புதன், 12 அக்டோபர், 2022

Friendship Quotes

Quotes About Friendship In Tamil


Quotes about friendship in Tamil that will help to understand the value of friendship. This post includes friendship Tamil quotes in the Tamil language.

Quotes About Friendship In Tamil
உண்மையான நட்பின்
மதிப்பு அதனை இழக்கும்
வரை பலரும் உணர்வதில்லை.
அதை இழந்த பிறகு தான்
அதன் மதிப்பை
பலரும் உணர்வார்கள்.

நம்மை பற்றி நமக்கே
தெரியாத விடயங்களை
கூட தெரிந்து வைத்திருக்கும்
அன்பு தான் இந்த நட்பு.

நண்பர்களை பற்றி
பெருமையை மற்றவர்களிடம்
பேசுங்கள் நண்பர்களின்
குறையை ஒரு போதும்
மற்றவர்களிடம் பேசாதீர்கள்.

நாம் கண் கலங்கும் போது
வரும் கண்ணீரை
துடைப்பது நட்பு அல்ல…
நமக்கு மறுமுறை கண்கள்
கலங்காமல் தடுப்பது
தான் நட்பு…!

நாம் உயரத்தில் இருக்கும்
போது வருபவர்கள்
எல்லாம் நண்பர்கள்
கிடையாது.. நம்
வறுமையின் போதும்
உடன் இருப்பவர்கள்
நட்பின் இலக்கணம்.

உண்மையான நட்பு
எந்த சூழ்நிலையிலும்
மற்றவர்கள் முன்
உன்னை விட்டுக்
கொடுக்காது.


அர்த்தமற்ற வாழ்க்கையை
அர்த்தமாக மாற்றும் சக்தி
அன்புக்கு உண்டு.. அந்த
வாழ்க்கையை அற்புதமாக
மாற்றும் சக்தி
நட்புக்கு உண்டு.

நீ துரோகிகளை
சந்திக்கும் போது தான்
சிறந்த நட்பின்
அருமையை
நீ உணர்வாய்.

மனதில் ஏற்படும்
காயங்களுக்கு நண்பன்
மருந்தாக இருப்பான்.
ஆனால் நண்பன்
ஏற்படுத்தும் காயத்திற்கு
மருந்து இல்லை.

நட்பையும்
மகிழ்ச்சியையும்
இரட்டிப்பாக்க அதை
திருப்பி நட்பிடமே
கொடுத்து விடுங்கள்.

சந்தோஷமான நேரங்களில்
சேர்ந்து சிரிப்பது மட்டும்
நட்பு அல்ல.. துக்கமான
நேரங்களிலும் சேர்ந்து
கண்ணீர் விடுவது
தான் நட்பு.


நட்பை விலை கொடுத்து
வாங்க முடியாது அது
தகுதி உடையவர்களுக்கு
சரியான நேரத்தில்
கிடைத்து விடும்.

நம் வாழ்க்கையை
இலகுவாக வாழ நாம்
செய்யும் தவறுகளை
திருத்தவும் நம்மை சரி
செய்யவும் நட்பு வேண்டும்.

சிறந்த நண்பன்
உனக்குள் இருக்கும்
சிறந்தவற்றை உலகிற்கு
கொண்டு வர
உறு துணையாக
இருப்பான்.

நட்பு கவிதை வரிகள் தமிழ்

நட்பு கவிதை வரிகள் தமிழ்

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். நட்பு கவிதைகள் பலராலும் விரும்பப்படும் கவிதை.

காரணம் நட்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு உண்மையான நட்பு ஆயிரம் உறவுகளுக்கு மேலானது.

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ்
சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்.

வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்.

ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்.

நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.

நட்பின் துரோகம் மிகக்
கொடூரமானது எக்காரணம்
கொண்டும் அதை செய்து
விடாதீர்கள் அதற்கு
வாழ்நாளில் பாவ
மன்னிப்பே கிடைக்காது.


நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.

நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.

நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக்க முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.

நீ செய்த தவறை
சரி என நியாயப்படுத்தும்
நட்பை விட நீ செய்தது
தவறு தான் என்று
சுட்டிக்காட்டும் நட்பே
சிறந்த நட்பு.

நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்.


அழகான நட்பு கவிதைகள்

அழகான நட்பு கவிதைகள்

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள் தொகுப்பை இந்த பதிவில் நீங்கள் காணலாம். பலரும் விரும்பும் ஒரு உறவு தான் நட்பு.

நல்ல நண்பர்கள் கிடைத்தவர்கள் எல்லாம் வாழ்வின் அதிஷ்டசாலிகள் என்று சொல்லுவார்கள். நல்ல நண்பர்கள் நம் குடும்பத்தில் ஒருவர்.

