செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in Tamil

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in Tamil

காதல் இருமனம் ஒன்றாக சேர்வது மட்டும் கிடையாது. காதலில் நிறைய வகை உள்ளது - வலி, வேதனை, துக்கம், பிரிவு, மகிழ்ச்சி என்று அதற்கு நிறைய அர்த்தம் உள்ளது. காதலர் தினமானது ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று. அதாவது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை லவ்வர்ஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உள்ளது.

உலக காதலர் தினத்தை முன்னிட்டு இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி "ரோஸ் டே" கொண்டாடப்படுகிறது. காதலுக்கு அடையாளமாக திகழும் ரோஜாவை நினைவுப்படுத்தும் வகையில் இந்நாளில் உங்களுக்கு காதலி அல்லது காதலனுக்கு ரோஜா தின வாழ்த்துக்களை அனுப்பி காதலை வெளிப்படுத்துங்கள். மேலும் மிக ஆழமாக காதலித்து வாழுங்கள். உங்களின் காதல் வாழ்க்கை வெற்றிப்பெற வாழ்த்துக்கள். Happy Rose Day.

Happy Rose Day 2023

Happy Rose Day 2023
உங்க லவ்வருக்கு ரோஸ் டே கவிதைகள்!

காதல் என்றாலே ஒரு மென்மையான விஷயம். அதனால் தான் காதலை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ரோஜா தினத்தில், ரோஜாப் பூக்களை தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள். இது வெறும் பூக்களின் பரிமாற்றம் மட்டுமல்லாமல், காதலின் பிணைப்பைத் தெரிவிக்கும் அன்பின் குறியீடாகவும், இரு இதயங்களின் காதல் கதை தொடக்கமாகவும் விளங்குகிறது. காதல் கதையின் தொடக்கமாக அமைவதால் தான் காதல் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

எத்தனையோ வண்ணங்களில் ரோஜா பூக்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு அம்சத்தைக் குறிக்கிறது. அதாவது, சிவப்பு கலர் ரோஜாக்கள் காதல் மற்றும் ஒருவரின் அன்பிம் வெளிபாடாக அமைகிறது. இந்த அழகான நாளை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு ரோஸ் டே வாழ்த்துக்களையும் சேர் செய்து அன்பை வெளிப்படுத்துங்கள். 


ரோஸ் டே வாழ்த்துக்கள் கவிதைகள்:

உன் காதல் எனும் வாசனையால்
என் வாழ்க்கையை நிரப்பி விட்டாய்..
ரோஜா தின வாழ்த்துகள்!

ரோஜா இல்லாத தோட்டமும்,
நீ இல்லாத என் வாழ்க்கையும் வறட்சிதான்..
ஹேப்பி ரோஸ் டே மை ரோஸ்!

அன்பில் அரவணைப்பும் காதலும் பெரிதுதான்..
ஆனால் அதைவிடவும் பெரிது இந்த ரோஜாக்களே-
ஹேப்பி ரோஸ் டே!

உன் அழகின் முன்னால்
ஆயிரம் ரோஜாக்களும் ஒன்றுமில்லை..
ஹேப்பி ரோஸ் டே!

கடவுளிடம் நான் கேட்டதென்னவோ
ரோஜாப் பூக்கள்தான். அவரோ உன்னையே
எனக்கு அளித்து விட்டார்.. ஹேப்பி ரோஸ் டே!