaith theenda maatta
sritharanyan sivakumaa ranyaa nandro?
nandrinthak kanam puthithaa piranthu vitten
naanputhiyan naankadavul nalivi laathon
yendrintha vulaginmisai vaanor pole
iyandriduvaar sitharenpaar parama tharmak
kundrinmisai yorupaaicha laaga paainthu
kuripatraar kedatraar kulaitha latraar

Kuriyanantha mudaiyoraaik kodi seithum
kuvalayathil vinaikkadimai padaathaa raagi
veriyudaiyon umaiyaalai idathi lettron
vethaguru paramasivan vithai pettruch
serivudaiya pazhavinaiyaam irulai setruth
theeyinaipol manmeethu thirivaar melor
arivudaiya seeda nee kurippai neeki
ananthamaam thozhil seithal amaranaavai

Kelappa!mersonna unmai yellam
kedatra mathiyudaiyan kullach saami
naalumpal kaattalum kurippinalum
nala mudaiya mozhiyaalum vilakith thanthaan
tholaipaarth thukkalithal pole yannaan
thunaiyadigal paarthumanam kalipen yaane
vaalaipaarth thinbamuru mannar pottrum
malaithaalaan maangkottai saami vaazhga!

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

in English

Kaani nilam vendum paraasakthi
Kaani nilam vendum angu
thoonil azhakiyathaai nanmaadangal
thuyya nirathinathaai anthak
kaani nilathinidaiye ormaaligai
kattith tharavendum angu
keniyarukinile thennaimaram
keetru milaneerum

Pathu pannirendu thenaimaram
pakkathile venum nalla
muthuch sudarpole nilaavoli
munbu varavenum angu
kathung kuyilosai satre vanthu
kaathir padavenum yentran
siththam mahizhnthidave nanraayilanth
thendral varavenum

Paattuk kalanthidave angeyoru
pathinip penvenum yengal
koottuk kaliyinile kavithaigal
konduthara venum antha
kaatu veliyinile amma nintran
kaavalura venum yentran
paatuth thirathaale ivvaiyaththai
paalidathida venum

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

in English

Nallathoar veenai seithe -athai
nalankeda puzhuthiyil erivathundaa?
Solladi sivasakthi -yenaich
sudarmigum arivudan padathuvittaai
vallamai tharaayoo, -intha
maanilam payanura vaazhvatharke
solladi, vazhnthida puriguvaiyoo?

Visaiyuru panthinaipoala -ullam
vendiya padisellum udalketten,
nasaiyuru managketten- niththam
navamenach sudartharum uyirketten,
thasaiyinaith theesudinum -siva
sakthiyai paadumnal agangketten,
asaivaru mathiketten -ivai
arulvathil unakethuth thadaiyulathoo?

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

in English

Suttum vizhich sudar thaan kannamma sooriya santhiraroo
vattak kariya vizhi kannamma vaanakarumai kolo
pattuk karuneela pudavai pathitha nalvayiram
natta nadunisiyil theriyum natchathirangkaladee

Soalai malaroliyo ninathu sunthara punnagai thaan
neelak kadalalaiye ninathu nenjin alaikaladee
koalak kuyilosai unathu kuralin inimaiyadee
vaalaik kumariyadee kannamma maruvakkaadhal konden

Saathiram pesugiraai kannamma saathiram yethukkadee
aathiram kondavarkke kannamma saathiramundodee
mooththavar sammathiyil vadhuvai muraigal pinbu seivom
kaathiruppenodee ithu paar kannathu muthamoandru

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

in English

Kaakkai siraginile nanthalaalaa -nindran
kariya niram thoandruthaiye nanthalaalaa

paarkum marangalellam nanthalaalaa -nindran
pachai niram thoandruthaiye nanthalaalaa

ketkum oliyil yellam nanthalaalaa -nindran
geetham isaikuthadaa nanthalaalaa

theekul viralai vaithaal nanthalaalaa -ninnai
theendum inbam thoandruthadaa nanthalaalaa

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

in English

Cinnanj ciru kiliye -kannamma!
selva kalanjiyame!
yennaik kalitheerthe -ulagil
yetram puriya vanthaai!

Pillaik kaniyamuthe -kannamma!
pesumpor chithirame!
alli yanathidave -yen munne
aadi varunthene!

Oadivarugayile -kannamma!
ullang kuliru thadee!
adiththirithal kandaal- unnaipoai
aavitha thzhuvathadee!

