திங்கள், 6 மார்ச், 2023

தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல!

Hello Doctor மருத்துவம்
தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல! 

தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உணவுப்பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. 

அந்தவகையில், தயிருடன் பழங்கள் குறிப்பாக மாம்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது. 

தயிர் குளிர்ச்சியானது, மாம்பழம் சூடானது. இது இரண்டும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. 

மேலும் எண்ணெய் உணவு பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை ஏற்படும்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் !!*

Hello Doctor மருத்துவம்
*உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் !!*


சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் 1 இதை இரண்டையும் சுடுநீரில் போட்டு முதல் நாள் இரவே ஊறவைத்து விடுங்கள்.

பிறகு அதை மறுநாள் காலையில் எடுத்து அரைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முக பருக்கள் நீங்கும்.

தீ காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்த வெட்டி வேரை அரைத்து தீ காயம் உள்ள இடத்தில் போட்டு வந்தால் தீ காயம் விரைவில் குணமாகும்.

அதுமட்டுமில்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் அரைத்த வெட்டி வேரை வெந்நீரில் கலந்து குளிக்க வேண்டும்.

செவ்வரளி பூ வின் ஏராளமான மருத்துவ பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*செவ்வரளி பூ வின் ஏராளமான மருத்துவ பயன்கள்!!*


நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.

அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.

தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலையின் மருத்துவ பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்

*தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலையின் மருத்துவ பயன்கள்!!*


ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.

மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்!!*


சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும் ஆவாரம்பூவின் மருத்துவக் குணங்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும் ஆவாரம்பூவின் மருத்துவக் குணங்கள்!!*

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.