வியாழன், 9 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

உறவென்று நமக்கு
ஆயிரம் பேர் இருந்தாலும்..

பிடித்தவர் ஒருவருக்காக 
மனது 
ஏங்குவது தான்..

உண்மையான 
அன்பு!

ஒன்றை இழந்தால் தான்
ஒன்றை பெற முடியுமாம்..

ஆனால்
பிடித்ததை இழந்து விட்டு
வேறு எதை பெற்றாலும்
மனம் அதில் ஒட்டுவதில்லை!

பாடுபட்டு உழைத்ததை பக்குவமாய் சேமித்துக் கொள்ளுங்கள்..

எந்நிலையிலும் எச்சியிலையாய் தூக்கியெறிப்படுவோம் என்பதை மறக்காமல்!

😢😢😢

காசை வைத்து கர்வம் கொண்டு ஆடாதே..

கடவுள் நினைத்தால் கண் இமைக்கும் நேரத்தில் அத்தனையும் கரைந்து போகும் என்பதை மறக்காதே!

😈😈😈

சேகரிப்பது தவறில்லை..

அதை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென நினைப்பது தவறு..

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மறக்காமல்!

🥕🥕🥕

மூச்சுக்காற்றை வெட்டி வீழ்த்திய பிறகு..

உயிர் மூச்சை பாதுகாக்க ஆக்ஸிஜன் தேடுவதில் பலனில்லை!

😰😰😰

துரோகத்தால் அன்பான மனங்களை கொன்ற பிறகு..

போலியாக வாரி அணைத்துக் கொள்வதில் பலனில்லை!

😭😭😭

இரட்டை ஜடை, ஒற்றை ஜடை ஆகும்போது..

பெண்களின் அழகில் பாதி குறைந்து விடுகிறது!

😜😜

ஆழமாய் நேசிக்கும் உயிரிடம் அழகை தேடாதே..

அழகை தேடும் உயிரிடம் உண்மை இருக்காது என்பதை மறக்காதே!

மகிழ்ச்சியானவர்களிடம் இருப்பதெல்லாம் சிறப்பானது இல்லை........  
அவர்கள் கிடைப்பதை சிறப்பாக்கி கொள்கிறார்கள்..........!!

திங்கள், 6 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

சற்று
செவியுற்று நில் காதலி...!

க்கும்
உன் சலிப்பும்
இனிக்கவே செய்கிறது
இந்த
பரபரப்பனுக்கு

காதல்மீது
எனக்கு
காதலில்லையோயென்ற
உனது 
ஐயங்களுக்கு
ஈர முத்தங்களைவிட
ஏது சாட்சி...?

கனவுகளும்
காலமும் 
என்னை மென்று தின்று
அவைகள்
மீட்சி கொள்கின்றன

யாவும்
கைகூடும் காலம்
அதோ
பார்வைக்கு பக்கத்திலேயே...!

சந்தேகம் தொலை
எந்நேரமும்
நீயே என்
நிம்மதியின் ஊற்றலை...!

எத்தனைதான்
கணக்குப்போட்டு பார்த்தாலும்
காதலைவிட
பெரிய பூரிப்பு
பூமியில்
இல்லவேயில்லை...!

பெரும் திரளை
வாய் பிசைந்துகொள்ள 
வைப்பதைத் தவிர
புகழுக்கு வேறு
புளகாங்கிதம் எதுவுமில்லை...!

இப்படியே இரு
எழிலாளினியே...!

நொபெலுக்கு
சிபாரிசு செய்கிறேன்
இத்தனை
எழிலான குறுங்காவியத்தை
எவர்
எழுதியிருக்கக்கூடும்
இதழ்களில்...?

நீ
சொல்லும் பொய்யும்
நேசத்தினால்
நேசத்திற்காகவே என்றறியும்போது
மேலும் 
காதல் பொலிவுறுகிறதடா
நேசக் கள்வனே...!

நீ
என்ன செய்தாலும்
நியாயம் கற்பிக்கும்
என்
படுபாச மனதிற்கு
நெடுநீள தித்திப்பை
கெடுவின்றியளிக்கும்
குறும்ராட்சனே...!

உன்னை
ருசிக்க ருசிக்க
அத்தனை திட்ட வேண்டும்
நீ
இனிக்க இனிக்க ரசிப்பதை
என்
புலன் ஐந்தும் 
பசிக்கப் பசிக்க புசிக்கவேண்டும்...!