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள்
ஒவ்வொருவருக்கும்
கடவுள் துணை இருக்கின்றார்.
அந்த கடவுளின்
வடிவம் தான் நட்பு.

உன் நண்பன் உன்னுடன்
இருந்தால் இந்த உலகம்
உன் காலின் கீழ் இருக்கும்.

நல்ல நட்பிடம் எவ்வளவு
வேண்டுமானாலும்
கோபத்தை காட்டி
சண்டை போடலாம்.
ஆனால் ஒரு நிமிடம்
கூட சந்தேகம் எனும்
கொடிய விஷத்தை
உள்ளே விட கூடாது.

நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..

எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.


நட்பு என்பது வெறும்
வார்த்தை அல்ல அது
நம் உணர்வோடும்
உயிரோடும் கலக்கும்
அழிக்க முடியாத
பொக்கிஷம் அது.

வாழக்கையை புரட்டி
பார் நீ நண்பர்களுடன்
இருந்த தருணம் தான்
நீ உன் வாழ்க்கையில்
சந்தோசமாக இருந்த
தருணமாக இருக்கும்.

நட்பில் உண்மையான
நம்பிக்கைக்கு உரிய
நண்பனாக இரு அல்லது
எதிரியாக கூட இருந்து விடு
ஆனால் ஒரு போதும்
துரோகியாக மட்டும்
இருந்து விடாதே.

நண்பன் வெற்றி பெற்றால்
அவன் என் நண்பன் என்று
பெருமை கொள். நண்பன்
தோல்வி அடைந்தால் நான்
உன் நண்பன் என்று அவன்
அருகில் நிற்க மறந்து விடாதே.

நம் வாழ்வு திசை மாறும்
என தெரிந்தும் சில நட்புடன்
பயணிக்க மனம் விரும்பும்.


நட்பை தேவைக்காக
நேசிப்பதை விடுத்து
உண்மையாக நேசித்து
பார் நீ உயிர் வாழும் வரை
அந்த நட்பு உன்னை விடாது.

நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.

Friendship Kavithaigal in Tamil

Friendship Kavithaigal in Tamil

நட்பு பற்றிய கவிதை வரிகள் (Friendship Kavithaigal in Tamil) பற்றிய கவிதை தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். நம் வாழ்வை மன நிறைவுடன் வாழ தேவையான உறவு தான் இந்த நட்பு.

எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையான ஒரு நல்ல நட்பு நம்மை கைவிடாது. நட்பின் பெருமையை யாரும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

நட்பு பற்றிய கவிதை வரிகள் – Friendship Kavithaigal in Tamil
நீ மேலே உயரும் போது
நீ யார் என்று உன்
நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கீழே விழும்
போது தான் உன்
உண்மையான நண்பர்கள்
யார் என்பதை நீ அறிவாய்.

உறவுகளில் தூரத்து
சொந்தம் போல நட்பில்
தூரத்து நட்பு இல்லை.
காரணம் நட்பு எனும்
உறவுக்குள் வந்த பின்
யாரும் தூரமில்லை.

கணவனுக்கு சிறந்த
தோழியாக மனைவியும்
மனைவிக்கு சிறந்த
தோழனாக கணவனும்
இருக்கும் போது வாழ்க்கை
சிறப்பானதாக அமையும்.

தவறுகள் செய்யும் போது
தட்டிக் கேட்கும் நட்பு தான்
உண்மையான நட்பின்
அடையாளம்.

உண்மையான நட்பை
பெறுவது என்பது
கடினமான விடயம் தான்
ஏனென்றால் வரையறை
அற்ற அன்பை கொண்டது
தான் உண்மையான நட்பு.


அருகில் இருக்கும் போது
நட்பின் அருமை சிலருக்கு
புரிவதில்லை. நட்பை
பிரிந்து இருக்கும் போது
தான் அதன் ஆழம் புரியும்.

கனவில் காண்பது அல்ல
நட்பு. மனதில் வைத்து
மரணம் வரை நேசிப்பது
தான் நட்பு. உண்மையான
நட்பு உயிர் உள்ள வரை
உன் கூடவே வரும்.

உறவுகள் உன் முகத்தில்
தெரியும் அழுகையை
கண்டு ஆறுதல் சொல்லும்.
நட்பு உன் அழுகைக்கு பின்
இருக்கும் காரணத்தை
கண்டறிந்து சரி செய்யும்.

உண்மையான உறவுகள்
கடவுள் தந்த வரம் என்று
சொல்லுவார்கள். ஆனால்
உண்மையான நட்பு
கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்.

