வியாழன், 29 செப்டம்பர், 2022

ஒளி வேறு பெயர்கள்

ஒளி வேறு பெயர்கள்
ஒளி வேறு சொல்

இவ்வுலகை ஜொலிக்க வைக்கும் ஒளி என்ற சொல்லானது “ஒள்” என்ற வினை அடியில் இருந்து தோற்றம் பெற்றது.

ஒள் என்றால் ஒளிர்வு அல்லது ஒளி என்று பொருள்படும். ஒளி என்ற சொல்லானது பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

பெயராக வரும் பொழுது ஒளியானது கண்ணுக்கு புலனாகும் வெளிச்சம் என்று பொருள்படும் ஒளி என்ற சொல் வினையாக வரும் போது மறைத்து வை எளிதாக கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்துவை என்று பொருள்படும்.

மின்காந்த அலை நீளத்தைப் பொறுத்து சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும். இவ்வாறான ஒளிக்கு பல வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
ஒளி வேறு பெயர்கள்
ஒளி மூலங்கள்
ஒளியின் வேகம்
ஒளி வேறு பெயர்கள்
ஒளிர்வு
ஒள்
வெளிச்சம்
சுடர்
சோதி
பிரகாசம்
கதிர்

இவ்வாறான பெயர்கள் ஒளிக்கு வழங்கப்படுகின்றன.

ஒளி மூலங்கள்
ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை எல்லோராலும் அறியப்படும் ஒளி மூலம் சூரியன் ஆகும்.
மின்விளக்கு.
எரியும் பொருட்கள்.
ஒளியின் வேகம்
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் சரியாக 2,99,792.458 மீ/செ (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள்) ஆகும். எல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கின்றன. இக்கணியத்தை “ஒளியின் வேகம்” எனக் குறிப்பிடலாம்.

புதன், 28 செப்டம்பர், 2022

வானம் வேறு பெயர்கள்

வானம் வேறு பெயர்கள்
வானம் வேறு சொல்

ஐம்பூதங்களில் ஒன்றே வானம் ஆகும். வானம் என்பது பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்து காணப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியை குறிக்கும். இது வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும்.

வானியலில் வானமானது “வானக்கோளம்” எனவும் அழைக்கப்படுகின்றது. வானம் என்பது கற்பனையானது என்றும் அதில் சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் வானம் என்பது இன்றியமையாதது இதனாலையே இந்துக்கள் சிதம்பரத்தை வானத்திற்கு உரிய தலமாக கொண்டு வழிபடுகின்றனர். அங்குள்ள இறைவனின் பெயர் ஆகாச லிங்கம் ஆகும்.

இவ்வாறு சிறப்புடைய வானத்திற்கு வேறு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
வானம் வேறு பெயர்கள்
வானத்தில் காணப்படும் பொருட்கள்
வானத்தின் நிறம்
வானம் வேறு பெயர்கள்
அண்டம்
ககனம்
ஆகாயம்
உம்பர்
எமிலி
ககண்டு
கார்
கொண்டல்
சேண்
நிருபம்
மஞ்சு
விசும்பு
விண்
ஆகாயம்
அத்திட்டம்

மொழிபெயர்ப்புகள்

sky – வானம்
வானத்தில் காணப்படும் பொருட்கள்
இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள், முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே ஆகும்.

வானத்தின் நிறம்
பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமம் ஆகும்.

சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாக சிதறடிக்கின்றது.

நீல நிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

அந்தி நேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.


ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.

இவ்வாறு சிறப்புடைய வானம் பற்றி பல அறிசஞர்கழ் தம் பாடல்களில் பாடி உள்ளனர். எனவே இயற்கை அன்னையின் கொடையான வானம் மேன்மையானது எனலாம்.

இரவு வேறு பெயர்கள்

இரவு வேறு பெயர்கள்
இரவு வேறு சொல்

அனைத்து உயிரினமும் தன் கடமைகளை எல்லாம் நிறைவு செய்த பின் ஓய்வு எடுக்கும் காலமே இரவாகும்.

இரவு என்பது “இர்” என்ற சொல்லடியிலிருந்து தோற்றம் பெற்றது. இரவு என்பது பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சூரிய ஒளி இல்லாது இருக்கும் காலப்பகுதியே ஆகும்.

இக்காலப்பகுதி நாட்டுக்கு நாடு வேறுபடும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவாகும். இது சூரியன் மறைவுக்கும் சூரியன் உதிப்பதற்கும் இடைப்பட்ட காலமாகும்.

ஓர் இரவுவும் ஓர் பகலும் கொண்டது ஓர் நாளாகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை இரவு என்பது மகிமையுடையது. இவ்விரவுக்கு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
இரவு வேறு பெயர்கள்
இரவு தோன்றும் முறை
இரவின் சிறப்புக்கள்
இரவு வேறு பெயர்கள்
இரா
இராத்திரி
நிசி
இருட்டு
இருள்
மங்குல்
அல்
இரவு தோன்றும் முறை

பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். இவ்வாறே இரவு தோன்றுகின்றது.

இரவின் சிறப்புக்கள்
பூமியில் வாழும் எல்லா உயிரினமும் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகும்.
நாளின் முடிவைக் காட்டும் நேரம்.
பல அற்புதங்கள் இடம்பெறும் காலப்பகுதி.
ஆரம்ப கால கவிகளால் அதிகளவாக போற்றி பாடப்பட்ட காலப்பகுதி.
காதலர்களுக்கு உரிய காலப்பகுதி.
சந்திரன் என்னும் அற்புதம் வெளித்தெரியும் காலம்.
இவ்வாறு சிறப்புடைய காலப்பகுதியே இரவாகும்.


நீர் வேறு பெயர்கள்

நீர் வேறு பெயர்கள்
NEER VERU PEYARGAL IN TAMIL

“நீரின்றி அமையாது உலகு” என திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இவ்வுலகமானது நீரில்லாமல் இயங்க முடியாது. உலகு மட்டுமல்ல உயிரினங்கள் கூட நீர் இல்லாமல் வாழ முடியாது. இப்பூமியில் நீர் காணப்படுவதனாலேயே பூமி நீலக்கோல் ஆகின்றது.

மானிடனின் எல்லா தேவைகளுக்கும் நீர் அவசியமாகின்றது. உலகில் உள்ள நீரான நன்னீர், உவர்நீர், சவர்நீர் போன்ற நீரின் வகைகள் திண்மம், திரவம், வாயு போன்ற மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு சிறப்புடைய இயற்கை அன்னையின் கொடையான நீரானது பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

நீர் வேறு பெயர்கள்
புனல்
விசும்பு
தண்ணீர்
ஜலம்
அம்பு
அறல்
அனலாற்றி
இவ்வாறான் பெயர்கள் நீருக்கு வழங்கப்படுகின்றன. என்பதை இதன் மூலம் அறியலாம்.