என்னை
கொன்றுக் கொன்று
உன்னை
உயிர்ப்பிக்கும்
என்ன காதலடா இது...?

ஏதாே ஒரு
இனம் புரியாத வலி
உயிர் முழுவதிலும்
உலா வந்து காெண்டேயிருக்கின்றது...!

உன் பெயரை
சத்தமாக 
கூறிக்காெண்டே....!

காெஞ்சம் 
இரு காதலி

பிரபஞ்சம் முழுவதும்
பிரகடனம் செய்து விட்டு
வருகிறேன்...! 

உன் நாணத்தை
காதலின் குறியீடாக...!

யாரடி நீ...?

பெண்ணுருவில்
அப்படியே
என்னைப் பிரதிபலிக்கிறாய்...!

என்
காலம் முழுவதும்
பெண்கள்
கடந்து சென்றிருக்கிறார்கள்
பூக்களையும்
புளகாங்கிதத்தையும்
எறிந்து சென்றவர்களே
ஏகம்...!

நீயென்ன
தீப்பிழம்பை தின்று வளர்ந்தவளா...?

அக்னிச்சுவாலைகளை
அள்ளி வீசுகிறாய்
எரிமலையின் மீதே...!

உன்
சின பிடிவாதம்
ஆண்களின்
சிதையுற்ற சிதில்கள்மீதே

உன்
ஆண்சாரம் கேட்டு
என் வீரம்
கர்வம் கொண்டது

ஆண்
தொலைந்த தெருக்களில்
கம்பீரம் 
தேடுகிறாய் நீ...!

சோம்பிகள் மட்டுமே
சுற்றியிருப்பதால்
வீம்பன்களுக்கு
விலாசம் கூட இல்லையென்கிறாய்...!

எதிர்கொண்டவனெல்லாம்
உன்னிடை
தாண்டாதவனாகிப் போனதால்
உன்னைத் தாண்ட
ஆணே
இல்லையோயென்று
ஆலோசிக்கிறாய்...!

பிழைவாதம்
பிரியமானவளே

சபல விகாரங்களை
மட்டுமே
சந்திக்க நேர்ந்தது
சூழ்நிலைச் சதியாக இருக்கலாம்

கடுமையை விடவும்
இனிமையிருக்கிறது
உன்னிடம்
உன் வன்மையை 
வென்றவனுக்கே
அது சொந்தமென்ற
வரையறையும் வைத்திருக்கிறாய்...!

வீழ்த்துபவனின்றி
வீறுகொண்டு நிற்கிறாய்

நீ வீழ்வாய்
ஏனெனில்
நீ வெல்லப்படுவதை
விரும்புபவள்
நீ வீழும்போது
அங்கேயொரு
ஆணின் கைத்தாங்கலிருக்கும்
உன்
கனிவை கோதிவிட....!

இத்தனை வளமாய்
வெறுமையை
பயிர் செய்துவிட்டு
அறுவடையையும்
கொள்முதலையும்
ஏனடா
என்னையே
கொள்ளச் செய்கிறாய்...?

வலிகளுக்கு
எத்தனை வழிகளிருக்கிறதோ
அத்தனையையும்
என் பக்கமே
திறந்துவிடும்
உன் இரக்கத்தில்
காதல்
தற்கொலைக்கு தயாராகிறது...!

எல்லா
தற்கொலைக்கு பின்னும்
கொலையாளி ஒளிந்திருப்பான்
நீயும்
கொலையாளியா காதலா...?

பற்று
சற்று இற்றுப்போகும் 
போது
தொற்றுத் தொற்றாய்
தொற்றிக்கொள்கின்றன
சற்றும் யோசிக்காத
முற்றிய
வெக்கை நோய்கள்...!

கதகதப்பாய்
இருக்கக்கூடும் காய்ச்சல்
வெதுவெதுப்பு தானே
காரணம்
வெதும்புவதற்கும்...!

தெளியாத நிலைக்கு
தீட்டுவதும்
தேய்ப்பதும்
ஒன்றாகவே உணரப்படுகிறது
பாகுபாடு
எவ்வாறு புரியும்
பன்றிக்கு
நந்தவனத்தில் நடந்தாலும்...?

குருவியின் தனிமை
ஆகாயத்தை
அநாதையாக்கியது...!

அங்கீகாரமென்பது
உலகத்தின்மீது வைக்கப்படும்
அடுத்த பரிந்துரை
சிபாரிசை 
ஏளனம் செய்கிறது
தரம்...!

