வெள்ளி, 7 ஜூலை, 2017

முருகன் கோவில் வரலாறு


முருகன் கோவில் 

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.

பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.

கோயில் வரலாறு:

நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

மலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.

தலச் சிறப்புகள்:

குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிடம் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே, “மூன்றாம்படை வீடு” என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.

சுற்றுலா தலம்:

பழனி முருகன் முதலில், பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஒரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.

தண்டாயுதபானி - பெயர் காரணம்:

இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

வெள்ளியங்கிரி மலை வரலாறு


வெள்ளியங்கிரி மலை வரலாறு

சிவபெருமான் அமர்ந்த மலை....!!

🌹 🌿 🌹 :::::::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::::::  🌹 

வெள்ளியங்கிரி மலை🌿🌹

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது.

சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.

இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார்.

இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.

இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.
இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர்.

கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்

சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது.

மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.

ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது.

மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.

1.முதல் மலை          :பிரணவ சொரூபம் வெள்ளிவிநாயகர் உறைவிடம்.

2.இரண்டாம் மலை :சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை.

3.மூன்றாம் மலை    :மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை.

4.நான்காம் மலை    :அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்.

5.ஐந்தாம் மலை       : விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை.

6.ஆறாம் மலை        :ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை.

7.ஏழாவது மலை     :சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி
ஆண்டவர்)

பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

திருச்சிற்றம்பலம்🌿🌹

திடியன் கோவில்

திடியன் கோவில்
மதுரையை சுற்றியுள்ள பழமை மாறாத கிராமங்களின் வரிசையில், உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கிராமமும் ஒன்று. கிராமத்திற்கு செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் பசுமை படர்ந்த வயல்வெளிகள் நம்மை பாசமாய் வரவேற்கிறது.
நகர்புறத்தின் சுவடுகளே இல்லாத அமைதி நிறைந்த சொர்க்கபூமியாக திகழும் இந்த கிராமத்தின் நடுவே, லிங்க வடிவில் அமைந்திருக்கிறது ராமர் மலை. இலங்கையில் ராவணனுடன் போர் புரிந்து கோபக்கனலுடன் வந்த ராமர், இந்த மலையில் உக்கிர கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம்.
108 பவுர்ணமிகளில், இம்மலையை சுற்றி கிரிவலம் வந்தால், அங்கு உலாவும் 'கட்டை விரல் சித்தர்'களை பார்க்க முடியுமாம்..! அது என்ன கட்டைவிரல் சித்தர்கள் என நாம் கேட்கும் முன்...
'பல நுாற்றாண்டுகளாக மரணமில்லாமல் வாழ்ந்த சித்தர்கள் வயது முதிர்வு காரணமாக கட்டை விரல் அளவிற்கு குறுகி விட்டதால், 'கட்டை விரல் சித்தர்' என அழைக்கிறோம்; அது மட்டுமல்ல மலையின் நடுப் பகுதியில் குறுகிய குகை ஒன்றும் உள்ளது, அதில் சித்தர்கள் தினமும் வந்து போகிறார்கள்,' என்கின்றனர், கிராம வாசிகள்.
அதை கேட்டு, சந்தேகப்பார்வை பார்த்த நம்மை, 'நீங்கள் நம்பவில்லை என்றால் இதோ பாருங்கள்... அடிக்கடி ஆள் நடமாட்டம் இருந்ததற்கான அடையாளமாக, குகை பாதை வழுவழுப்பாக இருக்கிறது...' என அதை அவர்கள் காட்டிய போது, நமக்கே புல்லரித்தது.
எட்டு யுகங்கள் கண்டதாக கூறப்படும் இம்மலை, தங்கம், வெள்ளி, மண் என பல வடிவம் கண்டு, கலியுகத்தில் கல்லாக உருமாறியதாகவும், கிராமத்தினர் நம்புகின்றனர்.
அடுத்த இடத்திற்கு நகர்வதற்கு முன், மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைபற்றி விசாரித்தோம். திருவண்ணாமலை கோயிலுக்குரிய அனைத்து சிறப்பும், அக்கோயிலுக்கும் இருக்கிறதாம். அதனால், 'தென் திருவண்ணாமலை' என்ற பெயரிலும், அதை அழைக்கின்றனர். அங்குள்ள கிராம கோயில் பூஜாரிகள் அழகுபிள்ளை, பாண்டி கூறுகையில், '14 சித்தர்களுடன், தட்சிணாமூர்த்தி இக்கோயிலில் வீற்றிருக்கிறார்.
இது போன்ற அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் கிடையாது. கோயிலின் தல விருட்சமாக 'நெய் கொட்டான் மரம்' உள்ளது.
மரத்தின் இலைகளை பறிக்க யாருக்கும் அனுமதியில்லை. கீழே உதிர்ந்த இலைகளை எடுத்து, மீண்டும் மரத்தின் கீழே போட்டு 'இலை அபிஷேகம்' செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
கைலாசநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம், ராமனால் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. மலை ராமர் கோயிலுக்கு காவல் தெய்வமாக நல்லுாத்து சோணை கருப்பணசாமி அடிவாரத்தில் அருள்புரிகிறார். தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழ்பவர்களை யாராவது துன்புறுத்தினால் 'ராமா நீ பார்த்துக்கோ' என அவனிடம் பொறுப்பை விட்டு விடுவோம். ஆலயங்கள் நிறைந்த திடியன் கிராமத்திற்கு வந்து சிவனை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை,'என்றனர்.
திடியன் கிராமத்தில்,ஒவ்வொரு தகவலும், புதையல் போலவும், அதே நேரத்தில் புதிரானவையாகவும் இருந்தன. ஆனாலும், இயற்கையின் எழிலோடு விளையாடும்
அந்த கிராமத்தின் அழகை, பார்ப்பதே அழகு.