உன் நண்பனை உனக்கு
பிடிக்கவில்லை என்றால்
எதிரியாக கூட மாறி விடு.
ஆனால் துரோகியாக
மாற நினைத்து கூட
பார்த்து விடாதே.


நட்பு பொன்மொழிகள் – Tamil Thoughts

நட்பு பொன்மொழிகள் – Tamil Thoughts
NATPU PONMOZHIGAL

நட்பு பொன்மொழிகள் – Tamil Thoughts என்ற இந்த தலைப்பில் நட்பை பற்றிய பொன்மொழிகளை பார்க்கலாம். உலகில் உள்ள உயிரங்கள் எல்லாமே நட்பை நேசிப்பவை தான்.

ஒவ்வொரு உறவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் அப்படி ஒரு புனிதமான உறவு தான் நல்ல நட்பு.

நட்பு பொன்மொழிகள் – Tamil Thoughts
நண்பனின் ரகசியத்தை
வாழ் நாள் வரை
காப்பாற்றுபவனே
நல்ல நண்பன். ஒரு
சிறந்த நட்பு ஒருவனுக்கு
வாழ் நாள் முழுவதும்
கை கொடுக்கும்.

சிறகு கிடைத்தால்
உயர பறப்பது மட்டுமல்
நட்பு. துக்கங்களையும்
ஒன்றாக சுமப்பதும்
நட்பு தான்.

எதிர்பார்த்து உறவாடுகின்ற
உறவுகளுக்கு மத்தியில்
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் உறவாடுவது
நட்பு மட்டுமே.

வாழக்கை வாழ ஒரு
பிறவி போதும் ஆனால்
நல்ல நட்போடு வாழ
பல பிறவி வேண்டும்.

சரியான நேரத்தில் உதவி
செய்பவனே சிறந்த
நட்பின் புரிதல். அந்த
நட்பை எந்த நிலையிலும்
ஒதுக்கி விடாதே.


நண்பர்களிடம் தேவைக்காக
பழகாதே அப்படி பழகும்
நண்பர்களை விட பழி
தீர்க்க துடிக்கும்
எதிரி மேலானவன்.

இதயத்திற்கும் உண்மையான
நல்ல நட்புக்கும் வித்தியாசம்
கிடையாது இரண்டுமே
நமக்காக துடிப்பைவை.

உறவுகள் யாரும் இல்லை
என்று வருந்தாதே. நல்ல
நண்பர்கள் எல்லா
உறவுகளையும் விட
மேலானவர்கள்.

உன் நிழல் இன்றிக் கூட
நீ நடந்தாலும் உன் நல்ல
நண்பர்கள் உன்
கூடவே வருவார்கள்.

நட்பும் ஒரு பொக்கிஷம்
தான் நீ அதற்கு
உண்மையாக
இருக்கும் வரை.


நட்பு என்பது மேகம்
அல்ல நொடிப் பொழுதில்
களைந்து போக. இது
வானம் போன்றது
வாழ் நாள் முழுவதும்
கூடவே இருக்கும்.

உன்னை விழ வைத்தவர்கள்
முன்னே தலை நிமிந்து
எழ வைக்கும் நல்ல நட்பு.

கூடவே பிறக்கவே இல்லை
என்றால் கூட ஒன்றாகவே
துடிக்கும் உண்மையான
நண்பர்கள் வாழ்வில்
கிடைத்த அதிஷ்டம்.

ஆயிரம் உறவுகள் நம்மை
தேடி வரும் ஆனால்
தேடினாலும் கிடைக்காத
பொக்கிஷங்கள்
நல்ல நண்பர்கள்.

தோழி கவிதைகள் வரிகள்

தோழி கவிதைகள் வரிகள்
THOZHI KAVITHAI IN TAMIL


நட்பு எனும் உறவு புனிதமானது அதில் ஆண் பெண் வேறுபாடுகள் கிடையாது. இந்த பதிவில் “தோழி கவிதைகள் வரிகள்” காணலாம்.

தோழி கவிதைகள் வரிகள்
தோழி கவிதைகள்
Thozhi Kavithai In Tamil
தோழி கவிதை வரிகள்
யாரோ அவளோ தெரியவில்லை..
அன்பை தந்தால் தேவதையாய்
சிரிக்க வைக்கும் அவள் மனதை
வெறுக்க வைத்தேன் வார்த்தைகளால்..
விலகி செல்வேன் பலநேரம்
தேடி வந்தாள் தோழியாக..
இவளை பிரிந்த ஒரு நிமிடம்
பிரிந்து விட்டது என் இதயம்.