அழுதுவிடாதே
உன் கண்ணீரை
உலகம்
அத்தனை நேசிக்கிறது
மீண்டும் மீண்டும்
நச்சரிக்கும் 
விருப்பம் எப்போதும்
பிடிவாதம் செய்யும்...!

உறுதியாக சொல்லி வை
நீ 
சொன்னாலும்
வந்துவிடக் கூடாதென்று
கண்ணீருக்கு...!

எனக்கும்
கவிதைக்கும் இடையில்
வாழ்க்கை
நாடகமாடுகிறது
ஒரேயொரு ஆறுதல்
அரசன் 
வேடமேயில்லை...!

புத்தனின்
கனவில் குதித்த
சித்தார்த்தன் கேட்டான்
உங்களின்
துறக்கமுடியாத ஆசைதானே
துறவு...?

பதில்
கூறவேயில்லை புத்தன்
சித்தார்த்தனை
சித்தார்த்தன் 
துறக்கும் வரை...!

கனவு 
துறந்தபோது
புத்தன் 
ஜீவ முக்தியில்
ஞான ஆசைகள்
சீடர்களாய் சூழ்ந்து நின்றன...!

சமயங்களில்
பெண்கள் பாறைகள்தான்
ஆயின்
இளக்குவதற்கு
எதற்கு நீங்கள்
பாரை தேடுகிறீர்கள்...?

அச்சமயங்களில்
உயிர் வருடி
மனம் கோதிவிடுங்கள்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
உயிர்நிலையையே
தளர்ந்த நிலமாக்கித் தருவார்கள்...!

சமுத்திரம் வேண்டி
அவர்கள்
சண்டையிடுவதில்லை
கரிசனமான
திவலை ஈரத்தில்
திராணி நனைந்து போகிறார்கள்...!

எரிமலையாய் 
இருக்க நேர்ந்தாலும்
பெண்மை 
எண்பது சதவீதம் தாய்மையானதே...!

செல்லப்பிராணிக்கு
கொடுக்கப்படுகின்ற
அன்புகூட
இல்லத்தரசிகளுக்கு
கிடைக்காமல் போவது
ஆண்களின்
மூடத்தனமேயன்றி வேறென்ன...?

மரத்தைவிட
பெருத்திருந்தாலும்
மங்கையர்களென்றும்
பாசக்கொடிகளே...!

யாவற்றையுமளித்து
ஏதோவொன்றிற்காக
வேள்வியிருக்கும் 
அவர்களுக்கு
நாம் ஏன்
யாவதுமாய் ஆவதேயில்லை...?

ஏனடா
உன்னை
கொடுமை படுத்தாத
என்
நினைவுகளையும்
கூறுபோட்டுக் கொல்கிறது
உன் நினைவுகள்...?

வதைபடும்
என் உயிரில்
குளிர்காய்கிறாய்
இருந்தும்
எரிய எரிய நேசிக்கிறேன்
உன்னை
எறிய முடியாமல்...!

என்
சாம்பல் மீதும்
நீயே 
பூத்து நிற்பாய்
ஆம்பலாய்
அப்போதும் உன்னை
நானே தாங்கி நிற்பேன்
நீ
வலியுணராவண்ணம்...!

ஏனெனில்
நானுன்னை
காதலிக்கிறேன்...!

எல்லாம்
கவிதைக்குள்
குதித்துவிடுவதில்லையென்பதை
கவிதை
எத்தனை இசைவாய்
இயம்புகிறது...!

வழிவது
நிரம்பியதன் மிச்சமா...?

நிரம்ப வேண்டியும்
சமயத்தில் 
வழிகிறது உச்சம்...!

ஆயுளின்
அன்புப் பொதியையெல்லாம்
ஒரு மணியினுள்
என்மீது
உருட்டி விட்டு
உள்ளார்ந்து மகிழ்கிறாய்...

தாங்கும்
வல்லமை தருவாயா
உன்
அகன்ற மார்பின்
கதகதப்பில்
அணைத்துக் கொண்டபடி...!

ஆத்மாவையோ 
மனதையோ
ஏதோவொன்று 
ஆட்கொள்ளுமென்றால்
அதனுள் 
சிறையிருக்க
உயிர் சிநேகிக்கிறது...!

அது
நீயென்றான போது
ஆயுள்கைதியாவதில்
ஆவல் 
கூடுகிறது...!

சிறையிருப்பதும்
சுகமாகத்தானிருக்கிறது
பொருள் புரியாத
கவிதையின் கரு மாதிரி...!