சதுரகிரி மலை

சதுரகிரி
  
        சிறுவயது முதலே கேட்ட ஏழு மலைகள், அடர் வனம், சித்தர்கள் உலவும் பூமி, நீர் வீழ்ச்சிகள் என பெரியவர்கள் கூற கேட்டு அது ஓர் அதிசிய தீவாகவே என் மன சுவற்றில் பதிந்து போனது.
வாருங்கள்.! சதுரகிரிக்கு பயணப்படலாம் !!
There were many miracles listed in it below.,
* சித்தர்களை பலர் அங்கு கண்டதாகவும் அவர்களின் கண்கள் மிக பிரகாசமாக ஒளி வீசும் வண்ணமாகவும் அவர்கள் ஏழு முதல் எட்டு அடி உயரம் இருப்பதாகவம் கூறுகின்றனர்
*பக்தர் ஒருவர் '"சுவாமி தரிசனத்திற்கு தான் சன்னதி வெளியே நின்று கொண்டிருந்தபோது தற்சமயம் வயது முதிரந்த குருக்கள் ஒருவர் பூஜை செய்து அவர் நெற்றியில் தீருநீரு இட்டு மீண்டும் சன்னதி உள்ளே சென்றவர் வெளியே வரவேவில்லையென்றும் உள்ளாகவே மாயமாகி போனதையும் கண்டுள்ளார்.
*முழு பௌவர்னமி மற்றும் அமாவசை தினத்தில் சித்தர் ஒருவர் வானிலிருந்து ஒளியுடன் வருவதாகவும் #தவசிபாறையில் இறங்கி உலவுவாதகவும் சுவடிகள் கூறுகின்றன.
* மேலும் ஓர் அமாவசை இரவன்று மகாலிங்கம் சன்னதிக்கு சிலர் தனிமையில் சென்றவேளையில், குழுவாக சித்தர்கள் வட்டவடிவில் அமர்ந்து மந்திரங்களை ஈசன் முன்னிலையில் ஓதி கொண்டிருந்தாக கூறுகின்றனர். மேலும் அவர்களில் ஒருவர் கண்இமை கூட இமைக்கவே இல்லையென்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓரே குரலில் துல்லியமாக மந்திரம் ஓதியதாகவும் கூறுகின்றனர்.
◆ சதுரகிரி பயணம் ◆ :
----------------------------------
                மக்கள் அனைவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய புனிததலம் இது. ஏழு மலை கடந்து மகாலிங்கத்தை தரிசிக்கும் போது கிடைக்கும் அருளுக்கும் மனநிறைவுக்கும் அளவே இல்லை.
அடர்வனத்தின் உள்ளே சுமார் ஏழு கிமீ மேலாக நடந்து செல்ல வேண்டும். வழியில் வனவிலங்குகளையும், பள்ளங்களையும், நீரோடைகளையும் கவனமாக கடந்து செல்லல் வேண்டும். மலை உச்சியை அடையும் வரை உண்ணவோ பருகுவோ ஏதும் கிடைக்காது இயற்கை நீரை தவிர. அமாவசை பௌவர்னமி தினங்களை தவிர வனத்தினூடே வழி தவறி போனாலும் உதிவிக்கு யாரும் இருக்கமாட்டார்கள். மலை உச்சியை அடைந்த பின் #கஞ்சிமடம் என ஒன்று உள்ளது அங்கு உண்ண உணவு இலவசமாக வழங்கபடுகிறது வந்தடைந்த களைப்பிற்கு அங்கு உண்ணும் உணவு தேவாமிர்தமாக இருக்கிறது.
◆வெளியூர் நண்பர்களுக்கான பயனதிட்ட உதவி :
---------------------------------------------------------------------
      *ஶ்ரீவில்லிபுத்தூர் நகரை அதிகாலை அல்லது மாலை பொழுதில் வந்தடையும் படி திட்டம் கொள்ளுதல் நன்று.