Uchchi thanai muganthaal -karuvam
oangivalaruthadee!
mechiyunaiyuraar -pugazhnthaan
meni silarkkuthadee!

Kannathil muththamitaal -ikarnthaan
kalveri kolluthadee!
unnaith thazhuvidilo -kannamma!
unmaththa maguthadee!

sattrun muganj sivanthaal -manathu
sanjala maagu thadee!
nettri surungak kandaal -yenaku!
nenjam pathaiku thadee!

unkannil neervazhinthaal -yenenjil
uthiram kottu thadee!
yengannir paavaiyanro? -kannamma!
yennuyir ninna thanro?

sollu mazhzlaiyile -kannamma
thunbangal thirththidu vaai
mullai siripipaale -yenathu
moorkkanth thavirthidu vaai,

Inba kadhaikalellam -unnaipoal
yedugal solva thundo?
anbu tharuvathile -unainer
aagumoar dheiva mundo?

maarbil anivatharke -unnaipoal
vaira maniga lundo?
seerpetru vaazhvatharke -unnaipoal
selvam piprithu mundo?

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)

in English

Ninnaye radhi yendru ninaikirenadi kannamma!
Thannaiye sagi yendru saranam yeithinen!...
Kannamma!.......(Ninnaiye!)

ponnaiye nigartha meni, ninnaiye nigartha saayal!.......
Pinnaiye, nithiya kanniye! Kannamma!......(Ninnaiye!)

maaran ambugal yen meethu vaari vaari veesa nee!
kan paaraayo! vanthu seraayo!.....kannamma!.....(Ninnaiye!)

yaavume sugaminikoar eesanaam yenkkum thoatram!
mevume!, ingu yaavume kannamma.....(Ninnaiye!)

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)

in English

Aasai mugam maranthu poache -ithai
yaaridam solvenadi thoazhi
nesam marakkavillai nenjam -yenil
ninaivu mugam marakkalaamo
(aasai)

Kannil theriyuthoru thoatram -athil
kannazhagu muzhuthillai
nannu mugavadi kaanil -antha
nalla malarch sirippaik kaanom
(aasai)

Thenai maranthirukum vandum -olich
sirappai maranthuvitta poovum
vaanai maranthuirukum payirum -intha
vaiyam muzhuthumillai thoazhi
(aasai)

Kannan mugam maranthupoanaal -intha
kankalirunthu payanundo
vannap padamumillai kandaai -ini
vaazhum vazhiyennadi thoazhi
(aasai)

[பல்லவி]

வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !

[சரணம்]

உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !

இணைவாய் எனதா வியிலே - கண்ணா !
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !

in English

[Pallavi]

Varuvaai, Varuvaai, Varuvaai, -kanna!
Varuvaai, Varuvaai, Varuvaai !

[Saranam]

Uruvaai arivil olirvaai -kanna!
Uyirin namuthaai pozhivaai -kanna!
Karuvaai yennul valarvaai kanna!
Kamalaththiruvo dinaivaai -kanna!

Inaivaai yenathaa viyile -kanna!
ithayath thinile yamarvaai -kanna!
kanaivaa yasurar thalaigal -sitharak
kadaiyoo zhiyile padaiyo dezhuvaai!

yezhuvaai kadalmee thinile -yezhumoar
iravik kiviyaa ulamee thinile
thozhuven sivanaam ninaiye -kanna!
thunaiye, amarar thozhumvaa navane!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
(எத்தனை)

முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

in English

Yethanai kodi inbam vaithaai
yengal iraivaa iraivaa iraivaa!
(yethanai)

Siththinai asithudan inaithaai -angu
serum impoothaththu viyanulagam amaithaai
athanai ulagamum varnak kalanjiyamaaga
pala pala nallazhagukal samaiththaai
(yethanai)

Mukthiyenroru nilai samaithathaai -angu
muzhuthinaiyum unarum unarvamaiththaai
pakthiyenroru nilai vaguththaai -yengal
paramaa paramaa paramaa

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

in English

Paayu moli nee yenaku, paarkum vizhi naanunakku
thoayum madhu nee yenaku, thumpiyadi naanunakku.
vaayuraikavaruguthillai, vaazhi nindran menmaiyellam
thooyasudar vaanoliye! sooraiyamuthe! kannamma!