நீ
எங்கே எங்கே
என்று கேட்டு
நச்சரிக்கும்
உன் நினைவுகளுக்கு

யாரைக் காண்பித்து
சமாதானப்படுத்த...?

திறந்தவெளி
தென்றலாய் வந்தாய்

மனம் முழுவதும்
மையல் காெண்டாய்

சிறுபிள்ளையாய்
செல்லச் சண்டைகள் புரிந்தாய்

எது கசந்ததாே
தூரத்திற்கு அருகில்
இடை வெளி
நீட்டிக்காெண்டாய்...?

புதன், 1 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23

வயல்வெளியை 
மேலும் 
பசுமையாக்குகிறது
அவள் சிரிப்பு.. 💕

உன்னை காணாது என் கண்கள் காத்திருக்க..💖
உன் நினைவாலே என் இதயம் பூத்திருக்கும்..💕🌹

நொடியில் நூறு கவிப்பாடி 
காதலை நேர்த்தியாய் சொல்லுதடி கண்மணி உனதிரு கண்கள்..💕

வெண்பஞ்சை 
தேனில் நனைத்து பிரம்மன் உருக்கொடுத்த
பூவிதழ் உன்னிதழ்.. 💕

என்னவள்
வாசிக்காத கவிதை அவள்
கண்ணுக்கு தெரியாத காற்று அவள்
கனவில் தினம் வருபவள்
என்னை எனக்கே காட்டியவள்
உலகமே நீ தான் என்று உணர்த்தியவள்
தினம் தினம் அவளை தேடிகொண்டே
அலைகிறேன் என் நினைவுகளில்..💕

பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றி கொண்டிருப்பது தெரியாத பொழுது..😋

நான் உன்னையே சுற்றி வருவது மட்டும் உனக்கு எப்படி தெரியும்..💕

முப்பொழுதும் 
இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது 
வந்து செல்..💜

என் வறண்ட உள்ளம் 
வசந்தம் ஆகும்..😋

உன் வரவை கண்டு..💕

என் இதயம் தேடும் அன்பில் என்றைக்குமே முதலிடம் நீ மட்டுந்தான்..💕

கிளையில் 
துளிரும் இலை போல 
உன் அன்பில் நானும்
துளிர்கிறேன்.. 💕

யார் நடந்தாலும் 
கூடவே வரும்..😎

யாருக்கும் பாரபட்சம்
பார்ப்பதில்லை..😇

நிலா🌒

என்ன மாயம் செய்தாயோ தெரியவில்லையே உன்னுடைய கண்சிமிட்டும் வித்தையில் மயங்கி உன் முன்னே இன்று அடங்கி தானே போனேன் என்னவளே…💕

கூச்சம் கொள்ளாதே எனக்குரியவளே
கூடி விடு என்னோடு
கடைசி வரை கூட வருவேன்
உன்னோடு உன்னவன் 😘😘😘

❤️🌹❤️நீ பார்க்கும் விழியில் நீலவானத் தாரகை🌹❤️🌹

❤️🌹❤️நீ செவ்விதழ் சிரிப்பில் முத்துப் புன்னகை🌹❤️🌹

❤️🌹❤️நீ நடந்தால் ஒரு தேவதை 
என் சொல்லால் நான் உன்னைத் தொட்டால்🌹❤️🌹

🌹நீ ஒரு கவிதை🌹

நீ என்பது 
என்னையும் சேர்த்துதான்..💕

நான் வெறும் 
உடல் மட்டும் தான்..💕

நீ தான் என் உயிர் பேரன்பே..💕

உன் மென்னிதழ் பார்த்து பூக்கள் தம் இதழ்களை மூடிக் கொள்ளாதா என்ன.. 😘❤️

உயிரை
உருமாற்றும்
உளவியல் நீ.. ❤️

உணர்வை
பரிமாற்றம்
கலை நயங்கள் நீ.. 😘❤️

வீழ்ந்து 
கிடந்தாலும்
என்னை 
தோல்வியடையவிடுவதில்லை
உன் மென்மை.. 💕

உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே..❤️

அவனோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்..💕

மனதில் 
இருக்கும் ஆயிரம் வலிகளுக்கு மருந்தாய் அமைகிறது..❤️

அவளின் 
ஒற்றை வார்த்தை..💕

மிச்சமேதுமின்றி
மொத்தமாகவே பருகிக்கொள் என்னை..😉

உன் தே(ன்)நீர் இதழ்களால்..😘💋