* இரவு வருவதாக இருப்பின் பேருந்து நிலையத்தில் இருந்து 500மீ தொலைவில் ராஜா லாட்ஜ் பட்ஜெட் அறைகள் சிறப்பாக கிடைக்கும். மேலும் பல விடுதிகளும் உள்ளது. ரயில் பயனமாக இருப்பின் ஆட்டோ மூலம் 50ரூபாயில் நகருக்குள் வர வேண்டும்.
*அதிகாலை கிளம்பி வத்றாப் பேருந்தில் ரூ.10 டிக்கெட் எடுத்து 40நிமட பயணத்தில் வத்றாப் சென்றடையலாம். அங்கிருந்து share auto மூலம் 15 நிமடங்களில் மலை அடிவாரமான தானிபாறை சென்றுவிடலாம்.
◆ செய்வன/ செய்யகூடாதவை ◆
-------------------------------------------------
* ஶ்ரீவியில் இருந்து கிளம்பும் முன் மிதமான காலை உணவு எடுத்து கொள்க. பொங்கல் வடையை தவிர்க்கலாம். ஏனெனில் மலை அடிவாரத்திலே களைப்பு ஏற்படுத்தி விடும்.
*எவ்வளவு விரைவாக தானிபாறை செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவிடுவது நலம். சூரியன் மேல் சென்றுவிட்டால் மலை ஏறுவது சிரமமாக போய் விடும்
*வலது புறத்தில் உயரமான பாறைகளும் இடதுபுறம் 300அடி பள்ளதாக்கும் வழி நெடுக உள்ளது. காற்று சுழற்சியும் பல இடங்களில் குறைவாக இருக்கிறது.
*உடைமைகள் சுமைகளை குறைத்து கொள்க. வாட்டர் பாட்டில் குளுக்கோஸ் உங்கள் பட்டியலில் இருக்க வேண்டும்.
*மலைக்கு செல்லும் வழியில் குறைந்தது 100 சந்நியாசிகளை காண வேண்டி வரும்.இரவல் வேண்டுவர். மணமிருந்தால் முன்னதாகவே சில்லறைகளாக மாற்றி கொள்ளலாம்.
*கையில் walking stick கைத்தடி எடுத்து செல்வது உதவியாகவே இருக்கும்.
*தவசிபாறை பகுதி செல்வதாக இருந்தால் இரண்டு நாட்கள் தங்க வேண்டி இருக்கும்.
◆ தாணிபாறை அடிவாரம் ◆
---------------------------------------------
    தானிபாறை அடிவாரத்தை அடைந்தவுடன் அங்கு நிறைய கடைகளும் பழ விற்பனையாளர்களும் இருப்பர். ஒரு வேளை நீங்கள் அதிக சுமை எடுத்து வந்திருந்தால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பும் பொழுது வாங்கி செல்லலாம்.