veenaiuadi nee yenaku mevum viral naanunakku
poonum vadam nee yenaku puthu varim naanunakku
kaanumidanththoru nindran kanni noli veesuthadee
maanudaiya pera rase vaazhvu nilaiye! kannamma!

vaana mazhai nee yenaku vannamayil naanunakku
paana madi nee yenaku paandamadi naanunakku
nyaana voli veesuthadi nangai nindran sothimugam,
oonamaru nallazhage!ooru suvaiye!kannamma!

vennilavu nee yenaku, mevu kadal naanunakku
pannu suthinee yenaku,paattinimai naanunakku
yenniyennip paarthidilor yennamillai ninsuvaikke;
kannin mani poandravale! kattiyamuthe!kannamma!

veesu kamazh nee yenaku,viriyumalai naanunakku;
pesuporul nee yenaku,penumozhi naanunakku;
nwsamulla vaansudare!ninnazhagai yethuraippen?
aasai madhuve! kaniye!allu suvaiye kannamma!

Kaadhaladi nee yenaku,gaanthamadi naanunakku;
vethamadi nee yenaku, viththaiyadi naanunakku;
poathamutra poathinile pongi varunth theenjuvaiye!
naathavadi vaanavale! nalla uyire kannamma!

nallavuyir nee yenaku, naadiyadi naanunakku;
selvamadi nee yenaku, semanithi naanunakku;
yellaiyattra perazhage! yengum nirai porsudare!
mullainigar punnagaiyaai!modhuminbam! kannamma!

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

in English

Theeraatha vilaiyattu pillai-kannan
theruvile pengaluk koyaatha thollai.(theeraatha)

Thinna pazhangondu tharuvaan;-paathi
thinkinra poathile thattip paripaan;
yennappan yennaiyan yendraal-athanai
yechchir paduthik kadithuk kodupaan.(theeraatha)

Thenoththa pandangal kondu-yenna
seithaalum yettatha uyarathil vaippan;
maanoththa pennadi yenpaan-satru
manamahizhum nerathile killi viduvan.(theeraatha)

azhagulla malarkondu vanthe-yennai
azhaazhach seithapin kannai moodikkol;
kuzhalile soottuven yenbaan-yennaik
kurudaakki malarinaith thozhiku vaippa.(theeraatha)

Pinnalaip pinnin rizhappan;-thalai
pinne thriumbumun nesendru maraivaan;
vanna pudhuselai thanile-pizhuthi
vaari sorinthe varuththik kulaipaan.(theeraatha)

Pullang kuzhalalkondi varuvaan-amuthu
pongith thathumpunar geetham padippan,
kallarl mayanguvathu pole athaik
kanmoodi vaaithiran tehket tirupom.(theeraatha)

Angaanth thirukumvaai thanile-kannan
aarezhu katterum paipoattu viduvaan;
yengaagilum paartha thundo? Kannan
yengalaichseikindra vedikkai yondro?(theeraatha)

Vilaiyaada vaaventrazhaippan;-veetil
velaiyen traalathaik kelaathizhuppan;
ilaiyaaro daadik kudhippan;- yemmai
idaiyir pirinthupoi veetile solvaana (theeraatha)

ammaiku nallavan,kandeer!-mooli
athtahiku nallavan,thandhaiku maggthe,
yemmaith thuyarseiyum periyor-veetil
yaavarkum nallavan pole nadappan.(theeraatha)

koluku migavunj samarththan;-poimai
soothiram pazhisolak koosaak sazhakkan;
aaluk kisaintha padi pesith-theruvil
aththanai pengalaium aagaa thadippan.(theeraatha)

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்

வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை

நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்

அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்

அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்

உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம், - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்

in English

Vettri yettuth thikku mettak kottu murase!
vetham yendrum vaazhgayendru kottu murase!
nettri yotraik kannanode nirththanam seithaal
niththa sakthi vaazhga vendrum kottu murase!

