Happy_Womens_day_|_Girls_Motivational_Stlkavithai
Happy_Womens_day_|_Girls_Motivational_Stlkavithai
*உலகிற்கே நீதான் விழுது!*
உலகிற்கே நீதான் விழுது
பெண்ணே....!
உன் சிறப்புரைக்க
ஒரு நாள் போதுமா...?
உன் சிறப்புகளை
வார்த்தைகளால்
எழுதிடவும் முடியுமா....?
எங்கெங்கு காணினும்....
பல இல்லங்களிலும்....
நல்ல உள்ளங்களிலும்...
நிலைத்திருந்து
உலகினை வழி நடத்து....!
ஒரு நாளில் மட்டும்
உன் புகழ் பேசிவிட்டு...
மற்ற நாளெல்லாம்
உன்னை ஏசிடும்....
மனிதரை உதாசினப்படுத்து....!
உன் வழியில் நடந்து
உனக்கான வரலாறை
நீ எழுது.....!
உலகுள்ள நாள். வரைக்கும்...
அன்பில் அனைவருமே
உம்மை தொழுது....
உள்ளங்களை நீ உழுது....
பார்த்திடுவாய் நன்றாய் பழுது...
துயரத்தில் ஏனோ அழுது...
உலகிற்கே நீதான் விழுது....!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
நித்திரை
கலைந்ததும்
வரும் முதல் நினைவே ....!
ஆறுதல்!!!
நாமாக இருந்தாலும்
நடப்பதை தீர்மானிப்பது
நாமாக இருக்க இயலாது.. 💐
விலை
தெரியாதவர்களுக்கு...
அவர்கள் உயிராய்
நேசிப்பவர்கள்
கண்ணீர் சிந்தும்
போதுதான் தெரியும்...💕
பெண் - அழகில் ஒரு தேவதை
பெண் - அறிவில் ஒரு மந்திரி
பெண் - அதரவில் ஒரு உறவு
பெண் - வெறுப்பில் ஒரு நெருப்பு
பெண் - வெற்றிக்கு ஒரு மாலை
பெண் - தோல்விக்கு ஒரு பள்ளம்
பெண் - நட்பில் ஒரு நேர்மை
பெண் - கண்டிப்பில் ஒரு ஆசிரியார்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...
அன்புடன் மகளிர் தின வாழ்த்துக்கள்
பயன்படுத்தாமல்..
அவளும்.. இரத்தமும்
சதையும் கொண்ட
சகமனுசிதான்..
அவளுக்கும்
வலிக்கும் என நினைத்தாலே
போதும்..
பெண்மை
நன்றியுடன் வாழும்!
பெண்கள் தினம்!
இவள் மிகமிக புனிதமானவள்..
இவள் சாமரசம் வீசும் தேவதை..
இவள் தாய்மையின்
ஒப்பில்லா அழகு..
மனைவியாக தோளில்
சாயும் தேவதை..
இவள் அவ்வப்போது ஒரு குழந்தையென சிணுங்குவாள்..
தேவதை அவள்.. தவம் கொண்ட தேவதை அவள்..
தேவதை அவள்.. தன்னை மறந்த தேவதை அவள்..
தேவதைகள் தின வாழ்த்துக்கள்!
💗💗💗