நட்புக்கு ஏது ஆண்பால் பெண்பால்
நாம் எப்போதும் நண்பர்கள் தான்.

அவள் வாழும் வாழ்க்கை வேறு
நான் வாழும் வாழ்க்கை வேறு..
காலங்கள் மாறிவிட்டது சூழ்நிலைகள்
பதில் சொல்லிவிட்டது..
ஆனாலும் இறக்கும் வரை
அவள் என் தோழி என்பதை
இருக்கும் வரை
உரைக்காமல் என்னால்
ஒரு நொடியும் இருக்க முடியாது..
என்றும் அவள் தான்
என் உயிர் தோழி.!

அன்பிற்காக ஏங்கிய தருணம்
அழகாய் வந்து முன் நின்றாள்..
தோழியென என் கரம் கோர்த்து
தோல்விகளை தூரம் துரத்தினால்..
காதலுக்கும் நட்புக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தினாள்..
தாயாகவும் தந்தையாகவும் இருந்து
தலைசிறந்த மனிதனாய் மாற்றினாள்..
அப்போது உணர்ந்தேன் தெய்வம்
அவள் வடிவிலே அருகில் இருப்பதை.!

தோழி நீ இருந்தால் போதும்
என்று கூற ஒரு தோழி
இருந்தால் போதும் நம்முள்
ஒரு புது நம்பிக்கை தோன்றி விடும்..
எதையும் எதிர்பார்க்காதவளாய்
தோழியாய் தோழனாய்
தந்தையாய் தாயாய்
நம்மை கடைசிவரை பார்க்கும்
கண்கள் அவளுடையது..
தோழி நீ மட்டும் போதும்
என் வாழ்வில்
நான் வெற்றியை காண..!

தமிழ் பேச தெரிந்த நாள் முதலாய்,
தாய்ப்பாலை நான் மறந்த
நாள் முதலாய்.. என்னோடு
நடைபோட்டு என்னோடு
கைகோர்த்து சென்ற நாள்
முதலாய்..
பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்ட
மற்றொரு தாயவள் என் தோழி..!

Thozhi Kavithai In Tamil

ஒன்றாக பள்ளி சென்றோம்
ஒரே தட்டில் பல கைகள் வைத்து
உணவு உண்டோம்..
அம்மா அப்பா வைத்த
பெயர்களை மாற்றி ஆளுக்கொரு
அடைமொழி பெயர் வைத்து
அதிகாரத்துடன் அழைத்திடுவோம்..
அடித்து விட்ட ஆசிரியரை
ஆசை தீர திட்டித் தீர்த்து மனதுக்குள்ளே
மகிழ்ந்து கொள்வோம்..
வழுக்கி விழுந்த வாய்க்காலும்
இன்று வகை வகையாய்
நம் கதைகள் சொல்லும்..
அழகான ஆனந்தத்தின்
அசைக்க முடியாத
நினைவுகள் இவை.!

பழக இனியவள் என்றும்
அழகுப் பெண் அவள்..
வார்த்தைகளில் அவள் வசந்தம்
வாழும் வரை அவள் என் சொந்தம்.
என் இதயத்தில் என்றும்
நிறைந்திருப்பால்
என் அன்பு தோழியாக.!

இனிய என் உயிர் தோழி
கற்புதானடி நம் நட்பின் வேலி..
தொப்புள் கொடி சொந்தமில்லை..
சிறுவயதில் தொடர்ந்த பந்தம் இல்லை..
மழைகால வானவில் போல
ஒரு நேரத்தில் வந்தாய்..
மனம் மகிழும் பாசம்
அதை தூரத்தில் இருந்து தந்தாய்..
பனித்துளி கரைந்து விடும்
சூரிய உதயத்தில்..
பாசமுள்ள தோழி நீ இருப்பாயடி
என் இதயத்தில்.!

பாசம் காட்டி இதயத்தின்
பக்கத்தில் அமர்ந்தவளே..
நேசம் கொடுத்து
அன்பு நெஞ்சில் நிறைந்தவளே..
என் இதய உறவே..
அன்பு நீடிக்கும் வரை
நமக்குள் இல்லை பிரிவுகள்
என்றும் வராது
நம் உறவில் முறிவுகள்.!

வாழ்வில் வந்த சொந்தங்களில்
புதுமையாய் வந்த பந்தம் அவள்
இரத்த உறவென்று சொல்ல
என் உடன் பிறப்பும் இல்லை அவள்..
முகம் பார்த்து பழகும் காலம்தனில்
அகம் பார்த்து பழகும்
புதுமையானவள் என் தோழி.!


உங்கள் உயிர் தோழியுடன் இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.