Oorukku nallathu solven- yenak
kunmai therinthathu solven;
seeruk kellam mudhalaagum- oru
dheivam thunaiseiya vendum

vetha marinthavan paarppan, pala
vithai therinthavan paarppan.
neethi nilaithava raamal- thanda
nemangal seibavan naaikkan

Pandangal virpavan setti-pirar
pattini theerpavan setti
thondaren trorvagup pillai,thozhil
soambalaip polizhi villai

Naalu vaguppum inggondre;- intha
naankinil ondru kurainthaal
velai thavarich sithainthe seththu
veezhlnthidum manida saathi

Otraik kudumbanth thanile- porul
Onga valarppvan thanthai
matraik karumangal seithe manai
vaazhlnthidach seipaval annai;

Yevalgal seibavar makkal- ivar
yaavarum orgulam antro?
mevi anaivarum ontraai nalla
veedu nadathuthal kandom

Saathi pirivugal solli- athil
thazhvendrummelendrum kolvaar
neethip pirivugal seivaar angu
niththamum sandaigal seivaar

Saathik kodumaigal vendaam anbu
thannil sezhithidum vaiyam
aathara vuttringu vaazhvom tholil
aayiram maanpurach seivom

Pennuku nyaanathai vaiththaal puvi
peni valarthidum eesan
mannuk kulle silamoodar nalla
maadha rarivai keduththaar

Kangal irandil ontraik kuthik
kaatchi keduthida laamo?
penga larivai valarthaal vaiyam
pethaimai yartridung kaaneer

Dheivam palapala sollip pagaith
theeyai valarpavar moodar
uyva thanaithilum ontraai yengum
oarporulaanathu dheivam

theeyinaik kumbidum paarppaar niththam
thikkai vanangum thurukkar
kovirsiluvaiyin munne nindru
kumbidum yesu mathaththaar

Yaarum paninthidum dheivam porul
yaavinum nintridum dheivam
paarukkule dheivam ondre ithil
parpala sandaigal vendaam

vellai nirathoru poonai yengal
veetil valaruthu kandeer
pillaigal pettratha poonai avai
peruk korunira maagum

Saambal niramoru kutti karunj
saanthu niramoru kutti
paambu niramoru kutti vellai
paalin niramoru kutti

Yentha niramirunthaalum avai
yaavum orethara mandro?
intha niramsiri thendrum iggthu
yetra mendrum sollalaamo?

Vannangal vetrumai pattaal athil
maanudar vettrumai yillai
yenngal seikaikalellaam ingu
yaavarkkum ondrenal kaaneer

Nigarendru kottu murase intha
neelam vaazhbava rellam
thagarendru kottu murase poimmaich
saathi vaguppinai yellam

Anbendru kottu murase athil
aakkamun daamendru kottu
Thunbangal yaavume pogum verunj
soothu pirivugal poanaal

Anbendru kottu murase makkal
aththanai perum nigaraam
inbangal yaavum perugum ingu
yaavarum ondrendru kondaal

Udanpiranth thaargalai pole ivv
vulagil manitharel laarum
idamperi thunduvai yaththil ithil
yethukkuch sandaigal seiveer?

Marathinai nattavan thaneer nangu
vaarthai oangidach seivaan
sirathai yudaiyathu dheivam ingu
sertha unavellai yillai

vayitrukuch soarundu kandeer ingu
vaazhum manitharel lorkum
payitriuzhuthundu vaazhveer pirar
pangaith thiruduthal vendaam

Udanpiranth thavargalai pole ivv
vulaginil manitharel laam
thidangonda varmelinthorai inguth
thindru pizhaithida laamo?

valimai yudaiyathu dheivam nammai
vaazhnthidach seivathu dheivam
melivukandaalum kuzhanthai
veezhththi mithaththida laamo?

Thambi setre melivaanaal annan
thaanadimai kolla laamo?
sembukkum kombukkum anji makkal
sitradi maipadalaamo?

Anbendru kottu murase! athil
yaarkkum viduthalai undu
pinbu manithargalellaam kalvi
petrup pathampetru vazhvaar

Arivai valarthida vendum makkal
aththaniai perukkum ondraai
siriyarai membadach seithaal pinbu
dheivam yelloraiyum vaazhthum

Paarukulle samaththanmai thodar
patrunj sagothara thanmai
yaarukum theemai seiyaathu puvi
yengum viduthalai seiyum

vayirtrukkuch soarida vendum ingu
vaazhum manitharuk kellaam
payittrip malakalvi thanthu inthap
paarai uyarthida vendum

Ondrendru kottu murase! anbil
Oankendru kottu murase!
nandrendru kottu murase! intha
naanil maantharukuk kellaam

சனி, 15 ஜூலை, 2017

காமராஜர் வரலாறு


காமராஜர் வரலாறு 

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 15, 1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

இறப்பு: அக்டோபர் 2, 1975

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு:

கு. காமராஜர் அவர்கள், 1903  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும்  அமைந்தது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:

டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:

‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜர்:

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:

காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்:

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

இறப்பு:

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

“உன்னைப்போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை!!!”

சனி, 1 ஜூலை, 2017

சேகுவேரா வரலாறு


சேகுவேரா

மனிதருள் மாமனிதன் சே குவேரா 

“சே” என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது இணையம் தான் பல சமயங்கள் நான் சேவின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்திருக்கின்றேன் அது மட்டும் அல்லாமல் ஆடைகளில் மற்றும் பல பொருட்களில் அவரின் புகைப்படம்  யார் இவர் ????

சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள்!

 இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று “சே”வை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.     

   

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்.

 சே தொடர்பான “சே வாழ்வும் புரட்சியும்” என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “சேகுவேரா வாழ்வும் மரணமும்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது..வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப்பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு மிடுக்கான தோற்றம் இவை “சே”வின் அடையாளங்கள். உலகெங்கும் உள்ள விசிறிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். நெல்சன் மாண்டேலா “சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம்” என்று கூறினார். பிரெஞ்சு அறிஞர் ழீன்    பால் சாத்ரே குவேராவை “பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே” என்று கூறினார்.  கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவோ “நமது காலத்திற்கும் மட்டும்மல்ல எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர் சேகுவேரா மட்டுமே என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம் சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேரா மட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….” என்று புகழ்ந்தார்.  சே எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரை காண முடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாக பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடாகவும் பண்பாட்டு அடையாள சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை மற்றையோரை விடவும் “சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார்.  அதன் போக்குகள் அனைத்தையும் அந்த வடிவம் முழுமையாக பிரதிபலிக்க வில்லை என்றாலும் கூட “சே” ஒரு அடையாளமாக மாறுவதை தியாகம் என்னும் பரிணாமத்தை தவிர்த்துவிட்டு புரிந்துகொள்ள முடியாது.

1960ல் எடுக்கப்பட்ட சேவின் பிரபல்யமான புகைப்படம்

 அதிகாரம் புகழ் குடும்பம் மற்றும் வசதி ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ தயக்கமோ இன்றி ஒரு இலட்சியத்திற்காக அனைத்தையும் துறக்கின்றார். தனது பெற்றோர்களுக்கு விடைபெறும் விதமாக எழுதிய கடிதத்தில் ஒரு கலைஞனுக்கே உரிய கவனத்துடன் நான் உரமேற்றி இருக்கும் என் மனவலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும் என்று குறிப்பிட்ட அவர் தான் நினைத்தது அல்லது விரும்பியது உடனே நடந்து விடவேண்டும் என்ற உணர்வுடன்தான் எப்போதுமே செயல்களைத் தொடங்குவார்.அசாதாரணமான சாதனைகளையும் மிகச்சிறந்த வெற்றிகளையும் தேடித்தரக்கூடிய அந்த அசாத்தியமான மன உறுதிதான் சேவின் பயணங்களிலயும் அவரின் அரசியல் பார்வையிலும் அவரின் ராணுவ தலைமையிலும் மற்றும் பொருளாதார நிர்வாகத்திலும் வெளிப்பட்டது.  எல்லையற்ற இம்மன உறுதியின் ஊற்றுக்கண்ணை விட அதன் தாக்கம் தான் முக்கியம் ஆனது.  யோசித்து கூட பார்க்க முடியாத செயல்களை மேற்கொள்வதற்கும் மிகவும் தெளிவான ஈவு இரக்கமற்ற சுய பகுப்பாய்வை நடத்துவதற்கும் எர்னெஸ்ற்றோ குவேராவிட்கு இருந்த தன்னம்பிக்கையை ஒரு சில மனிதர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.      

இவ்வளவு புகழ்ச்சிக்கும் உரிய இந்த நாயகன் யார்? உலகமே இவரைக்கொண்டாட காரணம்? என்ன இன்று உலகில் பல அமைப்புக்கள் இவரை முன் மாதிரியாக கொண்டு இயங்கக் காரணம் என்ன?      

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி!ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.      

கியூபாவின் வரைபடம்

கியூபா குட்டித் தீவு வட அமெரிக்காவுக்குக் கீழே கரிபியக் கடல்வெளியில், கரும்புக்காடாக விரிந்துகிடக்கும் அழகு தேசம்.      

கியூபாவின் ஒரு பகுதி

 உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு.  கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.      

1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது.      

Fulgencio batista

  1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா (Fulgencio batista) ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர்.. ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன?புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?      

வரலாற்றின் புதிய அத்தியாயம் அர்ஜென்ட்டினாவில் ஆரம்பமாகின்றது. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் (Argentina) உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் (Ernesto Guevara Lynch), சிசிலியா டெ ல செர்னா (Sisiliya  de la Serna)  தம்பதியர்களுக்கு  முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.      

குடும்பத்தினருடன்

  அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு  குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை  அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.      

சதுரங்கம் விளையாடும் சே

  தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ரக்பியும் அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.     

 வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு. குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு , லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.      

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர்   , அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.    

ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சே

 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். பெரு (Peru)  நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.      

motorcycle diaries

 சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.      

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்க்சியம் அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்றால் மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.    

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.     

சமவுடமையின் இலச்சினை

 இலகுவாக சொல்வது என்றால் சமவுடமை (Socialism:சோசலிசம்) பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன. பொதுவுடமை அல்லது கம்யூனிசம் (Communism) வர்க்கமற்ற (classless, பாகுபாடற்ற) சமுதாயத்தை அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும்.    

பொதுவுடமை சமூகத்தில்,உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய  வர்க்க மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்தப்படுகிறது. பொருளியல் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பில் அறிந்திருக்கலாம்.    

     

சே பயணித்த பாதை 1953-1956

 இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக் காரணம்   நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.      

இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் (Argentina) திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.      

22 வயதில் சே குவேரா

 1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா (Bolivia) , பெரு (Peru), ஈக்குவடோர் (Ecuador), பனாமா (Panama), கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா (Nicaragua ), ஹொண்டூராஸ் (Honduras), எல் சல்வடோர் (El Salvador ) ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.      

மனைவி ஹில்டாவுடன்

 குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா (Hilda Gadea)  அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரையே  பிற்காலத்தில் சே திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.      

‘சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.   1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர்  நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில்,  ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார்.  பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.      

ஜூலை 26 இயக்கத்தின் கொடி

 இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார்.  அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த  பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.  1953ம் ஆண்டு இதே நாள் கியூபாவில் கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பாடிஸ்டா தலைமையிலான அரசைத் தூக்கி எறிவதற்காக புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்காக பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் (Santiago de Cuba) அமைந்திருந்த மொன்காடா (Moncada Barracks) இராணுவத் தளத்தை தாக்குவதற்கு திட்டம் தீட்டினர் . 1953ம் ஆண்டு ஜூலை 26 அதிகாலை 6.00 மணி பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் அமைந்திருந்த கியூபாவின் இரண்டாவது மிகப் பெரிய இராணுவத் தளத்தை தாக்குகின்றனர். அச்சமயம் பாடிஸ்டா கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய தருணம் தளத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர் (சிலர் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர் என்கின்றனர்). பிடலினுடைய திட்டம் என்னவென்றால் அபெல் சண்டமரிய (Abel Santamaría) தலைமையிலான 20 வீரர்கள் அடங்கிய முதலாவது குழு இராணுவத் தளத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் வைத்திய சாலையைக் கைப்பற்றுவது, லெஸ்டர் (Léster Rodríguez ) தலைமையிலான 5 வீரர்கள் அடங்கிய இரண்டாவது குழு Palacio de Justicia என்னும் கட்டிடத்தைக் கைப்பற்றுவது,பிடல் தலைமையிலான 90 பேர் அடங்கிய மூன்றாவது குழு தளத்தைத் தாக்கி தொலைத்தொடர்பு நிலையத்தைக் கைப்பற்றுவது என்பதாகும்.    

தாக்குதலின் பின்னர் இராணுவத்தளம்

 மொன்கடாவை முற்றுகையிட அவன் தலைமையில் 1953 ஜூலை 26 அன்று சியோனிப் பண்ணையிலிருந்து புரட்சிப்படை புறப்பட்டது.  தாக்குதல் ஆரம்பிக்கின்றது ஆயுதங்கள் தாங்கி வந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்ககின்றது ஆயுத பற்றாக்குறையினால் கெரில்லா வீரர்கள் பலர் பின்வாங்குகின்றனர். பிடல் இழைத்த ஒரு சிறிய தவறினால் அவரின் வாகனம் சிறிய விபத்துக்குள்ளகின்றது அவரைக் காப்பாற்ற  கெரில்லா வீரர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள பிடல் தனது வாகனத்தை இராணுவத்தளத்தின் வாசலை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாகனத்தின் பின்னால் இருந்த வீரர்கள் தாக்குதல் ஆரம்பித்து விட்டதால் தாம் இராணுவத்தளத்தின் உள்ளே இருக்கின்றோம் என நினைத்து வெளியே குதிக்கின்றனர் இதனால் அபாயமணி ஒழிக்க பாடிஸ்டாவின்  இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. 

தாக்குதல் முடிவில் 15 கெரில்லா வீரர்களும் 3 இராணுவத்தினரும் கொள்ளப்பட 23 கெரில்லா வீரர்களும் 5 இராணுவத்தினரும் காயமடைகின்றனர்.  எஞ்சிய வீரர்கள் பிடல் மற்றும் அவரது தம்பி ரால்  காஸ்ட்ரோ உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தீவுச்சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் 56  கெரில்லாக்கள் கொலையும் செய்யப்படுகின்றனர். பதினைந்து ஆண்டு கால சிறைவாழ்க்கை என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் பொது மன்னிப்பின் பெயரில் விடுதலை ஆகின்றார்.

நிக்கோலோபஸ§க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.    

இரு பெரும் துருவங்கள்

 கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு 1955, ஜூலை மாதம், ஒரு  இரவில் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடக்கின்றது. அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது. சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை.  ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது.  ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது… சக்திகள் இடம் மாறின.      

கிரான்மா படகு

 இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தான். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது  இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.      

கிரான்மா படகு சென்ற பாதை

1957, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்.. கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்ட ‘சே’ கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.      

சாண்ட்ரா கிளாரா யுத்தத்தின் பின்னர்

‘‘சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’ போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம்  ஸாண்டா கிளாராவைக் (Santa Clara) கைப்பற்றினார் . கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.

தொழிற்சாலைகளில் வேலை

1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம்  தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.. கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத  கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.    

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை  சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.      

இரு பெரும் துருவங்கள்

 அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்      

‘சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ      

சே ரால் காஸ்ட்ரோ மற்றும் பிடல்

 உண்மையில் ‘சே’ ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.      

பொலிவியா காடுகளில்

 அங்கே இந்த அளப்பரிய மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார்.  பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்).      

பொலிவியாவுக்குள் மாறுவேடத்தில் நுழைந்தார்

 பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.  மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.      

 

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.      

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார்

 நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.   

மாவீரனின் இறுதிக்கட்டப் போர்

பிற்பகல் 3.30…  காலில் குண்டடிபட்ட  நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.      

காலில் குண்டடிபட்ட நிலையில்

மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.   

கைது செய்யப்பட்ட நிலையில்

இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது. 

சிறை வைக்கப்பட்ட பாடசாலை

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.      

அக்டோபர் 9… அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன்  ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.      

ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ்

 பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.      

சேவின் டைரி

சேவின் ஆயுதம்

 கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.     

கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல

கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக்

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.      

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.      

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.   

‘மரியோ ஜேமி’ (Mario Jemy)

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.     

 தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!     

‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’

   மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது  தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.     

In all Guevara was shot nne times. This included five times in the legs, once in the right shoulder and arm, once in the chest, and finally in the throat

இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.      

அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ.‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர்.கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.  

அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’

எது எப்படி ஆயினும் சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவனைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர் என்று மிட்டராண்ட் கூறினார்.     

இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர்.
குவேராவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ‘லா ஹிகுஏரா‘ (La Hihuera)  என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலையை ராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.     

santa_clara என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலை

அர்ஜெண்டைனாவின் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும் சே குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார். அப்போது அவர் குவேராவை ஒரு உலகத்திற்கே உரிய நபர் என்று புகழ்ந்தார்.      

குவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர். குவேராவின் நினைவாக நிகழ்வுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.      

அலைடா குவேரா மார்ச் கூறியது போல் ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை.  கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் ‘ என்று கூறினார். எப்பேர்ப்பட்ட உண்மை இங்கு சாதிச் சண்டைகளிலும்,மதப் பாகுபாடுகளிலும்,எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற ‘மனிதர்கள்’ தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க நமது புரட்சியாளனோ எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிலோ போராடி எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.      

ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை

“சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார்.